Sorry, you need to enable JavaScript to visit this website.
Search
Not a member? Register here
Share this Article
X

குழந்தையை குளிப்பாட்டுவது

(0 reviews)

உங்கள் குழந்தை ஒரு நல்ல வெதுவெதுப்பான குளியலை நேசிக்கும், இல்லையென்றாலும் பொறுமையாக இருங்கள்- ஆனால் நீண்டகாலம் எடுக்காது, பின்பு அவர்கள் வெளியே வர விரும்பமாட்டார்கள்! தண்ணீர் வெதுவெதுப்பாகவும் இதமாகவும் இருக்கும் மற்றும் குளியல் உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் இடையே நெருங்கிய தொடர்பு ஏற்பட ஒரு இனிய வாய்ப்பைத் தருகிறது. குளிக்கும் அனுபவத்தை சுவாரஸ்யமாகவும் பயனுள்ளதாகவும் செய்ய பத்து குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:

Tuesday, November 28th, 2017

குளியல் நேரத்திற்கான பத்து குறிப்புகள்:

1.எத்தனை முறை? எத்தனை முறை குளிப்பதென்பது, நீங்கள் வாழும் பருவநிலை உங்கள் குழந்தையின் உடல்நலம், வயது மற்றும் ஆண்டுக் காலத்தைச் சார்ந்தது. ஆரம்ப வாரங்களில் உங்கள் குழந்தை ஒவ்வொரு நாளும் குளிக்கத் தேவையில்லை- தலை முதல் கால் வரை மென்மையான துணியால் துடைத்து விடுவது ஒரு நல்ல மாற்று. உங்கள் குழந்தை வழக்கமான வாழ்க்கை முறையை அனுபவிக்கும் போதும் திட உணவுகளை உண்ணத் துவங்கும் போதும் தினசரி குளியல் மிகவும் அவசியமாகிறது.

2. தயாராகுங்கள்: குளியல் நேரத்திற்கு தேவையான பொருட்களான குளியல் திரவியம், குளியல் துணி, துடைக்கும் துண்டு, புதிய நாப்பி, ஆடை மற்றும் பிற துப்புரவு பொருட்களை சேகரித்து வைத்துக் கொள்ளவும். நீங்கள் குளியலை தொடங்கும் முன் அவற்றை அருகில் வைத்திருங்கள்.

3.தண்ணீரின் வெப்பநிலை: உங்களாலும் உங்கள் குழந்தையாலும் உடலின் வெப்பநிலையை ஒழுங்குபடுத்த முடியாது. குளியலை ஒரு வெதுவெதுப்பான அறையில் வரைவு இல்லாமல் அமையுங்கள். நீரை உடலின் வெப்பநிலைக்கு கொண்டுவாருங்கள். உங்கள் குழந்தையை நீரில் வைக்கும் முன் உங்கள் முழங்கையை நனைத்து சோதித்துப் பார்க்கவும். உங்கள் முழங்கை நிறம் மாறாமல் மற்றும் குளிராகவோ சூடாகவோ உணராமல் இருக்க வேண்டும்.

4.முதலில் முகம், கண் மற்றும் காது: குழந்தையை துண்டில் சுற்றி மாற்றுப் பாயின் மீது படுக்க வைக்கும்போது முதலில் கண், காது மற்றும் முகத்தைத் துடையுங்கள்.

5.நல்ல பிடிப்பைப் பெறுங்கள்: உங்கள் குழந்தை ஈரமாக இருக்கும் போது வழுக்கும். உங்கள் குழந்தையை குளியலுக்கு எடுத்துச் செல்லும் போதும் திரும்பி வரும் போதும் இரண்டு கைகளையும் பயன்படுத்துங்கள். உங்கள் குழந்தையை தண்ணீரில் நழுவவிடாமல் இருக்க, ஒரு குளியல் துண்டை அடியில் விரித்து, அதை மென்மையான குளியல் பாயாகச் செய்யுங்கள். குழந்தை குளியல் நீரில் இருக்கும் போது அதை விட்டுப் போக வேண்டாம்.

