இந்த சில நிமிடங்களை சிறப்பாகப் பயன்படுத்த நீங்கள் என்ன செய்யலாம்? பின்வருபவை அதற்கான சில குறிப்புகள் :
மருத்துவர் சந்திப்புக்கான அனுமதியை முன்பே பெற்றிடுங்கள்: அவசரகால தேவைகள் தவிர, மற்ற நேரத்தில் உங்கள் மருத்துவரை எப்போதும் முன் அனுமதி பெற்று பார்க்க முயலுங்கள்.
உங்களது அனைத்து மருத்துவ அறிக்கைகளையும் எடுத்துச் செல்லுங்கள்: மருத்துவரிடம் செல்லும்போது, உங்கள் மருத்துவ அட்டை, சோதனை அறிக்கைகள், மருந்துச் சீட்டுகள் ஆகிய ஆவணங்களை எப்போதும் எடுத்துச் செல்லவும்.
ஒரு பட்டியலை உருவாக்கி அதில் உங்கள் முக்கியைப் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளியுங்கள்: உங்கள் மருத்துவரிடம் ஆலோசிக்க விரும்பும் பிரச்சினைகள் அல்லது கவலைகள் பற்றி கவனம் எடுத்துக்கொள்ளுங்கள். அந்தப் பட்டியலில், உங்களைத் தொந்தரவு செய்யும் பிரச்சனைகளின் அளவைப் பொறுத்து, நீங்கள் விவாதிக்க விரும்பும் சிக்கல்களுக்கு முன்னுரிமை அளியுங்கள்.
உங்கள் அனைத்துவிதமான பிரச்சனைகளைப் பற்றியும் விவாதிக்கவும்: உங்கள் மருத்துவரிடம் உங்கள் எல்லாப் பிரச்சனைகளையும் பற்றிக் கலந்துரையாடுங்கள். சில விஷயங்கள் மிகச் சிறியதாக இருக்கலாம். ஆனால் அவை உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில் அதிக முக்கியத்துவம் கொண்டதாக அமைந்துவிடக் கூடும்.
உங்கள் மொபைல் தொலைபேசியை அணைத்துவிடவும்: உங்கள் சந்திப்பின் போது உங்கள் செல் தொலைபேசியை அணைத்துவிடுங்கள்.
உங்களுக்கான மருத்துவப் பரிசோதனைகள் அனைத்தையும் செய்துவிடுங்கள்: மருத்துவரைச் சந்திக்கும் முன்பாகவே, பரிந்துரைக்கப்பட்ட மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் ஸ்கேன்களைச் செய்துவிடுங்கள். இதனால், அவற்றுக்கான முடிவு அறிக்கைகளை உங்கள் மருத்துவரால் பார்க்க முடியும்.
உங்கள் மருத்துவரைச் சந்திப்பதற்கு முன்பாக, உங்களை முழுமையாக அதற்குத் தயார் செய்துகொள்ளுங்கள். இதனால் மருத்துவரிடம் ஆலோசிக்கும் சில நிமிடங்களை நீங்கள் சிறப்பாகப் பயன்படுத்திகொள்ள முடியும்.
English | Tamil | Hindi | Telugu | Bengali | Marathi |
0 reviews