ஒரு வாடகைத் தாய் என்பவர் யார்?
ஒரு வாடகைத் தாய் என்பவர் உங்கள் குழந்தையை கர்ப்பத்தில் ஒன்பது மாதங்கள் சுமக்க ஒப்புக் கொள்பவர் ஆவார். குழந்தை பிறக்கும்போது, வாடகைத் தாய் சட்டபூர்வமாக குழந்தையை ஒப்படைத்துவிடுவார். அதன் பிறகு, நீங்கள் குழந்தையின் பராமரிப்பாளராகவும், சட்டப்பூர்வமான பெற்றோராகவும் ஆகிவிடுவீர்கள்.
வாடகைத் தாய் முறைக்கு இந்தியாவில் சுமார் 10 லட்சம் முதல் 20 லட்சம் வரை செலவாகிறது. எனவே, இந்த செயல்முறையை பரிசீலிப்பதற்கு முன்பாக, அதற்கான நிதியை முதலில் சேகரித்து வைத்துக்கொள்ளுங்கள்.
வாடகைத் தாய் முறையின் வகைகள் யாவை?
வாடகைத் தாய் முறை இரண்டு வகையில் நடக்கிறது:
வழக்கமான வாடகைத் தாய் முறை: உங்களால் ஆரோக்கியமான முட்டைகளை வெளியிட முடியாவிட்டால், இந்த வகையை நீங்கள் பயன்படுத்த வேண்டும். வழக்கமான வாடகைத் தாய் முறையில், உங்கள் கணவரின் விந்தணுக்கள் செயற்கையாக உங்கள் மாற்றுத்தாயின் கருப்பையில் செலுத்தப்பட்டு, குழந்தை உங்கள் கண்வரின் மரபணுவையும், உங்கள் மாற்றுத்தாயின் மரபணுவையும் கொண்டு உருவாகுமாறு செய்யப்படுகிறது.
கருமுட்டையுடன் கர்ப்பம் சுமக்கும் வாடகைத் தாய் முறை: இந்த முறையில், உங்கள் கருமுட்டையில் உங்கள் கணவரின் விந்தணுக்களை செயற்கை கருத்தரித்தல் (IVF) என்று அழைக்கப்படும் ஒரு செயல்முறை மூலம் சேர்த்து ஒரு கரு உருவாக்கப்பட்டு, அது மாற்றுத் தாயின் கருப்பைக்குள் பதிக்கப்படுகிறது. பிறகு, மாற்றுத் தாயே கர்ப்பத்தை சுமந்து, குழந்தையைப் பெற்றுக் கொடுப்பார். இந்த விஷயத்தில், குழந்தை உங்களுக்கும் உங்கள் கணவருக்கும் மரபணு ரீதியாக தொடர்புடையதாக இருக்கும்.
வாடகைத் தாய் முறை பணத்தை உள்ளடக்கியதா?
நீங்கள் வாடகைத் தாய்க்கு அவருடன் செய்துகொண்ட உடன்படிக்கையின்படியோ அல்லது அவர் இணைந்திருக்கும் வாடகைத் தாய் ஏஜென்ஸியுடன் செய்துகொண்ட உடன்படிக்கையின்படியோ பணம் செலுத்த வேண்டும். இது வணிகரீதியான வாடகைத் தாய் முறை அல்லது "வாடகை கருப்பை" என்று அழைக்கப்படுகிறது. இது இந்தியாவில் சட்டபூர்வமாக உள்ளது. சில பெண்கள் குழந்தை தேவைப்படும் தம்பதிகளுக்கு உதவும் பொருட்டு, வாடகைத் தாயாக இருக்கவும் சம்மதிக்கிறார்கள். இது தன்னலமற்ற வாடகைத் தாய் முறை என்று அழைக்கப்படுகிறது. இதில் பணப் பரிமாற்றம் இல்லை.
கருத்தரிப்பதிலோ அல்லது ஒரு குழந்தையை கருவில் சுமப்பதிலோ சிக்கல் இருந்தால், வாடகைத் தாய் முறை மூலம் குழந்தை பெறுவதற்கான வாய்ப்புகள் பற்றி உங்கள் மருத்துவரிடம் கேளுங்கள்.
English | Tamil | Hindi | Telugu | Bengali | Marathi |
0 reviews