கர்ப்பம் என்பது வாழ்க்கையின் மிக மகிழ்ச்சியான மற்றும் ஒவ்வொரு நிலையிலும் ஆச்சர்யத்தைக் கொடுக்கும் ஒரு நிலை.
ஒரு ஆரோக்கியமான வழி உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் அமைய முன் கூட்டியே திட்டமிடல் இந்தக் கட்டத்தை நிறைவானதாக்கும்
எவ்வாறு திட்டமிடுவது
1. ஆரோக்கியமாக இருங்கள்
நல்ல ஆரோக்கிய உடல்நலத்தை அடைவதும், தக்க வைப்பதும் ஆரோக்கியமான கர்ப்பத்திற்கு மிகவும் முக்கியமாகும். உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது மிகவும் எளிது. முதலில், உங்களுடைய படிப்படியான கர்ப்ப நிலைகள் முழுவதும் உங்களுக்கு தகுந்த வழிமுறைகளை கொடுக்க ஒரு மருத்துவரை ஆலோசிக்கவும். அதைத் தவிர வேறு பல முறைகளையும் முயற்சிக்கலாம். உதாரணமாக:
ஆரோக்கியமான எடையை அடையவும். உரிய எடை உடற்பருமனினால் எழும் சிக்கல்களின் இடரைக் குறைக்கும்.
நோய் விவரக்குறிப்பு. உங்களுடைய, உங்களுடைய துணைவருடைய மற்றும் உங்கள் குடும்பத்துடைய மருத்துவ விவரக்குறிப்புகளைப் பதிவு செய்து வைக்கவும். ஏதாவது கவலைக்குறிய விஷயமானால் உங்களுடைய மருத்துவரை ஆலோசிக்கவும்.
உடல்நலப் பிரச்சனைகளை தவிர்கவும். தற்போதைய அல்லது எதிர்நோக்கும் உடல்நலப் பிரச்சனை இருப்பின் உடனே உங்கள் மருத்துவரை ஆலோசிக்கவும்.
2. உங்களுடைய உணவுமுறையை கட்டுப்படுத்தவும்.
“நீங்கள் எதை சாப்பிடுகிறீர்களோ அதுவாக ஆகிறீர்கள்” என்ற கருத்து குறிப்பாக கர்ப்பத்தின்போது உண்மையாகக் கொள்ளப்படுகிறது. முறையான ஊட்டச்சத்து உங்களுடைய மற்றும் உங்களுடைய குழந்தையுடைய உகந்த வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் ஆதாரமாகும். கர்ப்பத்தின் போது உங்களுடைய தேவைகள் அதிகரிக்கும் ஆகவே ஒரு சமச்சீரான உணவுமுறை உங்களுடைய மற்றும் உங்கள் குழந்தையுடைய தேவைகளை பூர்த்தி செய்கிறது. ஊட்டச்சத்து குறைபாடுகள் கர்ப்பத்தின் போது பல வித இடர்களுக்கும் சிக்கல்களுக்கும் உங்களை வெளிப்படுத்துகிறது.
இதை சரி செய்ய எடுக்க வேண்டிய நிலைப்பாடுகள்:
போதிய ஊட்டச்சத்து: உங்களுக்கு ஊட்டச்சத்து மிகுந்த மற்றும் சமச்சீரான உணவு விதிமுறையைத் தீர்மானித்து குறித்துத் தர நல்ல உணவு வல்லுநர்/மருத்துவருடன் ஆலோசிக்கவும். புரோட்டீன், கால்சியம், ஃபோலிக் ஆசிட், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ,ஈ, சி மற்றும் பி வகைகள் ஆகியவையின் உட்கொள்ளல் கர்ப்பகாலத்தில் மிக முக்கிய பங்கு வகிப்பதால் அவற்றிற்கு சிறப்பு கவனம் அளிக்க வேண்டும்.
உணவு துணையூட்டப் பொருட்கள்: பிரசவத்திற்கு முன் சப்ளிமென்டான ஃபோலிக் ஆசிட், இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் பி வகை வைட்டமின்களை உங்கள் மருத்துவர் பரிந்துரைப்பார்.
திரவப் பொருட்களை உட்கொள்ளல்: கர்ப்பத்தின் போது, ஊட்டச்சத்தின் ஜீரண மாற்றத்திற்கும் வளர்ச்சிக்கும், உகந்த அளவு திரவப் பொருட்களை உட்கொள்ளல் மிகவும் இன்றியமையாதது. மேலும் நல்ல அளவு திரவங்கள் உட்கொள்வது, உடலின் நீர்க்குறைவு மற்றும் அதனுடன் கூடிய இடர்களைத் தடுக்கிறது.
