ஒரு ஆரோக்கியமான குழந்தையின்* உணவில் இருக்க வேண்டியவை:
நாள் ஒன்றுக்கு, 1 பகுதி மாமிசம் அல்லது கோழி இறைச்சிக்கு சமமாக 65 கிராம் இறைச்சி, கோழி, மீன் அல்லது 1 பெரிய முட்டை, ½ கப் அவித்த பீன்ஸ்.
+
நாள் ஒன்றுக்கு ½ பகுதி பழம் - சராசரியாக 150 கிராம், 1 சிறிய துண்டு பழம் அல்லது ½ கப் பதப்படுத்தப்பட பழங்கள் (பெரியவர்களின் 1 பங்குக்கு சமமாக)
+
நாள் ஒன்றுக்கு 1-1½ பகுதி பால் பொருட்கள் – 1 பகுதி= 250மிலி பால், 40 கிராம் கெட்டியான பாலாடைக்கட்டி அல்லது ஒரு கிண்ணம் தயிர் .
+
நாள் ஒன்றுக்கு குறைந்தது 4 சிறிய குவளை தண்ணீர் (தண்ணீரின் தேவை வானிலை மற்றும் அவர்களின் நடவடிக்கை பொறுத்து மாறுபடும். அவர்களின் சிறுநீர் மிகவும் தெளிவான நிறத்திலிருந்து வெளிர் மஞ்சள் நிறமாக இருப்பது அவர்கள் போதுமான திரவம் பெறுகிறார்கள் என்பதற்கான அறிகுறியாகும்)
+
நாள் ஒன்றுக்கு 2-3 பகுதி காய்கறிகள் (ஒரு பகுதி என்பது, சுமார் 75 கிராம், அல்லது ½ கப் சமைத்த காய்கறிகள், அல்லது 1 கப் சாலட்)
+
நாள் ஒன்றுக்கு 4 பகுதி தானிய உணவுகள் (1 பகுதி = 1 துண்டு ரொட்டி, ½ கப் சமைத்த பாஸ்தா அல்லது சாதம் அல்லது 30 கிராம் தானியம்).
+
1 பகுதி விருப்பமான உணவுகள் (30 கிராம் கிரேக்கர், 1 துண்டு வெற்று கேக் அல்லது 1 டீஸ்பூன் வெண்ணெய்).
+
வாரம் ஒன்றுக்கு 7 activity sessions குழந்தைகளுக்கு ஒரு நாளில் குறைந்தது 3 மணிநேரமாவது, பரவலாக நகர்வு இருக்க வேண்டும். மின்னணு விளையாட்டு பொருட்கள் பயன்படுத்துவதையும் தொலைக்காட்சி பார்ப்பதையும் தடுக்கவும்.
+
தினசரி sleep routine - தூக்கம் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது.
=
ஒரு மகிழ்ச்சியான குழந்தை!
*பரிந்துரைக்கப்பட்ட உணவின் அளவுகள் 13-23 மாதங்கள் வரையான வயதுடைய குழந்தைகளுக்காக ஆரோக்கியமான உணவுக்கான ஆஸ்திரேலிய வழிகாட்டியின் படி உள்ளது.
English | Tamil | Hindi | Telugu | Bengali | Marathi |
0 reviews