6. மிதமான சோப்பை தேர்வு செய்யவும்: உங்கள் குழந்தையின் தோல் மிகவும் உணர்திறன் வாய்ந்தது. - உங்கள் குழந்தையின் தோலில் பயன்படுத்தப்படும் பொருட்கள் இயற்கையாகவும் மென்மையானதாகவும் இருத்தல் வேண்டும். தோல் உலர்வதைத் தடுக்க குளியல் நீரில் எண்ணெய் (வாசனை இல்லாத) சேர்க்கலாம். குழந்தைகளுக்கு சோப்புகள் மற்றும் ஷாம்புக்கள் தேவையில்லை, நீங்கள் தண்ணீரை மட்டும் பயன்படுத்தலாம். உங்கள் குழந்தை நகர ஆரம்பித்தவுடன், வாரம் 1-2 முறை மணமில்லாத, இயற்கை குளியல் திரவியம், எண்ணெய், ஈரப் பதமூட்டுவான் முதலியவற்றை பயன்படுத்தலாம்.

7. கூந்தல் பராமரிப்பு: உங்கள் குழந்தைக்கு பல மாதங்கள் ஆகும் முன்னர் அல்லது உண்மையாக முடி வளரும் முன்னர் ஷாம்பூ பயன்படுத்தத் தேவையில்லை. உங்கள் குழந்தையின் தலையை பின்னோக்கி சாய்ப்பதன் மூலம் கண்களில் நீர்த் துளிகள் விழுவதைத் தவிர்க்கலாம் மற்றும் மென்மையான, இயற்கையான குழந்தைகளுக்கான ஷாம்பூக்களைப் பயன்படுத்துங்கள்.

8.க்ரேடில் காப் பராமரிப்பு: முதல் சில மாதங்களில் உங்கள் குழந்தையின் தலையில் சிறிய செதில்கள் அல்லது ஈரமான தோல் துண்டுகளை நீங்கள் கவனிக்கலாம்- இது க்ரேடில் காப். துண்டால் முடியை நன்கு உலர்த்தியபின் வழக்கம் போல் சீவி செதில்களை நீக்கவும்.

9.நன்கு உலர்த்தவும் : குளியல் நேரம் முடிந்தவுடன், உங்கள் குழந்தையை ஒரு சுத்தமான, மென்மையான துண்டால் நன்கு சுற்றி, தேய்க்காமல் ஒற்றித் துடைத்து உலர்த்தவும். உங்கள் தூய்மையான, ஆசுவாசமான குழந்தையின் அற்புதமான புத்துணர்வு வாசனையையும் அழகையும் ரசித்து அனுபவியுங்கள்.

10.குளியல் நேரத்தை சிறப்பாக்குங்கள்: நல்ல சுகாதாரமாக இருப்பதற்கு குளியல் தேவை, இருப்பினும் உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் இடையே ஒரு நெருக்கமான பிணைப்பை உருவாக்க இது ஒரு சிறப்பான நேரம். புன்னகையோடு, ஆசுவாசப்படுத்திக்கொண்டு அவர்களோடு ரசித்து அனுபவியுங்கள்.

குழந்தை பிறந்த 24 முதல் 48 மணி நேரங்களுக்கு உங்கள் குழந்தையின் தொப்புள் கொடி இடுக்கிடப் பட்டிருக்கும்.

தொப்புள் கொடி தண்டுத் திசு, பிரிவுப் புள்ளிவரை தோற்றத்தில் (இருண்டு மற்றும் உலர்ந்து) மற்றும் வாசனையில் மாறுபடும்.

தண்டு விழுவதற்கு முன் துர்நாற்றம் வீசலாம், இது முதல் ஓரிரு வாரங்களுக்குள் நடக்கலாம். தொப்புள் கொடி தண்டை பராமரிக்க கீழ்க்கண்டவற்றை வைத்திருங்கள்:

  • பருத்தி முனை பூசுவான்கள்
  • பருத்தி பந்துகள் அல்லது துணி
  • கடல் உப்பு சேர்த்த சுத்தமான தண்ணீர் அல்லது ஒரு சாதாரண உப்புத்தன்மை கொண்ட நீர்

தண்டு பராமரிப்பின் முன்னும் பின்னும் கைகள் சுத்தமாக கழுவப்பட வேண்டும்.

சிறுநீர் அல்லது மலத்தால் தொப்புள் கொடி பகுதி அசுத்தம் அடைந்தால், அதனை சுத்தம் செய்து உலர்த்தவும். தொப்புள் கொடி பகுதி நன்கு ஆறும் வரை அதை கவனித்து தேவையான போது நன்கு சுத்தம் செய்யவும். சுற்றியுள்ள தோல் பகுதியில் ஏதேனும் வீக்கம் இருந்தால், அதனை சாதாரண உப்பு நீரால் சுத்தப் படுத்தி ஒரு இயற்கை கிருமிநாசினி பூச்சைத் தடவவும்.