மிகுதியான சர்க்கரை மற்றும் உப்பு தவிர்த்தல்: அதிகளவு சர்க்கரை மற்றும் உப்பு எடுப்பதைக் குறைக்கவும். இது கர்ப்பகால சர்க்கரை வியாதி மற்றும் ரத்த அழுத்த அபாயத்திற்கு வழி வகுக்கும்.
உங்களுடைய காஃபின் உட்கொள்ளலை குறைக்கவும்: காஃபின் ஒரு சிறுநீர் பெருக்கி, உங்களுடைய உடல் மண்டலத்திலிருந்து நீரை வற்றிவிடும் தன்மையது. மற்ற ஆரோக்கிய தேர்வான கிரீன் டீ போன்றவற்றை தேர்ந்தெடுக்கவும்; அவை ‘ஆன்டி ஆக்சிடன்ட்’டாகவும் பயன் தரும்.
நிதானமாக இருங்கள்: மதுவை முற்றிலுமாக புறக்கணியுங்கள், ஏனென்றால் அது உங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கிறது மற்றும் கருவிற்கும் ஆபத்து விளைவிக்கும். இதன் காரணத்தால், உங்கள் குழந்தை பிறப்பு குறைபாடு மற்றும் கற்றலுக்கான ஆற்றலின்மை ஆகியவற்றை எதிர்கொள்ளும்.
நார்சத்து உட்கொள்ளுவதை அதிகரிக்கவும்: உங்களுடைய கர்ப்பத்தினால் வரும் மலச்சிக்கலை தவிர்ப்பதற்கு, நிதானமாக உங்களுடைய நார்ச்சத்து உட்கொள்ளலை அதிகரிக்கவும்.
3. சுகாதாரத் தூய்மை.
உங்களுடைய சொந்த சுகாதாரத் தூய்மையை காத்துக்கொள்ள உங்களுடைய சுற்றுச்சூழலை தூய்மையாக்குதல், ஆரோக்கியமான உணவு நெறிமுறைகளை வகுத்தல் ஆகியவை மிக முக்கியமானதாகும்; அவை நோய்த்தொற்று மற்றும் வரக்கூடிய இடர்களைத் தடுக்கும்.
பற்களின் சுகாதாரம்: பற்களின் சுகாதாரம் மிக முக்கியம், பல் வைத்தியரை விரைவில் ஆலோசிக்கவேண்டும். அது சொத்தைப்பற்களை பிடுங்கவோ அல்லது நிரப்பவோ உதவியாக இருக்கும், தேவைப்பட்டால் இதை சௌகரியமாக செய்வதற்கு, இரண்டாவது, மூன்று மாதங்கள் சிறந்த நேரமாகும்.
குளித்தல்: நீங்கள் தினமும் குளிக்கவேண்டும்; ஆனால் தடுமாற்றத்தால் குளியலறையில் விழாமல் ஜாக்கிரதையாக இருக்கவும்.
உணவு சுகாதாரம்: இதற்கு உங்கள் உணவை மதியூகமாக தேர்வு செய்ய வேண்டியிருக்கும். எப்பொழுதும் பதப்படுத்திய பொருட்களை தேர்வு செய்யுங்கள். மேலும் மென்மையான சீஸ் போன்ற பொருட்களைத் தவிர்த்து விடுங்கள். புதிதாகப் பிழிந்த அல்லது பதப்படுத்திய பழரசத்தைு உட்கொள்ளுங்கள். சாலாடு மற்றும் ஸ்ப்ரௌட்ஸ்ஸை விரும்பினால் வீட்டில் புதிதாக தயாரித்து சாப்பிடுங்கள். நோய்தொற்று உருவாகக் காரணமாக இருப்பதால் தெரு ஓரத்தில் உள்ள உணவகங்களில் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.
4. மன அழுத்தத்தைக் குறைக்கவும்.
குழந்தைக்கு தாயாகும் ஒரு பெண் மன அழுத்தம் மற்றும் பதட்டத்திலிருந்து விலகி இருப்பது மிக முக்கியம். மன அழுத்தம் கர்ப்பகால ரத்த அழுத்தம் அல்லது யோனிக்குழாய் ரத்தக்கசிவு உண்டாகும் இடரை உருவாக்குகிறது; இது உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் அபாயகரமானதாகும்.
மன அழுத்தத்தைத் தவிர்ப்பது எப்படி?
