Sorry, you need to enable JavaScript to visit this website.
Search
Not a member? Register here
Share this Article
X
 Pregnancy and Your Body

கர்ப்பமும் உங்கள் உடலும்

(0 reviews)

உங்கள் உடல் எவ்வாறெல்லாம் உருமாறுகிறது என்பதை பற்றி நீங்கள் ஆச்சரியம் கொள்ளும் அளவுக்கு, கர்ப்பம் உங்கள் உடலில் விரைவான மாற்றங்களைக் கொண்டு வருகிறது,  உங்கள் தோற்றம், உங்கள் உடல் எடை, எப்போதும் பெருத்து வரும் இடுப்பு, மார்பகங்கள், உங்கள் துணிகளின் அளவு மாறுதல்கள் ஆகியவை பற்றியெல்லாம் இப்போது அதிகம் நினைத்துப் பார்ப்பீர்கள்! பிரசவத்திற்குப் பிறகு உங்கள் உடலின் தோற்றம் என்ன ஆகப்போகிறதோ என்பதை நினைத்தும் நீங்கள் ஆச்சரியம் கொள்வீர்கள்.

Wednesday, November 29th, 2017

இப்போது உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள் இயற்கைபானவை: இந்த மாற்றங்கள் கர்ப்ப காலத்தில் வெகு இயல்பாகத் தோன்றுபவை. இந்த உண்மையை நீங்கள் ஏற்றுக்கொள்வதோடு, உங்கள் கணவரையும் அதை ஏற்றுக்கொள்ள ஊக்குவிக்க வேண்டும். உங்கள் உடல் எடை கூடுவதும், உங்கள் உடல் தோற்றம் மாறுவதும் இருவரும் மகிழ்ச்சியடைவதற்கான விஷயங்களாகவே இருக்க வேண்டும்.

கர்ப்பம் என்பது ஒரு பாக்கியம்: இதன் மூலம் உங்களுக்கு பாக்கியம் உண்டாவதோடு, பூமிக்கு ஒரு மனித உயிரைச் சுமந்துவரும் திறனும் உங்களுக்கு வாய்க்கிறது. இத்துடன் தொடர்புடைய உண்மைகளை எல்லாம் அறிந்து அதற்காகப் பெருமிதம் கொள்ளுங்கள்.

கர்ப்பம் உங்கள் தோற்றத்தில் மாற்றத்தை உண்டாக்குவது உங்கள் நன்மைக்காகவே: கர்ப்பகாலத்தில் உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள், உங்கள் வாழ்வில் ஒரு நீண்டகால நன்மையை ஏற்படுத்துகிறது. உண்மையில், கர்ப்பகாலத்தில் கூட, சரியான உடற்பயிற்சி முறை மற்றும் ஆரோக்கியமான, சமநிலையான உணவுப் பழக்கங்களை மேற்கொண்டால், உங்கள் இயற்கையான உடல் தோற்றத்தை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு தக்க வைத்துக்கொள்ள முடியும். அவற்றையெல்லாம் செய்வதற்கு முன்பாக, உங்கள் மருத்துவரிடம் நீங்கள் கலந்தாலோசிக்க வேண்டும்.

வசதியான உடைகள் உங்கள் உடலுக்கு நன்மை பயக்கும்: நீங்கள் உடல்ரீதியாக நல்லவிதமாக உணர்வதற்கான வழிகளில் ஒன்று வசதியான மகப்பேறு உடைகளை அணிவதாகும். இது உங்களை உடல் ரீதியாக நிதானமாக வைத்திருப்பதோடு, உங்கள் அழகை அதிகரிக்கவும் உதவுகிறது.