தொப்புள் கொடி தண்டு விழுந்தவுடன் தொப்புள் பகுதியில் இருந்து தெளிவான திரவம் அல்லது நீர் கசிந்தால் சாதாரண உப்பு நீர் அல்லது கொதிக்க வைத்து ஆற வைத்த தண்ணீரைக் கொண்டு சுத்தப்படுத்தி நன்கு உலர விடவும்.

நல்ல கற்றோட்டத்துடனும் உலர்வாகவும் வைத்திருங்கள். காய்ந்த தொப்புள் கொடி தண்டு விழுந்தும், தொடர்ச்சியாக நீரோ ரத்தமோ கசிந்தால், ஒரு வல்லுநரின் ஆலோசனையைப் பெற வேண்டும்.

குழந்தையின் கண்களைச் சுத்தப்படுத்துதல்:

உங்கள் குழந்தையின் கண்களை இரண்டு பருத்தி பந்துகள் அல்லது மென்மையான துணியைப் பயன்படுத்தி சுத்தம் செய்யவும். தயாராக உள்ள குளியல் நீரில் அவற்றை ஈரமாக்குங்கள்.

கண் பகுதியை அழுத்தமாகவும் மூக்குப் பகுதியில் இருந்து வெளிப்புறமாக மெதுவாகவும் துடைக்க வேண்டும். மற்றொரு ஈரப்பதமான பருத்தி பந்தைப் பயன்படுத்தி மற்றொரு கண்ணைச் சுத்தம் செய்யவும்.

பிசுபிசுப்பான கண்கள், நீர் வடியும் கண்கள் அல்லது சில நேரங்களில் ஒட்டிக் கொண்டிருக்கும் கண்களை அடிக்கடி சுத்தப் படுத்த வேண்டும் மற்றும் குழந்தைகளில் இது அசாதாரணமானது அல்ல. இவை வழக்கமாக, தடுக்கப்பட்ட கண்ணீர் குழாய்கள் காரணமாக ஏற்படுகிறது. தொடர்ச்சியான சுத்திகரிப்பு இருந்தபோதும், பல வாரங்களுக்கு அல்லது மாதங்களுக்கு கண்கள் பிசுபிசுப்புடன் இருக்கும். கண்களிலிருந்து வெளிப்படும் திரவத்தில் எந்த மாறுபாடாவது இருந்தாலோ கண் சிவப்பாக மாறினாலோ ஒரு வல்லுநரிடம் காண்பியுங்கள்.

குழந்தையின் காதுகளைச் சுத்தம் செய்தல்

காது மெழுகானது குழந்தையின் வெளி காது பகுதியில் உருவாகிறது மற்றும் தாடையின் அசைவினால் வெளிப்புற காதின் விளிம்பிற்கு பயணிக்கிறது மற்றும் உயவு தன்மையுடன் வைப்பதோடு காதினுள் அழுக்கு மற்றும் தூசு புகாமல் பாதுகாக்கின்றது. உள் காதில் நிறைய காது மெழுகு சேர்வதால் காது கேட்பதில் பிரச்சனை ஏற்படலாம்.

குழந்தையின் வெளி காது மடிப்பு மற்றும் காதுக்கு பின்புறம் உள்ள பகுதிகளை ஈரப்பதமான காட்டன் பந்து அல்லது மிருதுவான துணியினால் மட்டுமே சுத்தம் செய்ய வேண்டும் காது கால்வாய் உள்ளே ஒரு பருத்தி மொட்டு அல்லது மற்ற குறுகிய பொருட்களை செயல்படுத்த வேண்டாம் - நீங்கள் செவிப்பறையைத் துளைத்துவிடும் வாய்ப்பு உண்டு.

விரல் நக பராமரிப்பு

உங்கள் குழந்தைக்கு மிகவும் மென்மையான, ஆனால் நீளமான நகத்துடனும், மிக விரைவாக வளர கூடிய நகங்கள் கொண்ட விரல்கள் இருப்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள்.

