கர்ப்பிணியாவதற்கு முன்னர் இருக்கும் உங்கள் உடலின் ஊட்டச்சத்து நிலை, கர்ப்பத்தின் அருமையான தொடக்கத்திற்கும், அதன் வளர்ச்சிக்கும் மிகவும் முக்கியமான ஒன்றாகும். உங்கள் ஊட்டச்சத்து நிலையில் கவனம் செலுத்துவதன் மூலம், நீங்கள் கீழ்க்கண்ட விஷயங்களை மேம்படுத்த முடியும்:
கர்ப்பம் தரிக்கும் முன்பு மிகவும் குறைவான எடையில் இருப்பது அல்லது மிக அதிகமான எடையுடன் இருப்பது நீங்கள் கருவுறுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது. சத்துள்ள உணவுகளைச் சாப்பிடுவதன் மூலமாகவும், இடைவிடாத உடற்பயிற்சியின் மூலமாகவும் சரியான உடல் எடையைப் பராமரிக்கவும்.
- நல்ல கருவுறும் தன்மை
- எளிதான கருத்தரிப்பு
- சரியான குழந்தை வளர்ச்சி
சரியான உடல் எடையுடன் கருத்தரிப்பைத் தொடங்குங்கள்
உங்கள் எடை மிகவும் குறைவாக இருந்தால், உங்கள் உடலில் போதிய அளவு சக்தி இல்லை என்று பொருள். இது கருமுட்டை வெளியாவதையும், மாதவிடாய் சுழற்சிகளையும் பாதித்து, கருவுறுதலைக் கடினமாக்கிவிடும். கர்ப்பம் தரிப்பதற்கு முன்பு உங்கள் எடை மிகவும் குறைவாக இருந்தால், அதன்பிறகு எடையை அதிகரிப்பது சவாலான காரியமாக இருக்கும்.
நீங்கள் அதிக எடையுடன் இருந்தால், உங்கள் உடலில் அதிக கொழுப்பு சேமிக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம். அதிகமாக கொழுப்புப் பொருட்கள் உடலில் இருப்பது, அதிகமான ஆண் பாலியல் ஹார்மோன்கள் சுரக்க வழிவகுப்பதோடு, இன்சுலின் உணர்திறனையும் குறைத்துவிடும். இதனால், கருமுட்டை வெளியேறுவது பாதிக்கப்படலாம். இந்த நிலைமைகள் கருவுறுதலுக்கான உங்கள் வாய்ப்புகளைக் குறைத்துவிடலாம். அத்துடன், அதிக எடையுடன் இருப்பது கர்ப்பகாலத்திய நீரிழிவுக் கோளாறு, அதிக இரத்த அழுத்தம் ஆகிய பிரச்சனைகளுக்கு வழிவகுப்பதோடு, குறைவான பிறப்பு எடை/ குறைப் பிரசவம் போன்ற பிரச்சனைகளையும் உண்டாக்கிவிடுகிறது.
உணவுக் கட்டுப்பாடும் கருவுறும் தன்மையும்
உங்கள் உடலின் ஊட்டச்சத்து நிலையானது, உங்கள் கர்ப்பத்தின் பல நிலைகளான கருவுறும் தன்மை, கருத்தரிப்பு, கரு பதிதல் மற்றும் குழந்தையின் உறுப்பு வளர்ச்சி போன்றவற்றைப் பாதிக்கக்கூடும் என்பதை அறியும்போது நீங்கள் ஆச்சரியப்படக்கூடும்.
