Sorry, you need to enable JavaScript to visit this website.
Search
Not a member? Register here
Share this Article
X
 Combating Morning Sickness

மசக்கையை எதிர்கொள்ளல்

(0 reviews)

கர்ப்பகாலத்தில் அனைத்து தாய்மார்களையும் பாதிக்கும் பொதுவான பிரச்சனை மசக்கை . கருத்தரித்து 4 -வது வாரத்திற்கும்,  6-வது வாரத்திற்கும் இடையில் தொடங்கி 14 முதல் 16 வாரங்கள் வரை  இது தொடரும். சில தாய்மார்கள் அவர்களது கர்ப்பகாலம் முழுவதும்கூட இந்த மசக்கையை அனுபவிப்பார்கள். இது லேசான குமட்டல் அல்லது வாந்தியைத் தூண்டிவிடுகிறது.

Tuesday, December 5th, 2017

மசக்கை  ஏன் ஏற்படுகிறது?

மசக்கைக்கு மிக முக்கியக் காரணமாக கூறப்படுவது கர்ப்பிணியின் உடலில் ஏற்படும் கடுமையான ஹார்மோன் மாற்றங்கள் ஆகும். எனினும், உண்மையான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. கர்ப்பகாலத்தில் கர்ப்பிணியின் உடலில் அடிக்கடி ஹார்மோன்கள் சுரக்கும் போது  குமட்டலும், வாந்தியும் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

HCG ஹார்மோனால் குமட்டல் ஏற்படுகிறது: கர்ப்பகாலத்தில் ஹியூமன் கோரியானிக் கோனாடோட்ரோபின் (HCG) ஹார்மோன் அதிக அளவில் கர்ப்பிணியின் உடலில் சுரக்கிறது. இது தாய்மையுற்ற கருப்பைகளில் உள்ள ஈஸ்ட்ரோஜனை வெளியேற்றுகிறது. அந்த நேரத்தில்தான் இந்தக் குமட்டல் ஏற்படுகிறது.

புரொஜெஸ்ட்டிரோன் ஹார்மோன் தசைகளை இளகச் செய்கிறது: கர்ப்பகாலத்தில், புரோஜெஸ்ட்டிரோனின் அளவு அதிகரித்து யோனியின் தசைகளை இளகச் செய்கிறது. இது குழந்தையின் வளர்ச்சிக்கும், பிரசவத்தை எளிதாக்கவும் பயன்படுகிறது. எனினும், இது வயிறு மற்றும் குடல் தசைகளையும் சேர்த்து இளகச் செய்வதால், இரைப்பையில் வாயுத் தொல்லைகளை உண்டாக்கும்  இரைப்பை-ஈசோஃபேகியல் ரிஃப்ளக்ஸ் (வயிற்று அமிலம் அதிகமாவதால்,  நெஞ்செரிச்சல் ஏற்படுதல்) எனப்படும் தொல்லையை உண்டாக்குகிறது. ஆற்றல் நஞ்சுக்கொடி வழியாக குழந்தைக்குப் பாய்வதால், தாயின் இரத்தச் சர்க்கரை அளவு குறைவதாலும் குமட்டல் ஏற்படலாம். ஆனால் அது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

அதிகரித்த வாசனை உணர்திறன்: பல தாய்மார்கள் அனுபவிக்கும் மிகவும் பொதுவான தொல்லைகளில் இதுவும் ஒன்றாகும். வாசனைகள் தொடர்பான அதிகரித்த உணர்திறனானது, செரிமான அமைப்பைத் தூண்டுவதால், இரைப்பை அமிலங்களின் சுரப்பு அதிகரித்துவிடுகிறது. அதுவும் குமட்டல் ஏற்படக் காரணமாகிவிடுகிறது.

பிலிரூபின் நிலைகள் அதிகரித்தல்: கல்லீரலில் காணப்படும் ஒரு நொதியான பிலிரூபின் அளவும் கர்ப்பகாலத்தில் அதிகரிப்பதும் குமட்டலுக்கு காரணமாக இருக்கலாம்.

குமட்டலை எவ்வாறு தடுப்பது?

எல்லா வழிமுறைகளும் குமட்டலின் அறிகுறிகளை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மட்டுமே குறைக்கும்.

கார்போஹைட்ரேட் நிறைந்த தின்பண்டங்கள்: காலை உணவில் பிஸ்கட், வறுவல் முதலிய கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளைச் சாப்பிட வேண்டும். தக்காளி, திராட்சை, தர்ப்பூசணி, பசலைக் கீரை மற்றும் முட்டைக்கோசு ஆகிய நீர்ச்சத்து அதிகம் கொண்ட, கார்போஹைட்ரேட் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை காலை உணவோடு துணை உணவாகச் சேர்த்துச் சாப்பிடுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.  எலுமிச்சை மற்றும் இஞ்சி ஆகியவற்றையும் இவற்றுடன் சேர்த்துக் கொள்வது மிகுந்த பலனளிக்கும்.

பட்டினி கிடப்பதைத் தவிர்க்கவும்: வயிற்றைக் காலியாக விடுவது, இரைப்பை அமிலங்களின் அளவை அதிகரிப்பதால், அது குமட்டலுக்கு காரணமாகிவிடும். குமட்டல் அதிகமாக இருந்தால், கொழுப்பு நிறைந்த உணவுகளையும், அதிகம் பதப்படுத்தப்பட்ட, செயற்கைச் சுவைகளைக் கொண்ட உணவுகளையும் தவிர்க்கவும்.

அதிக திரவ உணவுகளை உட்கொள்ளவும்: வாந்தியெடுப்பதால் உங்கள் உடலில் நீர்ச்சத்துக் குறைவு ஏற்படுவதால், அதைச் சரிக்கட்ட அதிகமாக நீரருந்த வேண்டும். அத்துடன், புதிய பழச்சாறுகள், காய்கறிச் சாறுகள், மோர் மற்றும் தேங்காய் இளநீர் போன்ற திரவ உணவுகளையும் உட்கொள்ள வேண்டும்.

குமட்டல் நீண்டகாலம் கட்டுப்பாடில்லாமல் இருந்தால், உங்கள் மருத்துவரை அணுகவும். ஆனால் நினைவில் கொள்ளுங்கள்,  இந்தக் குமட்டலால் கவலைப்பட ஏதுமில்லை. இது கர்ப்பகாலத்தில் காணப்படும் மிகவும் பொதுவான அறிகுறிகளில் ஒன்றாகும். மேலும் 50% முதல் 70% வரை அனைத்துக் கர்ப்பிணித் தாய்மார்களும் இந்த கட்டத்தைக் கடந்துதான் சென்றாக வேண்டும்.

English | Tamil | Hindi | Telugu | Bengali | Marathi

Read more

Join My First 1000 Days Club

It all starts here. Expert nutrition advice for you and your baby along the first 1000 days.

  • Learn about nutrition at your own paceLearn about nutrition at your own pace
  • toolTry our tailored practical tools
  • Enjoy member only benefits and offersEnjoy member only benefits

Let's start this!

Related Content
Article Reviews

0 reviews

Still haven't found
what you are looking for?

Try our new smart question engine. We'll always have something for you.