உங்களுக்கு பின்வரும் அறிகுறிகள் தென்பட்டால், அது இயல்பான பிரசவத்திற்கு வழிவகுக்கும்
குழந்தையை பிரசவிப்பது பற்றி பயப்பட வேண்டாம். உங்கள் குழந்தையே அந்த சவாலுக்கு தயாராகிறது. பிரசவத்தின் போது ஆழ்ந்து சுவாசிப்பதும், கொஞ்சம் பொறுமையைக் கடைப்பிடிப்பதும் இந்தச் சவாலை சமாளிக்க உதவும்.
- குழந்தை கீழிறங்கி இடுப்புப் பகுதிக்கு நகர்ந்த பிறகு, வயிற்றின் எடை குறைந்தது போல் இருக்கும்.
- வழக்கமான வயிற்றின் உள்ளிழுப்புகள், இப்போது மிக ஆழமானவையாக இருக்கும்.
- முதுகின் அடிப்பாகத்தில் வலியும் வேதனையும் குறையாமல் தொடரும்
- சளி திரள்கள் வெளியேறும்
- நீர்க்குடம் உடையும்
ஒரு குழந்தை இப்படித்தான் பிறக்கிறது:
முதல் நிலை
முதல் கட்டம் பிரசவ வலியுடன் தொடங்கி கருப்பை வாய் திறந்த பின் முடிவடைகிறது. இந்த நிலை பொதுவாக 12 முதல் 19 மணி நேரம் வரை நீடிக்கும். நீங்கள் பிரசவத் தேதியை நெருங்கும்போது, உங்கள் குழந்தையின் தலை கீழ்நோக்கித் திரும்பி, அதன் முகம் உங்கள் முதுகு பக்கம் நோக்கி இருக்கும். எனினும், எப்போதாவது ஒரு குழந்தையின் முகம் தாயின் வயிற்றுப் பக்கம் நோக்கியும் இருக்கலாம். அப்படி இருந்தால், உங்களுக்கு கடுமையான முதுகுவலி ஏற்படும். இந்த நேரத்தில் உங்கள் கருப்பையின் வாய் சில சென்டிமீட்டர்கள் நீள்வதால், உங்கள் வயிற்றின் உள்ளிழுப்புகள் மிக ஆழமானவையாக இருக்கும். வயிறு உள்ளிழுக்காமல் இருக்கும் நேரம் குறைவாகவே இருக்கும்.
இரண்டாம் நிலை
கருப்பை வாய் முழுமையாகத் திறக்கும் இந்தக் கட்டத்தில் தான் குழந்தை பிறக்கிறது. இது 20 நிமிடங்கள் முதல் 2 மணி நேரம் வரை நீடிக்கிறது. இந்த நிலையில், ஒரு தாய் குழந்தையை யோனிக் கால்வாயை நோக்கி தள்ளுகிறாள். அப்போது குழந்தையின் தலை முதலில் வெளிவருகிறது. பின்னர் மீதமுள்ள உடல் வெளிவருகிறது. குழந்தை பிறந்தவுடன், தொப்புள் கொடி வெட்டப்படுகிறது.
மூன்றாம் நிலை
பிரசவ வேதனையின் மூன்றாவது மற்றும் இறுதிக் கட்டத்தில், குழந்தை பிறந்த பிறகு, கருப்பை சுருங்கி, நஞ்சுக்கொடி வெளிவரும். பிரசவமான உடனேயே, கருப்பை சுருங்க ஆரம்பிக்கிறது. இந்த சுருங்குதல் 5 முதல் 30 நிமிடங்களுக்குள் முடிகிறது. இந்தக் கட்டத்தில் நீங்கள் திடீர் நடுக்கங்களையும், ஒருவித குலுக்கத்தையும் உணரக்கூடும்.
சில மருத்துவ நிலைமைகளில், உங்கள் குழந்தையைப் பிரசவிக்கும் பொருட்டு, நீங்கள் சி-வெட்டு அல்லது சீசேரியன் எனப்படும் பிரசவச் செயல்முறைக்கு உட்பட வேண்டியிருக்கும்.
உங்களது நீண்ட காத்திருப்பு இத்துடன் முடிகிறது. உங்கள் அற்புதமான குட்டி அதிசயத்தை இப்போது நீங்கள் கைகளில் ஏந்தலாம்.
English | Tamil | Hindi | Telugu | Bengali | Marathi |
0 reviews