35 வயதிற்கு பின்பு, கருவுறும் திறன் கணிசமான அளவு குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. வாழ்வின் நவீன போக்குகள், குழந்தைப் பேற்றை பெண்கள் தாமதப்படுத்துவதை கட்டாயப்படுத்தியுள்ளன. ஆகையால் வயதுக்கேற்ற கருச்சிதைவுகளும், மலட்டுத்தன்மையும் மிகவும் சாதாரணமாக ஆகிவிட்டது.
உங்கள் வயது அதிகரிக்கும் போது ஏன் கருத்தரித்தல் கடினமாகிறது?
நீங்கள் 35 வயதிற்கு மேற்பட்டவராக இருந்தால், கருத்தரிக்க முயற்சித்த ஆறு மாதங்களுக்குப் பிறகு, உங்கள் மகப்பேறு மருத்துவரிடம் நீங்கள் கலந்தாலோசிக்க வேண்டும்.
- முதல் காரணம், உங்கள் கருப்பையில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான முட்டைகளோடு தான் நீங்கள் பிறந்துள்ளீர்கள் என்பதே. வயதாக ஆக, உங்கள் கருமுட்டைகளின் எண்ணிக்கையும், தரமும் குறைந்துபோய், நீங்கள் கருவுறும் திறன் குறைந்தவர்களாக ஆகிவிடுவீர்கள். 45 முதல் 55 வயதை நீங்கள் எட்டியவுடன், உங்கள் கருப்பை, முட்டைகள் உற்பத்தி செய்வதை நிறுத்திவிடுவதால், உங்கள் மாதவிடாய் நின்றுபோகிறது.
- இரண்டாவது காரணம், உங்களுக்கு வயதாக ஆக, கருப்பையில், நார்த்திசுக் கட்டிகள், கருப்பை அகப்படலம், உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு போன்ற மருத்துவ சிக்கல்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது. அதனால், கருத்தரித்து, அதை முழுமையான கர்ப்ப காலத்துக்கு வளர்ப்பது உங்களுக்கு மிகவும் கடினமாகி விடுகிறது.
- மேலும், உங்களுக்கு வயதாக ஆக, உங்கள் பாலியல் செயல்பாடும் குறைந்துபோக ஆரம்பிக்கிறது.
- உங்கள் வயது 35-க்கும் அதிகமாக இருந்தால், உங்கள் குழந்தைக்கு குரோமோசோம் பாதிப்புகள் உண்டாகும் அபாயம் அதிகரிக்கிறது. அதனால், நீங்கள் கருவுற்ற பிறகு, உங்கள் மருத்துவர், டவுன்ஸ் சிண்ட்ரோம், எட்வர்ட் சிண்ட்ரோம் போன்ற சிக்கல்கள் அக்கருவில் இருக்கின்றவா என்பதை அறிய ஒருசில மரபணு பரிசோதனைகளைப் பரிந்துரைப்பார்.
- உங்களுக்கு வயது அதிகமாக இருந்தால், கருத்தரித்து 38 வாரங்கள் முடிவடையும் முன்பாக, முன்கூட்டியே குழந்தை பிறக்கும் ஆபத்தும், குழந்தை இறந்தே பிறக்கும் ஆபத்தும் அதிகரிக்கிறது.
- சிஸேரியன் பிரசவத்தின் காரணமாக உருவாகும் குடல் மற்றும் சிறுநீர்ப்பை போன்ற உள்ளுறுப்புகளில் ஏற்படும் நோய்த் தொற்றுகள் மற்றும் காயங்களுக்கான வாய்ப்புகள், இருபதுகளில் இருக்கும் பெண்களை விட, முப்பதுகளில் இருக்கும் பெண்களுக்கு அதிகமாக இருக்கின்றன.
நீங்கள் 35 வயதிற்கு மேற்பட்டவராக இருந்து, ஆறு மாதங்கள் வரை பாதுகாப்பற்ற பாலியல் உடலுறவில் ஈடுபட்ட பின்னும் கருத்தரிக்கவில்லை என்றால், நீங்கள் மலட்டுத்தன்மை அறியும் சோதனையை மேற்கொள்ள வேண்டும். நீங்கள் கர்ப்பமாகி, உங்கள் வயது 35-க்கும் அதிகமாக இருந்தால், உங்கள் மருத்துவரை வழக்கமாகவும், தேவையானால் அடிக்கடியும் சந்தித்து, தக்க ஆலோசனைகளைப் பெற வேண்டும்.
English | Tamil | Hindi | Telugu | Bengali | Marathi |
0 reviews