Sorry, you need to enable JavaScript to visit this website.
Search
Not a member? Register here
Share this Article
X
The Sixth Month of Pregnancy

கர்ப்பத்தின் ஆறாவது மாதம்

(0 reviews)

23 முதல் 27 வாரங்கள் வரையிலான உங்கள் கர்ப்பம்: உங்கள் குழந்தை இப்போது தன் இயக்கங்களை அதிகப்படுத்துகிறது. இந்த உலகின் முதல் காற்றைச் சுவாசிக்க அந்த இயக்கங்கள் அதற்கு பின்னாளில் உதவுகின்றன. இப்போது அது அம்னியோடிக் பாய்மத்தை உள்ளிழுத்து வெளிவிடுகிறது. உங்கள் குழந்தை மூச்சிரைக்கும் உற்சாகமான தாள இயக்கங்களை இப்போது நீங்கள் உணரலாம்.

Wednesday, November 29th, 2017

23 வார கர்ப்பம்

உங்கள் குழந்தை இப்போது உங்கள் இயக்கங்களுக்கு பதிலளிக்கிறது.

இந்த நிலையில், குழந்தையின் தோல் சுருங்கி இருக்கும். தோலின் கீழ் கொழுப்பு அடுக்குகள் திரளத் தொடங்கிய பிறகு இந்த சுருக்கங்கள் மாறும். 20 சென்டி மீட்டருக்கு அதிகமான நீளமும், கிட்டத்தட்ட 450 கிராம் எடையும் கொண்ட உங்கள் குழந்தை, நீங்கள் நகரும் போது, தானும் நகர்வதை உணரலாம். நீங்கள் இப்போது உங்கள் நகர்வுகளை மென்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.

24 வார கர்ப்பம்

இப்போது முடி வளர ஆரம்பிக்கிறது.

சுமார் 22 சென்டிமீட்டர் நீளமும், 680 கிராம் எடையும் கொண்ட உங்கள் குழந்தைக்கு, இன்னும் கொழுப்பு படிவுகள் தொடங்காததால், அது மிகவும் மெலிதாகத் தெரிகிறது. அதன் முடிக்கு இன்னும் நிறமி இல்லை என்பதால், முடியை அடையாளம் காண முடியாவிட்டாலும், அது வேகமாகவே வளர்கிறது. அதன் மூளையும் விரைவாக வளர்கிறது.  அதன் மெல்லிய, சுருக்கம் மிக்க, ஒளி ஊடுருவும் தன்மைகொண்ட தோல், அடுத்த மூன்று மாதங்களில் ஒரு மென்மையான சருமமாக உருவெடுக்கும்.

25 வார கர்ப்பம்

உங்கள் குழந்தையின் நுரையீரலில் கிளைகள் வளர ஆரம்பிக்கின்றன.

உங்கள் குழந்தை இப்போது சுமார் 23 சென்டிமீட்டர் நீளமும், 750 கிராம் எடையும் கொண்டதாக இருக்கிறது. உங்கள் குழந்தையின் நுரையீரல்கள் மூச்சுவிடத் தயாராகும்பொருட்டு, கிளைகளையும் ஒரு பசைப்பொருளையும் உற்பத்தி செய்கின்றன. இந்த பசைப்பொருள், வெளியுலகில் மூச்சு விடுவதற்கு குழந்தைக்கு உதவும் வகையில் உருவாகிறது.

26 வார கர்ப்பம்

உங்கள் குழந்தை இப்போது சுவாசிக்கத் தயாராகிறது.

பிரசவத்திற்குப் பின், வெளியுலகின் முதல் காற்றை சுவாசிக்கும் பொருட்டு, தன் இயக்கங்களை மேம்படுத்துகிறது உங்கள் குழந்தை. அது அம்னியோடிக் பாய்மத்தை உள்ளிழுத்து, வெளிவிடுகிறது. குழந்தையின் காது நரம்புகள் இப்போது வளர்ந்து வருகின்றன. அதன் கேட்கும் திறன் அதிகரிப்பதோடு, தன் தாய் தந்தையின் குரல்களுக்கு இடையிலுள்ள வேறுபாட்டை உணரும் அளவிற்கு அத்திறன் மேம்படுகிறது.

27 வார கர்ப்பம்: உங்கள் கர்ப்பத்தின் மூன்றாவது மும்மாதம் தொடங்குகிறது

உங்கள் குழந்தை இப்போது தூக்கம்-விழிப்பு சுழற்சியை உருவாக்குகிறது.

உங்கள் குழந்தையை இப்போது தலையில் இருந்து கால் விரல் வரை அளக்க முடியும். முன்பு, அதன் கால்கள் அதன் மார்பை நோக்கி மடங்கி இருந்ததால், இவ்விதம் அளப்பது கடினமாக இருந்தது. சுமார் 900 கிராம் எடையும், 38 சென்டிமீட்டர் நீளமும் கொண்டிருக்கும் உங்கள் குழந்தை, இப்போது இன்னும் அதிக ஒழுங்கமைவுடன் வளர ஆரம்பிக்கிறது. அது வழக்கமான இடைவெளிகளில் தூங்கி விழிக்கிறது. சிலநேரம் அது தன் விரல்களைக் கூட சூப்புகிறது. நீங்கள் அதன் லயம் மிக்க இயக்கங்களை உணர முடியும்: அது உங்கள் குழந்தையின் விக்கல்கல் தான்! இவை அதிக காலம் நீடிப்பதில்லை என்பதால், அதைப் பற்றி அதிகம் கவலைப்படத் தேவையில்லை.

English | Tamil | Hindi | Telugu | Bengali | Marathi

Read more

Join My First 1000 Days Club

It all starts here. Expert nutrition advice for you and your baby along the first 1000 days.

  • Learn about nutrition at your own paceLearn about nutrition at your own pace
  • toolTry our tailored practical tools
  • Enjoy member only benefits and offersEnjoy member only benefits

Let's start this!

Related Content
Article Reviews

0 reviews

Still haven't found
what you are looking for?

Try our new smart question engine. We'll always have something for you.