கர்ப்பகால உணவுத் திட்டத்தின் நன்மைகள்

நீங்கள் நலமாக உணர்வதற்கான முக்கியமான காரணிகளில் ஒன்று உங்கள் கர்ப்பகால உணவுகளாகும். ஒரு ஊட்டச்சத்து நிறைந்த உணவுத் திட்டமானது, உங்களை உடல்ரீதியாக பொருத்தமாக வைப்பதோடு, உங்கள் சருமத்தையும் நன்கு பராமரிக்கிறது. கர்ப்ப காலத்தில் உண்ணும் ஆரோக்கியமான உணவுகளின் நன்மைகளை கீழ்க்கண்டவாறு பட்டியலிடலாம்:

ஒளிரும் சருமம்: வைட்டமின்-ஏ மற்றும் வைட்டமின்-இ போன்ற ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் உங்கள் சருமத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்கின்றன. அதிகமான திரவ உணவுகளை உட்கொள்வதன் மூலம், உங்கள் உடலில் நீர்ச்சத்து குறைந்து போகாமல் இருப்பதை உறுதிசெய்வதோடு, உங்கள் உடலின் நச்சுப்பொருட்களை வெளியேற்றி,  சருமத்திற்கு ஒரு இயல்பான பளபளப்பைக் கொண்டு வருகிறது. வைட்டமின்-சி என்பது கொலாஜன் மற்றும் நோயெதிர்ப்பு மருந்துகளின் ஒரு பகுதியாகும். இது உங்கள் சருமத்திற்கு நல்ல பலன்களைக் கொண்டுவருகிறது.

மெல்லிய சரும மேற்பரப்பு: அத்தியாவசியமான கொழுப்பு அமிலங்கள் மற்றும் அமினோ அமிலங்களோடு, வைட்டமின்-ஏ மற்றும் வைட்டமின்-இ ஆகியவற்றையும் உள்ளடக்கிய உங்கள் உணவுத் திட்டத்தால், தோலுக்கு அடியில் உள்ள எபிதெலியல் திசுக்களின் ஒருங்கிணைப்பு அதிகரித்து, உங்கள் சருமம் மென்மைத் தன்மையைப் பெறுகிறது.

வலிமையான, ஆரோக்கியமான கூந்தல்: அத்தியாவசியமான நுண் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவு முறையின் விளைவாக, உங்கள் தலைமுடி வலிமையானதாகவும், ஆரோக்கியமானதாகவும், பளபளப்பானதாகவும் ஆகிவிடும்.

கர்ப்பகாலத்தின் போது உட்கொள்ளப்படும் உணவுகள் கீழ்க்கண்ட தேவைகளை நிறைவேற்றப் போதுமானதாக இருக்கவேண்டும் அ) தாய்க்குத் தேவையான ஆரோக்கியம் ஆ) வளரும் கருவிற்கான தேவைகள் இ) பிரசவத்தின் போது தேவைப்படும் வலிமையும், ஊக்கமும் ஈ) நன்கு வெற்றிகரமான தாய்ப்பால் ஊட்டும் நிலை

கர்ப்பகால உணவுத் திட்டம் மென்மையானதாகவும், சத்துள்ளதாகவும், எளிதில் செரிமானம்  ஆகக்கூடியதாகவும், புரதங்கள், தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்ததாகவும் இருக்க வேண்டும்.

உங்கள் மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரால் பரிந்துரைக்கப்பட்ட முறையான உணவு முறையைப் பின்பற்றவும். பொதுவாகவே நீங்கள் மகிழ்ச்சியாகவும், கவலைப்படாமலும் இருக்க வேண்டும். உங்கள் உடல் பலவிதமாக நெகிழும் தன்மைகளைக் கொண்டது. இப்போது, உங்கள் குழந்தைக்கு இடமளிக்கும்பொருட்டு அது மாறுகிறது. பிரசவத்திற்குப் பின்பு, உங்கள் உடல் அதன் முந்தைய வடிவத்தை விரைவில் பெற்றுவிடும்.

English | Tamil | Hindi | Telugu | Bengali | Marathi

Read more

Join My First 1000 Days Club

It all starts here. Expert nutrition advice for you and your baby along the first 1000 days.

  • Learn about nutrition at your own paceLearn about nutrition at your own pace
  • toolTry our tailored practical tools
  • Enjoy member only benefits and offersEnjoy member only benefits

Let's start this!

Related Content
Article Reviews

0 reviews

Still haven't found
what you are looking for?

Try our new smart question engine. We'll always have something for you.