கருச்சிதைவு எப்போது ஏற்படுகிறது?
பெரும்பாலான வழக்கமற்ற கருச்சிதைவுகள் கர்ப்பத்தின் ஆரம்ப கட்டங்களில் ஏற்படுகின்றன. கருத்தரித்து 12 வாரங்களுக்குப் பிறகு சுமார் 1% முதல் 2% அளவுக்கே கருச்சிதைவு ஏற்படுகிறது.
கருச்சிதைவுக்குப் பிறகு நான் மீண்டும் கருத்தரிக்க முடியுமா?
நிச்சயமாக முடியும். பொதுவாகவே மீண்டும் கருவுறும் முயற்சியை 2 முதல் 3 மாதங்கள் வரை தள்ளிப் போடும்படி உங்கள் மருத்துவர் பரிந்துரைக்கலாம். இந்தக் கால இடைவெளியில் உங்கள் மனதை குணப்படுத்திக்கொண்டு, மற்றொரு குழந்தையைச் சுமந்து பிரசவிப்பதற்காக உங்கள் உடலையும் தயார் செய்யும் முயற்சிகளில் ஈடுபடுங்கள்.
கருச்சிதைவுக்குப் பின் கருவுறும் வாய்ப்புகள் எப்படி இருக்கும்?
உங்கள் வாழ்க்கையிலும் வாழ்க்கைமுறையிலும் சில எளிய வழிகாட்டுதல்களை நீங்கள் பின்பற்றினால் கருச்சிதைவுக்குப் பின்னும் கருவுறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும்:
1. தினசரி 30 நிமிடங்கள் உகந்த உடற்பயிற்சிகளைச் செய்யுங்கள்.
2. அனைத்து பெரிய அளவிலான மற்றும் நுண் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஆரோக்கியமான, சீரான உணவுப் பழக்கத்தை பின்பற்றவும். அப்பழக்கம், அனைத்து வகையான உணவுத் தொகுப்புகளையும் உள்ளடக்கியதாக இருக்கட்டும்.
3. உங்கள் மன அழுத்தத்தை குறைத்துக் கொள்ளுங்கள்.
4. இறுதியாக, மது மற்றும் புகைப்பழக்கம் போன்ற போதைப்பொருட்களிலிருந்து விலகி இருக்க வேண்டும்.
கருச்சிதைவுக்குப் பின் என் மருத்துவரின் ஆலோசனைகள் எப்படி இருக்கும்?
கடந்த காலத்தில் உங்களுக்கு கருச்சிதைவு ஏற்பட்டிருந்தால், உங்கள் மருத்துவர் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் எடுக்குமாறு உங்களுக்கு ஆலோசனை கூறுவார்.
உங்களுக்கு மீண்டும் மீண்டும் கருச்சிதைவு ஏற்பட்டிருந்தால், உங்கள் மருத்துவர் உங்களுக்கும் உங்களுடைய கணவருக்கும் சில விரிவான சோதனைகள் மற்றும் ஸ்கேன்களைச் செய்யலாம். இதன் மூலம் பிரச்சனை கண்டறியப்பட்டு, அதைக் குணப்படுத்திவிட்டால், மீண்டும் கருத்தரிப்பது கடினமான காரியம் இல்லை. உங்கள் மருத்துவரின் வழிகாட்டுதலின்படி நடந்துகொள்வதை உறுதி செய்திடுங்கள்.
உங்களுக்கு மீண்டும் கருவுறும் நம்பிக்கை ஏற்படும் பொருட்டு, நீங்கள் பயப்படாமல் இருக்க வேண்டும். கருச்சிதைவு என்பது ஒரு துரதிருஷ்டம் தான் என்றாலும், மீண்டுமொரு முறை கருத்தரிக்கும் வாய்ப்பை அது தடுக்காது.
English | Tamil | Hindi | Telugu | Bengali | Marathi |
0 reviews