நகத்தைக் கடிப்பதோ அல்லது பிய்ப்பதோ கூடாது என்பது முக்கியம் ஏனென்றால் அது விரல் மேல் தோலை சேதப்படுத்திவிடும் மற்றும் இது திறந்த காயமாக இருப்பதால் பாக்டீரியா நோய்த்தொற்றின் அபாயத்தை அதிகரிக்கிறது. அதற்குப் பதிலாக, குழந்தை நகவெட்டிகளையோ அல்லது கூர்மையற்ற முனையை உடைய குழந்தைக்கான கத்தரிக்கோலையோ பயன்படுத்தலாம்

இது பெரும்பாலும் இரண்டு நபர்செய்ய வேண்டிய வேலை. நகத்தை வெட்ட நல்ல நேரம் உங்கள் குழந்தை உணவு எடுத்துகொள்ளும் போது அல்லது ஒருவருடைய கைகளில் ஓய்வெடுக்கும்போது ஆகும்.

நகத்தின் நுனியில் நேராக வெட்டவும், நக கண்னை நோக்கி கீழே வெட்டக் கூடாது.

கையுறைகள், சாக்ஸ் அல்லது சில உடைகளின் கை சுற்று பட்டை கொண்டு மூடுவதால் கீறல் காயங்களை தடுக்க உதவும்.

கால் விரல் பராமரிப்பு

சற்று வளைந்த கோணத்தில் உங்கள் குழந்தையின் கால் நகங்கள் வளர்வதையும் மற்றும் அடிக்கடி ஒரு உள்நோக்கி வளர்ந்த கால் நகம் போல இருப்பதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா?அவை மென்மையாகவும் மற்றும் சேதம் ஏற்படுத்தாததாகவும் இருக்கும் ஆனால் தொடர்ந்து காலுறைகள், காலணிகள் அல்லது காலுறையுடன் கூடிய சூட்களை அணிந்துகொள்வது அழற்சியை ஏற்படுத்தலாம்.

உங்கள் குழந்தையின் கால்களைக் சிறிது நேரம் காற்றோட்டமாக வைக்க உறுதி செய்யவும். சிவந்த அழற்சி பகுதிகளில் டீ ட்ரீ ஆயில் போன்ற பொருத்தமான ஆண்டிபாக்டீரியல் லோஷன் கொண்டு ஒத்தி எடுக்கவும்.

உங்கள் குழந்தையின் பாதங்கள் மிக வேகமாக வளரும். மிகக் சிறியதாக இருக்கும் சூட் மற்றும் சாக்ஸ் ஆகியவற்றில் அவர்கள் பாதங்களை மூடியிருக்கவில்லை என்பதைச் சரிபார்க்கவும்.

மூக்கைச் சுத்தம்செய்தல் மற்றும் தும்மல்

உங்கள் குழந்தையின் மூக்கின் துவாரங்களை சுத்தமாக வைப்பது மிக முக்கியம். உங்கள் குழந்தையால் தன் மூக்கை சிந்தவோ அல்லது இருமியோ அடிக்கடி தும்மியோ காற்று வழி பாதையை சுத்தம் செய்ய இயலாது. நாசித் துளைகளை ஈரப்பதமாக வைத்திருப்பது அவர்களை இந்த அசௌகரியத்தில் இருந்து தடுக்கிறது. நீங்கள் வழக்கமான உணவு மற்றும் சிறிதளவு நீர் அல்லது சாதாரண உப்பு நீரினை மூக்கில் செலுத்தி இதை அடைய முடியும். உலர்ந்த காலநிலைகளில் அல்லது சூடான அல்லது குளிரூட்டப்பட்ட வீடுகளில் தூங்கும் அறைகளில் உள்ள ஈரப்பதமூட்டியை பயன்படுத்தவும். மூக்கின் சுரப்பிகள் ஈரப்பதமாக இருக்கும் போது, மருந்து கடையில் வாங்கிய ஒரு சிறிய ரப்பர் பல்பைப் பயன்படுத்தவும் அல்லது ஒரு டிஸுவின் முனையை திரித்து மூக்குத் துவாரத்தில் விட்டு அழுக்கை மெதுவாக நீக்கவும். மூக்கினுள் பருத்தி மொட்டுகள் (அல்லது வேறெந்த பொருட்களையும்) பயன்படுத்த வேண்டாம்.

English | Tamil | Hindi | Telugu | Bengali | Marathi

Read more

Join My First 1000 Days Club

It all starts here. Expert nutrition advice for you and your baby along the first 1000 days.

  • Learn about nutrition at your own paceLearn about nutrition at your own pace
  • toolTry our tailored practical tools
  • Enjoy member only benefits and offersEnjoy member only benefits

Let's start this!

Related Content
Article Reviews

0 reviews

Still haven't found
what you are looking for?

Try our new smart question engine. We'll always have something for you.