சோர்வடையச்செய்யும் பயிற்சிகளையும் பழக்கங்களையும் தவிர்த்திடுங்கள். உதாரணமாக, சிலர் மீது எதிர்மறை உணர்வுகள் இருப்பின், அவர்களைத் தவிர்த்திடுங்கள். மேலும், கடும் உடற்பயிற்சி மற்றும் அவசரமாக சமைத்தல் ஆகியவை உங்களுக்கு உகந்ததல்ல, அவற்றை செய்வதை தற்சமயம் கட்டுப்படுத்துங்கள்.
தளர்ச்சி உத்தியை முயற்சி செய்யவும். உங்கள் மருத்துவரிடம் தளர்ச்சி உத்திகள் குறித்து ஆலோசிக்கவும்.
எளிதான உடற்பயிற்சிகள் உறுதியான மன அழுத்தத்தைப் போக்கும் உத்திகள். நடை பயிற்சி மேற்கொள்ளுங்கள். சில எளிதான உடற்பயிற்சிகளைச் செய்யுங்கள். இருப்பினும், உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசியுங்கள் அல்லது சான்றிதழ் பெற்ற பயிற்சியாளரிடம் உடற்பயிற்சி பழகுங்கள்.
நேர்மறை அதிர்வுகள் உங்கள் தன்னம்பிக்கையை வளர்க்கும். உங்களையும் உங்களைச் சுற்றியும், நேர்மறை அதிர்வுகளையும், உங்கள் தன்னம்பிக்கையையும் வளர்க்கும் நிகழ்ச்சிகளில் உங்களை ஈடுபடுத்திக்கொள்ளுங்கள். உதாரணத்திற்கு, நீங்கள் உங்களுக்குப் பிடித்தமான வேலைகளைச் செய்ய இதுவே மிகச் சிறந்த தருணம்.
தொடர்பிலிருங்கள். உங்கள் துணைவருடனும் அன்புச் சுற்றத்தாருடனும் தொடர்பிலிருப்பது உங்கள் உடலிலிருந்து கணிசமான மன அழுத்தத்தைக் குறைக்கும்.
ஓய்வு மற்றும் தூக்கம். படுக்கையில் நீங்கள் சுமார் 10 மனி நேரம் உறங்க வேண்டும் ( மதியம் 2 மணி நேரம்; இரவு 8 மணி நேரம்).
5. உடற்பயிற்சி.
உடற்பயிற்சி செய்வதில் பல்வித பயன்கள் உள்ளன. பொருத்தமான வழிகாட்டுதல் மூலம் எளிய உடற்பயிற்சி செய்வதால், விரும்பிய எடையைப் பராமரிப்பதுடன் உங்களுடைய தன்னம்பிக்கையைக் கூட்டி, மலச்சிக்கல் மற்றும் முதுகுவலி ஆகிய உபாதைகளைக் குறைத்து, ஜீரணத்தையும் ரத்த ஓட்டத்தையும் கூட்டுகிறது.
என்ன மாதிரியான உடற்பயிற்சிகள் செய்யலாம்?
கீழ் இடுப்புக்கான சரியான உடற்பயிற்சிகளை செய்வதன் மூலம் உங்களது இடுப்பு தசைகளும் மூட்டுகளும் உறுதி பெற்று, வளரும் கருப்பைக்கு உறுதுணையாக இருக்கிறது. மேலும், உடற்பயிற்சி செய்வது, பிரசவத்தை எளிதாக்கும். உங்கள் மருத்துவரிடம் ஆலோசித்து சான்றிதழ் பெற்ற பயிற்சியாளரின் மேற்பார்வையில் உடற்பயிற்சி செய்யுங்கள்.
6.சில நேர்மறையான வாழ்க்கை முறை மாற்றத்தை மேற்கொள்ளுங்கள்
நீங்கள் புகை பிடிப்பவராக இருந்தால், இது நிறுத்த வேண்டிய நேரம். ஏனெனில், புகை பிடிப்பது உங்கள் நுரையீரலை மட்டுமல்லாமல், உங்கள் வளரும் சிசுவையும் பாதிக்கும். பிறர் புகை பிடிப்பதை சுவாசிப்பது கூட தீமையை விளைவிக்கும். புகையில்லாத சூழலில் இருங்கள், மதுவை விட்டுவிடுங்கள், மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதற்கு சிகிச்சை மேற்கொள்ளுங்கள்
சுருக்கமாக, ஆரோக்கியமே பெருஞ்செல்வம். இந்தப் பழங்காலத்து பழமொழி கூச்சலைப் போல் இருக்கலாம், ஆனால் அது எப்போதும் போலவே உண்மை. நல்ல செய்தி என்னவெனில், இது மிகவும் எளிதானது
English | Tamil | Hindi | Telugu | Bengali | Marathi |
0 reviews