14 வார கர்ப்பம்
உங்கள் குட்டிச் சிசுவால் இப்போது அற்புதமான விஷயங்களைச் செய்யமுடிகிறது.
சிசுவின் செயல்பாடுகள் இப்போது வெளித்தெரிய ஆரம்பிக்கின்றன. அதன் முகத்தின் தசைகளும், மூளைத் தூண்டுதல்கள் வளர்ந்து, சறுக்குதல், முறுக்குதல், நெழிதல் ஆகியவற்றைச் செய்வதோடு, கவனித்தல் போன்ற செயல்களில் கூட ஈடுபடுகிறது. நீங்கள் அல்ட்ராசவுண்ட் சோதனை செய்கையில், உங்கள் குழந்தை அதன் கட்டைவிரலை சூப்புவதாகத் தோன்றுவதைக் கவனிக்கலாம். உங்கள் சிசு அதன் சிறுநீரகத்திலிருந்து சிறுநீரை உற்பத்தி செய்து, அதை அம்னியோடிக் திரவமாக வெளியேற்றுகிறது. தலையில் இருந்து அடிப்பாகம் வரை, உங்கள் சிசு சுமார் 9 சென்டிமீட்டர் அளவுக்கு வளர்ந்திருக்கும். அதன் உடலின் வளர்ச்சி விகிதத்திற்கு ஏற்ப, அதன் கைகளும் இப்போது நீண்டு வளர்கின்றன. அவை லானுகோ எனப்படும் மெல்லிய, படிவான முடியால் மூடப்பட்டிருக்கும். அதன் கால்கள் இப்போது அதிக நெகிழ்வாகவும் சுறுசுறுப்பாகவும் மாறுகின்றன. அதன் கல்லீரல் இப்போது பித்தத்தை உற்பத்திசெய்ய ஆரம்பிக்கிறது. அதன் மண்ணீரல் இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்ய உதவுகிறது..
15 வார கர்ப்பம்
உங்கள் குழந்தை இப்போது ஒளியை உணர ஆரம்பிக்கிறது.
உங்கள் குழந்தை இப்போது 11.5 செ.மீ. அளவுக்கு வளர்ச்சியுற்று சுமார் 85 கிராம் எடையுள்ளதாக இருக்கிறது. அதன் நுரையீரல் பகுதிகள் இப்போது மேம்பட ஆரம்பிக்கின்றன. அதன் கால்கள் வளர ஆரம்பிக்கின்றன. அது இப்போது தன் கை, கால்களை இயக்க முடியும். அதற்கு சுவை மொட்டுகள் உருவாகியிருந்த போதிலும், இந்தக் கட்டத்தில் அதனால் அதிக உபயோகம் இல்லை.
16 வார கர்ப்பம்
உங்கள் குழந்தை அதிவிரைவான வளர்ச்சிக் கட்டத்திற்கு தயாராகி வருகிறது.
இப்போது சுமார் 12 சென்டிமீட்டர் வரை நீளம் வளர்ந்துள்ள உங்கள் குழந்தை, அடுத்த சில வாரங்களில் அதிவிரைவான வளர்ச்சியைக் காண ஆரம்பிக்கும். கால்களும் தலையும் அதிக வளர்ச்சி பெறுவதோடு, அதன் கண்களும் காதுகளும் தங்கள் முழுமையான வடிவங்களில் தோற்றமளிக்கின்றன. இப்போது அதன் கண்கள் ஒளியை உணர முடிவதால், ஒளியை விட்டு அவை நகர்கின்றன. இதயம் இப்போது முன்பை விட அதிக அளவு இரத்தத்தை உந்தித் தள்ள ஆரம்பிக்கிறது. அடுத்து வரும் வாரங்களில் இந்த அளவு இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உங்கள் குழந்தை இப்போது எதிர்வினைகளையும் உருவாக்க ஆரம்பிக்கிறது. இந்த கட்டத்தில் உங்கள் அடிவயிற்றை நீங்கள் சுருக்கினால், உங்கள் குழந்தை அதை எதிர்த்து நெழிவதை நீங்கள் நிச்சயம் உணரலாம்!
17 வார கர்ப்பம்
உங்கள் குழந்தை இப்போது அதன் எலும்பு மூட்டுகளை நகர்த்துகிறது.
உங்கள் குழந்தையின் சிறிய எலும்புக்கூடு இப்போது மென்மையான குருத்தெலும்பிலிருந்து எலும்பாக மாறி வருகிறது. தொப்புள்கொடி வலுவானதாகவும் தடிமனாகவும் மாறுகிறது. சிசுவால் இப்போது மூட்டுகளை நகர்த்த முடிக்கிறது. 140 கிராமுக்கும் சற்று அதிக எடையுடன் இருக்கும் உங்கள் குழந்தை, சுமார் 12 முதல் 13 செ.மீ நீளத்திற்கு இப்போது வளர்ந்துள்ளது. இந்தக் கட்டத்தில் அதன் வியர்வைச் சுரப்பிகள் மேலும் வளரத் தொடங்குகின்றன.
English | Tamil | Hindi | Telugu | Bengali | Marathi |
0 reviews