Sorry, you need to enable JavaScript to visit this website.
Search
Not a member? Register here
Share this Article
X
Breastfeeding Positions

தாய்ப்பாலூட்டும் நிலைகள்

(0 reviews)

உங்கள் குழந்தையை வளர்ப்பதற்கு தாய்ப்பால் ஒரு இயற்கை வழி என்றாலும், அதை நீங்களும் உங்கள்கு ழந்தையும் இருவரும் ஒன்றாகக் கற்றுக்கொள்ள வேண்டும். இதை கற்க நேரம், பொறுமை மற்றும் நடைமுறை தேவைப்படும். உங்கள் குழந்தையை கையில் வைத்துகொள்ள பல்வேறு வழிகளில் பரிசோதனை செய்யவும்.

Tuesday, November 28th, 2017

தாய்ப்பாலூட்டும் நிலைகள் &இடங்கள்

உங்கள் குழந்தையை வளர்ப்பதற்கு தாய்ப்பால் ஒரு இயற்கை வழி என்றாலும், அதை நீங்களும் உங்கள் குழந்தையும் இருவரும் ஒன்றாகக் கற்றுக்கொள்ள வேண்டும். இதை கற்க நேரம், பொறுமை மற்றும் நடைமுறை தேவைப்படும்

மெதுவாகவும் அமைதியாகவும் தொடங்கவும்

உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் எது உகந்ததுஎன அறிய சிறிது நேரம் எடுக்கும். வெற்றி பெற பயிற்சியும் மற்றும் முறையான நிலைப்பாடும் தேவைப்படும்.

தாய்ப்பாலூட்டும் போது எப்படி உங்கள் குழந்தையை பிடிக்க வேண்டும்

நீங்கள் வெவ்வேறு தாய்ப்பாலூட்டும் நிலைகளைப் பரிசோதித்த பிறகு, உங்கள் இருவருக்கும் மிகவும் வசதியாக இருக்கும் நிலையை கண்டறிவீர்கள். நீங்கள் ஒவ்வொரு மார்பகத்தின் போதுமான மற்றும் சீரான அளவில் பாலுட்ட நிலைகளை மாற்ற விரும்புவீர்கள். முயற்சி செய்ய சில நிலைகள் இங்கே உள்ளன:

தொட்டில் பிடி

1. நிமிர்ந்து உட்கார்ந்து, உங்கள் குழந்தையை உங்கள் மடியில் வைத்து, உங்கள் முகத்தை பார்க்கும்படி வைக்கவும்.

2. உங்கள் குழந்தையின் தலை, முதுகு பின்புறம் மற்றும் கீழ்ப் பகுதியை உங்கள் கை வைத்து தாங்கி பிடித்து கொள்ளவும், பின்னர் உங்கள் மார்பகத்திற்கு அருகில் முகத்தை நகர்த்தவும்.

3. உங்கள் மார்பக காம்பினை குழந்தையின் வாய் அல்லது கன்னத்தில் தடவவும்

4. உங்கள் குழந்தை உறிஞ்சத் தொடங்கும் போது, உங்கள் மார்பகக் காம்பினை மற்றும் அதைச் சுற்றியும் போதிய அளவு வாயில் பிடித்து கொண்டதா என உறுதி செய்து கொள்ளுங்கள்.

கால் பந்து பிடி

நீங்கள் ஒரு அறுவைசிகிச்சை மூலம் பிரசவம் செய்திருந்தால், பெரிய மார்பகங்களைக் கொண்டிருந்தால் அல்லது இரட்டையருக்கு தாய்ப்பால் ஊட்டுபவராக இருந்தால், இந்த நிலை மிகவும் உதவியாக இருக்கும்.

1. உங்கள் கைக்குள் உங்கள் குழந்தையை பிடிக்கவும் (ஒரு கால்பந்து வீரர் தங்கள் கைக்கு கீழ் பந்தை சுழற்றுவதைப் போல).

2. உங்கள் கையினால் குழந்தையின் தலையையும் கழுத்தையும் பிடிக்கவும். அதன் கால்களைப் உங்களின் பின்புறம் இருக்கும் படி பிடிக்கவும்.

3. உங்கள் கைதாங்கலுக்கு ஒரு தலையணையை பயன்படுத்தவும், உங்கள் குழந்தையின் வாயை உங்கள் மார்பகத்திற்கு இயக்க உங்கள் மற்றொரு கையைப் பயன்படுத்தவும்.

பக்க வாட்டு முறை

இது குறிப்பாக உங்களுக்கு அறுவைசிகிச்சையினால் குழந்தை பிறந்திருந்தால் அல்லது பிரசவத்திற்கு பின் உங்களுக்கு புண் இருந்தால் பயனுள்ளதாக இருக்கும்.

1. நீங்கள் பக்க வாட்டில் படுத்து உங்கள் குழந்தையை உங்கள் பக்கம் பார்த்து பக்கத்தில் போட்டுக் கொள்ளவும்

2. உங்கள் குழந்தையின் தலையை உங்கள் இறக்கமான மார்பகத்தின் பக்கத்தில் வைக்கவும்.

3. உங்கள் மார்போடு இணைந்திருக்கும் போது, உங்கள் தலைக்கு உதவுவதற்காக உங்கள் கீழ் கையை பயன்படுத்தவும்.

4. நீங்கள் இந்த வகை பாலூட்டும் நிலையில் தூங்காதிருப்பதை உறுதி செய்யுங்கள்.

பொது இடத்தில் தாய் பாலூட்டுதல்

பொதுவாக ஒரு அமைதியான இடத்தில் உங்கள் சிறு குழந்தை, மற்றும் சிறிது வளர்ந்த குழந்தைகளுக்கு பாலூட்டும் போது குறைவாக கவனம் சிதறும். உங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது சாதாரண மற்றும் இயற்கையான விஷயம், உங்கள் குழந்தைக்கு எங்கே எப்போது தேவைபட்டாலும் தாய்பாலூட்டுவது உங்களின் சட்டபூர்வ உரிமை. பெரும்பாலான தாய்மார்கள் வெளியே செல்லும்போது எங்கே மற்றும் எப்போது குழந்தைக்கு வசதியாக பாலூட்டுவது என்பதை வரையறுத்து கொள்கிறார்கள். பொது இடத்தில் தாய்ப்பால் கொடுக்கும்போது நீங்கள் சங்கடமாக அல்லது சுய உணர்வு கொண்டவராக உணர்ந்தால், உங்கள் மார்பு மற்றும் குழந்தையை உங்கள் தோளில் மேல் ஒரு மென்மையான துணியினை பரப்பி மறைத்து கொள்ளவும்.

English | Tamil | Hindi | Telugu | Bengali | Marathi

Read more

Join My First 1000 Days Club

It all starts here. Expert nutrition advice for you and your baby along the first 1000 days.

  • Learn about nutrition at your own paceLearn about nutrition at your own pace
  • toolTry our tailored practical tools
  • Enjoy member only benefits and offersEnjoy member only benefits

Let's start this!

Related Content
Article Reviews

0 reviews

Still haven't found
what you are looking for?

Try our new smart question engine. We'll always have something for you.