Sorry, you need to enable JavaScript to visit this website.
Search
Not a member? Register here
Share this Article
X
 The food you should stay away from

நீங்கள் விலகி இருக்க வேண்டிய உணவுகள்

(0 reviews)

கர்ப்ப காலத்தில் இந்த உலகில் உள்ள ஒவ்வொருவரும் உங்களை அதிகமாக உண்ண அறிவுரை கூறுவார்கள். கர்ப்ப காலத்தில் உங்கள் உடலின் தேவை அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை மற்றும் நீங்கள் நன்றாக சாப்பிட வேண்டும். இருப்பினும், அதிகமாக உண்ணாதீர்கள். நன்றாக சாப்பிடுங்கள், ஆனால் புத்திசாலித்தனமாக, உங்களையும் உங்கள் குழந்தையையும் வடிவில் வைத்திருக்குமாறு உண்ணுங்கள். கர்ப்ப காலத்தில் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நீங்கள் உண்ண நீண்ட உணவுப் பொருட்களின் பட்டியலைக் காணலாம். இருப்பினும், நீங்கள் கர்ப்பமாக இருக்கும்போது உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் தீங்கு விளைவிக்கும் சில உணவுப் பொருட்கள் உள்ளன. இவை மூளை வளர்ச்சிக் குறைபாடு, உடற்குறைபாடு உள்ள சிசு, தாமதமான வளர்ச்சி, குறைபிரசவம் , குறைந்த எடை உள்ள குழந்தைகள், மற்றும் கருச்சிதைவைக் கூட ஏற்படுத்தலாம். அச்சப்படாதீர்கள். என்ன சாப்பிட வேண்டும், என்ன சாப்பிடக் கூடாது என்பதை தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். கர்ப்ப காலத்தில் மகிழ்ச்சியாக உண்பதற்காக சில குறிப்புகள்.

Tuesday, November 28th, 2017

தவிர்க்க வேண்டிய உணவுகள்

பச்சையான இறைச்சி சமைக்காத பச்சையான இறைச்சியையும் சுஷி போன்ற கடல் உணவுகளையும் உண்பதைத் தவிர்த்திடுங்கள். ஏனெனில் இது, லிஸ்டீரியா மற்றும் சால்மோனெல்லா நச்சுத்தன்மையை உங்களுக்கு அளித்து கருச்சிதைவை கூட ஏற்படுத்தலாம். லிஸ்டீரியா சிசுவின் ரத்தத்தை விஷமாக்கலாம் என்று தெரியவந்துள்ளது.

டெலி இறைச்சி  டெலி மாமிசமானது லிஸ்டிரியா பாக்டீரியாவால் மாசுபட்டிருக்கலாம், இது கருச்சிதைவு அல்லது அசைவில்லாத பிறப்பை ஏற்படுத்தலாம். அந்த ஹாட் டாக்கை  தவிர்க்க முடியாவிட்டால் அது நன்கு சூடாகும் வரை மீண்டும் சூடு படுத்துங்கள்.

குளிரூட்டப்பட்ட பேட்ஸ் அல்லது இறைச்சி பூச்சுகள் லிஸ்டீரியா கலப்படம் இருப்பதே இவையும்  தவிர்க்கப் பட வேண்டியதற்கான காரணம். பதப்படுத்தப்பட்ட அல்லது நிர்ணயிக்கப்பட்ட தேதிக்குள் உள்ள பதிப்பை மட்டும் சாப்பிடுவதே பாதுகாப்பானது.

பச்சை முட்டை இவை சால்மோனெல்லாவைக் கொண்டிருக்கலாம். பச்சை முட்டையைக்  கொண்டிருக்கும் உணவுகளான வேகவைக்காத கேக் மாவு, வேகவைக்காத குக்கீ மாவு, வீட்டில் செய்யும் ஐஸ்கிரீம், கஸ்டர்ட்ஸ், மயோனைஸ், பதப்படுத்தப்படாத முட்டை முனையம் அல்லது ஹாலண்டாஸ் சாஸ் அத்துடன் சில சீசர் சாலட் ட்ரஸ்ஸிங் போன்ற உணவுகளைத் தவிர்க்கவும்.

மென்மையான சீஸ்: நன்றாக இருக்கும் என்பது உண்மை  ஆனால் சிறிது நாட்கள் அவற்றின் அருகில் செல்லவேண்டாம். ஃபெட்டா, ப்ரீ, மற்றும் காமேம்பெர்ட், ப்லூ  வெயின்ட் சீஸ், க்வெஸோ பிளான்கோ, க்வெஸ் ஃப்ரெஸ்கோ மற்றும் பானேலா ஆகியவற்றைத் தவிர்க்கவும். அவை "பதப்படுத்தப்பட்டவை" என்றால் மட்டுமே சாப்பிட பாதுகாப்பானவை

கல்லீரல்: கல்லீரல் இரும்புச் சத்து நிறைந்ததாக இருந்தாலும், வைட்டமின் ஏ அதிக அளவில் உள்ளது, இதை அதிகமாக உட்கொண்டால் குழந்தைக்கு தீங்கு விளைவித்து, வீங்கிய உச்சிக்குழி அல்லது பார்வை குறைபாடு போன்ற கடுமையான பிறப்பு குறைபாடுகளுக்கு வழிவகுக்கும் 

பதப்படுத்தப்படாத பால் மற்றும் பழச்சாறுகள்: வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஒரு நீண்ட நேரம் வைக்கப்படும் காய்ச்சாத பால் மற்றும் பழச் சாறுகளைத் தவிர்க்க வேண்டும். டெட்ரா பேக்குகளில் கிடைக்கும் பால் மற்றும் பழச்சாறுகள் பதப்படுத்தப்படுவதால், அவற்றை உபயோகிப்பது அறிவுறுத்தப்படுகிறது.

ஆல்கஹால்: பல கருச்சிதைவுகளும் பிறப்பு குறைபாடுகளும் கர்ப்ப காலத்தில் மதுவைப் பயன்படுத்துவதால் ஏற்படும் என  ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

உங்கள் குழந்தை இந்த உலகிற்கு வரும் வரை ஒரு சில தடுப்புகளை பயிற்சி செய்வதன் மூலம் ஒரு ஆரோக்கியமான மற்றும் சிக்கலில்லா கர்ப்பத்திற்கு வழிவகுக்கலாம்.

English | Tamil | Hindi | Telugu | Bengali | Marathi

Read more

Join My First 1000 Days Club

It all starts here. Expert nutrition advice for you and your baby along the first 1000 days.

  • Learn about nutrition at your own paceLearn about nutrition at your own pace
  • toolTry our tailored practical tools
  • Enjoy member only benefits and offersEnjoy member only benefits

Let's start this!

Related Content
Article Reviews

0 reviews

Still haven't found
what you are looking for?

Try our new smart question engine. We'll always have something for you.