முதல் மூன்று மாதங்களில் மருத்துவரிடம் ஆலோசித்தல்
உங்கள் பிரசவத் தேதி
கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் உங்கள் முதல் மருத்துவச் சந்திப்பின்போது, மருத்துவர் உங்கள் கடைசி மாதவிடாய் ஏற்பட்ட தேதியைக் கேட்பார். அதை வைத்து, அவர் உங்கள் பிரசவத் தேதியை கணக்கிடுவார்.
உங்கள் மருத்துவ வரலாறு
உங்களுக்கு ஏதாவது நோயோ, மருத்துவச் சிக்கல்களோ இருந்தால் அது பற்றியும், உங்கள் குழந்தைக்கு மரபணு வழியாக ஏதேனும் கோளாறுகள் வருமா என்பதைப் பற்றியும் மருத்துவரிடம் பேசவேண்டும்.
சிலிர்ப்பூட்டும் 12-வது வார மருத்துவச் சந்திப்பு
12-வது வார மருத்துவச் சந்திப்பில், நீங்கள் உங்கள் குழந்தையின் இதயத் துடிப்பை கேட்கமுடியும். சுமார் 20 வாரங்கள் வரை வழக்கமான ஸ்டெதாஸ்கோப்பை கொண்டு இதயத் துடிப்பைக் கேட்கமுடியாது என்பதால், மருத்துவர் உங்கள் அடிவயிற்றில் ஒரு டாப்ளர் இயந்திரத்தை வைப்பார். இந்த இயந்திரம் குழந்தையின் இதயத்துடிப்பைக் கண்டுபிடிக்க அல்ட்ராசவுண்ட் அலைகளைப் பயன்படுத்துகிறது. நிமிடத்திற்குச் சுமார் 120 முதல் 160 வரையிலான எண்ணிக்கையில் துடிக்கும் ஒரு சின்னஞ்சிறு இதயத்தின் ஒலியை நீங்கள் கேட்பீர்கள். நீங்கள் எப்போதாவது சந்தேகப்பட்டிருந்தால், உங்கள் குழந்தை ஒரு நிஜமான உயிராக வளர்வதை இப்போது உறுதிசெய்துகொள்ளலாம்.
தயாராக இருங்கள்
முக்கியமான புள்ளிவிவரங்கள்
உங்கள் மருத்துவரோ அல்லது நர்ஸோ உங்கள் உயரம், எடை, இரத்த அழுத்தம் மற்றும் இதயத்துடிப்பு ஆகியவற்றைப் பதிவு செய்வார். உங்கள் இதயம், நுரையீரல், அடிவயிறு மற்றும் இடுப்பு ஆகிய பாகங்களில் இப்போது அவர் சிறப்புக் கவனம் எடுத்துக்கொள்வார்.
இரத்தப் பரிசோதனை
உங்களுக்கு இரத்தம் தேவைப்பட்டால் அதை வழங்கும்பொருட்டு, இரத்த வகையை அறியும் சோதனை நடைபெறும். அத்துடன் இரத்த சோகை, பாலியல் நோய்த்தொற்றுகள், கர்ப்பத்தின் ஆரம்பத்தில் ஏற்பட்டால் பேரழிவு ஏற்படுத்தக்கூடிய ரூபெல்லா (ஜெர்மானிய அம்மை நோய்) நோய்க்கான நோயெதிர்ப்புத் திறன் ஆகியவையும் இரத்தப் பரிசோதனை மூலம் சோதிக்கப்படும். சிக்கில் செல் அனீமியா மற்றும் தலசீமியா (ஒரு அரிதான இரத்தக் கோளாறு) ஆகியவற்றுக்கான சோதனைகளும் இதன் மூலம் செய்யப்படும்.
சிறுநீர் பரிசோதனை
உங்கள் சிறுநீரில் உள்ள புரதம் மற்றும் சர்க்கரையின் அளவுகளும் சோதிக்கப்படும்.
கர்ப்பப்பை வாயை சுத்திகரித்தல்
உங்களுக்கு ஹெர்பெஸ் இருந்தால், மருத்துவர் உங்களுக்கு ஹெர்பெஸ் வைரஸ் இன்னும் செயல் வீச்சுடன் இருக்கிறதா என்று சோதிப்பார். ஹெர்பெஸ் வைரஸ் கழந்தைக்குக்குள்ளும் புகுந்துவிடக் கூடும். ஆனால், அப்படிப் பொதுவாக நடப்பதில்லை. உங்களது ஹெர்பெஸ் வரலாற்றைப் பற்றி மருத்துவரிடம் பேசுவதால், அதைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மருத்துவர் எளிதாகத் திட்டமிடுவார்.
கர்ப்பப்பை வாய்ப்புற்று
கர்ப்பப்பை வாயில் ஏற்படும் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளைப் பரிசோதிப்பதற்காக மருத்துவர் உங்கள் உடலில் இருந்து செல்களை எடுப்பார்.
English | Tamil | Hindi | Telugu | Bengali | Marathi |
0 reviews