Sorry, you need to enable JavaScript to visit this website.
Search
Not a member? Register here
Share this Article
X
 Nurturing Your Body

உங்கள் உடலைப் பராமரித்தல்

(0 reviews)

தாய்ப்பாலூட்டுவதற்கு உங்கள் உடலைத் தயார் செய்வதற்காக, உங்கள் மார்பகத்தின் உள்ளேயும், அதைச் சுற்றிலும் சில மாற்றங்கள் ஏற்படுகின்றன. பல தாய்மார்கள் அனுபவிக்கும் கர்ப்பத்திற்கான முதல் அறிகுறிகளில் ஒன்று, அவர்களின் மார்பகத் திசுக்களில் ஏற்படும் மாற்றமாகும்.

Tuesday, December 5th, 2017

எனினும், அதுபற்றிக் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. நீங்கள் அறிந்து கொள்ளவேண்டியது அதன் பின்னால் இருக்கும் அறிவியலை மட்டுமே.

ஹார்மோன்கள் மார்பகங்களில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன.

கர்ப்பகாலத்தின் பிற அறிகுறிகளையும் மாற்றங்களையும் போலவே, மார்பகத்தில் உண்டாகும் மாற்றங்களும் ஹார்மோன் மாற்றங்களினால் ஏற்படும் விளைவுகளாகும். கர்ப்பகாலத்தில், ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் போன்ற ஹார்மோன்கள் தாயின் உடலில் அதிக அளவு உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த ஹார்மோன்கள் மார்பகங்களின் பால் சுரக்கும் சுரப்பிகள் வளர்ந்து கிளைவிடுவதற்கு காரணமாகின்றன. அப்போதுதான் அவை பால் உற்பத்தியைத் தொடங்கி சிசுவிற்குப் தாய்ப்பால் ஊட்டுவதற்குத் தயார் நிலைக்கு வரும். இதுதான் கர்ப்ப காலத்தில் மார்பகங்களில் ஏற்படும் மாற்றத்துக்கான காரணம்.

மார்பகங்களில் ஏற்படும் பொதுவான மாற்றங்கள்.

மார்பகங்கள் வலித்தல், மார்பகங்கள் பெரிதாதல் மற்றும் முலைக்காம்புகளில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவையே கர்ப்பகாலத்தில் மார்பகங்களில் ஏற்படும் பொதுவான மாற்றங்கள் ஆகும். எனினும், பல சந்தர்ப்பங்களில், மார்பகங்களில் எந்த மாற்றங்களும் இல்லாமலும் போகலாம் அல்லது மிகச் சிறிய மாற்றங்கள் மட்டுமே ஏற்படலாம்.

மார்பகங்கள் வலித்தல்: கர்ப்பகாலத்தின் முதல் மூன்று மாதங்களில் உங்கள் மார்பகங்களில் வலியோ அல்லது இளக்கமோ உண்டாகலாம். சில பெண்களுக்கு இது  வரவிருக்கும் மாதவிடாயின் அறிகுறியாகவும் இருக்கலாம் என்பதால், அவர்கள் இந்த உணர்வைப் புறக்கணிக்கக்கூடும். நீங்கள் உங்கள் மார்பகங்களைத் தொடும் போது அவற்றில் ஒரு இளக்கம் இருப்பதை நீங்கள் உணரலாம். உங்களுக்கு அப்போது கடுமையான வலியும் வரலாம். இருப்பினும், இந்த இரண்டு அறிகுறிகளும் சாதாரணமாக ஏற்படுபவை என்பதாலும், முதல் மூன்று மாதங்களில் அவை அதிக தீவிரத் தன்மையுடன் இருக்கும் என்பதாலும் அந்தப் பிரச்சனைகள் பற்றி அதிகம் கவலைப்பட ஒன்றுமில்லை.

முலைக்காம்புகளில் மாற்றங்கள்: உங்கள் கர்ப்பம் வளரத் தொடங்கும்போது, முலைக்காம்புகள் பெரியதாகவும், கருமையாகம் ஆகலாம். உங்கள் மார்பகப் புடைப்புகளில் மான்ட்கோமேரி’ஸ் டியூபர்கூல்ஸ் எனப்படும் சிறுசிறு மேடுகளையும் அல்லது பருக்கள் போன்ற வெள்ளைப் பகுதிகளையும் கவனிக்க கூடும். இவை நீங்கள் தாய்ப்பாலூட்டும் போது உங்கள் குட்டிக் குழந்தை எளிதில் பாலை உறிஞ்சுவதற்கான உயவு எண்ணெயை வழங்கும் சுரப்பிகள் ஆகும்.