கருத்தரிப்பதற்கென்று தனியாக எந்த உணவும் இல்லை என்றாலும், 24 முதல் 42 வயதுடைய, கீழ்க்கண்ட உணவுப்பழக்கம் கொண்ட பெண்களுக்கு கருத்தரிக்கும் வாய்ப்பு விகிதம் அதிகமாக இருப்பதாக ஒரு மிகப்பெரிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது:
- செறிவான கொழுப்புகளைக் கொண்ட பொருட்களை குறைவாகவும், நல்ல கொழுப்பைக் கொண்ட பொருட்களை அதிகமாகவும் உட்கொள்ளுதல்
- மாமிசப் புரதங்களை (முட்டை, கோழி மற்றும் இறைச்சி) குறைவாகவும், காய்கறிப் புரதங்களை (பருப்புகள், பீன்ஸ் மற்றும் சோயா பீன்ஸ்) அதிகமாகவும் உட்கொள்ளுதல்
- அதிக நார்ச்சத்துள்ள உணவுகளை உண்ணுதல்
- உயர்-கொழுப்புகள் கொண்ட பால் பொருட்களுக்கு முன்னுரிமை அளித்தல்
- காய்கறி ஆதாரங்களில் இருந்து கிடைக்கப்பெறும் ஹீம் இல்லாத, இரும்புச்சத்துப் பொருட்களை அதிகம் உண்ணுதல்
செறிவான கொழுப்புகளும், மாமிசப் புரதங்களும் கருமுட்டை வெளிவருவதில் பிரச்சினைகளை உண்டாக்கிவிடுவதால், அவை மலட்டுத்தன்மைக்கு காரணமாகி விடுகின்றன. உங்களுக்கு கருமுட்டை வெளிவருவதில் பிரச்சினைகள் இருந்தால், உங்கள் உணவில் இவற்றைத் தவிர்ப்பது உதவிகரமாக இருக்கும்.
ஃபோலிக் அமிலம் கொண்ட இணை உணவை உட்கொள்ளவும்
ஃபோலிக் அமிலம் (ஒருவகை பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்) கொண்ட இணை உணவை கர்ப்பம் தரிக்கும் முன்பாக எடுத்துக்கொள்வது பற்றி உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள். இது உங்கள் குழந்தைக்கு வரக்கூடிய நரம்புக் குழாய் குறைபாடுகளுக்கான (மூளை மற்றும் முதுகுத்தண்டு குறைபாடுகள்) ஆபத்தை 70% வரை குறைக்கும் என்பதால், இதைக் கருவுறும் முன்பாகவோ அல்லது கருவுற்ற ஆரம்ப நாட்களிலோ எடுத்துக்கொள்வது நல்லது.
மற்ற வகை ஊட்டச்சத்துப் பொருட்களையும் உட்கொள்ள மறந்துவிடாதீர்கள்
கருத்தரித்தலுக்கும், ஆரம்ப கர்ப்பத்திற்கும் தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்களாக அடையாளம் காணப்பட்டுள்ளவை வைட்டமின்-பி 12, வைட்டமின்-பி6, வைட்டமின்-ஏ, இரும்புச் சத்து, தாமிரம், துத்தநாகச் சத்து, ஒமேகா-3 உள்ள கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின்-டி போன்றவை ஆகும்.
பல்வேறு உணவுகளை உள்ளடக்கிய ஒரு சமநிலை உணவு, இந்த ஊட்டச்சத்துக்களைப் பெற உங்களுக்கு உதவுகிறது. நீங்கள் ஊட்டச்சத்துக்களைக் கொண்ட ஏதாவது இணை உணவுகளையும் உட்கொள்ள வேண்டும் என்று விரும்பினால், மருத்துவரிடமோ அல்லது ஊட்டச்சத்து நிபுணரிடமோ கலந்தாலோசிக்கவும்.
சுறுசுறுப்புடன் செயலாற்றுங்கள்
நீங்கள் உடல்ரீதியாக சுறுசுறுப்பாக செயல்படுவது, ஓர் ஆரோக்கியமான எடையைப் பெற உதவுகிறது. ஓர் ஆரோக்கியமான எடையைப் பெற்றிருப்பது, ஆரோக்கியமான கர்ப்பத்தையும், ஆரோக்கியமான குழந்தையையும் பெற்றெடுக்கும் வாய்ப்பை அதிகரிக்கிறது.
நீண்ட நேரமாக வாசிக்கிறீர்களா? ஆரோக்கியமான தாய்மையை நோக்கிய பயணத்தில், இதில் உள்ள ஒவ்வொரு வார்த்தையும் மதிப்புமிக்கதாக இருக்கிறது! அனைத்தும் உங்களுக்கு நலமாக அமையட்டும்!!
English | Tamil | Hindi | Telugu | Bengali | Marathi |
0 reviews