மார்பகங்கள் பெரிதாதல்: முதல் மூன்று மாதங்களின் இறுதியிலோ அல்லது இரண்டாவது மூன்று மாதங்களின் தொடக்கத்திலோ உங்கள் மார்பகங்கள் பெரிதாக ஆரம்பிப்பதை உணர்வீர்கள். மார்பகத்திற்குள் இருக்கும் திசுக்கள் குழந்தைக்கு தாய்ப்பாலூட்டுவதற்கான தயாரிப்பில் இருப்பதே இதற்குக் காரணம்.

திரவக் கசிவு: கர்ப்பகாலத்தின் இறுதிப் பகுதியில், சில மாதங்களுக்கு, சில தாய்மார்களின் மார்பகங்களில் திரவக்கசிவு உண்டாவதையோ, முலைக்காம்புகளில் ஒரு படலமோ அல்லது மூடுபொருளோ படிவதையோ காணலாம். அதனால் கவலைப்படத் தேவையில்லை. இவ்வாறு சுரக்கும் திரவத்திற்கு கொலஸ்ட்ரம் என்று பெயர். இது உங்கள் குழந்தைக்குத் தேவையான ஊட்டச்சத்தையும், நோயெதிர்ப்புத் தன்மையையும் மற்றும் பாதுகாப்பையும் வழங்கி உங்கள் சிசு இவ்வுலகில் தன் வாழ்வைத் துவங்க வழிவகை செய்யும் முதல் தாய்ப்பால் ஆகும். எனவே, கவலைப்பட வேண்டாம். மார்பகப் புடைப்புகள் வெளித்தெரியும் படி ஆனால், மார்பகப் பட்டைகளைப் பயன்படுத்துங்கள். அதன் மூலம், நீங்கள் வசதியாகவும் உணர முடியும்.

மார்பகங்களில் மாற்றம் ஏதுமில்லை: சில சந்தர்ப்பங்களில், உங்கள் மார்பகங்களில் எந்த மாற்றங்களும் இருக்காது. அல்லது மிகச் சிறிய மாற்றங்கள் மட்டுமே இருக்கும். அதனால் பயப்பட வேண்டாம்;  அது மிகவும் இயல்பான விஷயம் தான். அது வெற்றிகரமான கர்ப்பத்திற்கோ அல்லது தாய்ப்பால்  கொடுப்பதற்கான திறனுக்கோ எந்த பாதகமான விளைவுகளையும் கொடுக்காது.

மாற்றம் இயல்பானது என்பதால், அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

கர்ப்ப காலத்தில், நீங்கள் உங்கள் மார்பகங்களின் பராமரிப்பில் கூடுதல் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். நல்ல பொருத்தமான பிராக்களை அணிந்து மார்பகங்களுக்கு ஆதரவளிப்பது பயனுள்ள நடவடிக்கைகளில். நீங்கள் உடற்பயிற்சி செய்தால், ஸ்போர்ட்ஸ்-பிராவைப் பயன்படுத்துவதை உறுதிசெய்து கொள்ளுங்கள். எப்போதும் மென்மையான பருத்தினால் செய்யப்பட்ட பிராக்களையே பயன்படுத்துங்கள். செயற்கை இழை பாலியஸ்டரால் தயாராகும் பிராக்களை தவிர்க்கவும். அவை உங்கள் மார்பகங்களுக்குள் காற்றுப் பாய்வதை அனுமதிக்காது என்பதால், அதிக வியர்வை உண்டாகி உங்களுக்கு அசௌகரியம் உண்டாகலாம். மேலும், மிகவும் இறுக்கமான ஆடைகளையும் தவிர்க்கவும். இந்த கர்ப்பகாலத்தில் மார்பக விரிவாக்கம் காரணமாக உங்கள் மார்பகத்தின் சருமமும் விரிவடைகிறது. எனவே, வரித் தழும்புகள் ஏற்படுவதைத் தடுக்க மார்பகங்களை தினசரி ஈரப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் மார்பக சுகாதாரத்தின் மீது அதிக கவனம் செலுத்துங்கள். ஏனெனில், நீங்கள் தாய்ப்பாலூட்டும் போது உங்கள் மார்பகங்களில் இருக்கும் நோய்த்தொற்று உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தை பாதித்து விடலாம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், 

English | Tamil | Hindi | Telugu | Bengali | Marathi

Read more

Join My First 1000 Days Club

It all starts here. Expert nutrition advice for you and your baby along the first 1000 days.

  • Learn about nutrition at your own paceLearn about nutrition at your own pace
  • toolTry our tailored practical tools
  • Enjoy member only benefits and offersEnjoy member only benefits

Let's start this!

Related Content
Article Reviews

0 reviews

Still haven't found
what you are looking for?

Try our new smart question engine. We'll always have something for you.