Sorry, you need to enable JavaScript to visit this website.
Search
Not a member? Register here
Share this Article
X
Can Pregnancy and Profession Go Together

கர்ப்பமும் பணியும் ஒருங்கிணைந்து போகுமா?

(0 reviews)

ஒரு தாயின் வாழ்க்கையில் கர்ப்பத்தைக் காட்டிலும் அழகான கட்டம் இருக்க முடியாது. ஆனால் அதே நேரத்தில் பணிபுரியும் தாய்மார்கள் தங்கள் கர்ப்பகால வாழ்வில், அவர்களுக்கே உரிய சொந்த சவால்களையும்  எதிர்கொண்டுதான் ஆகவேண்டும்.

Tuesday, December 5th, 2017

நீங்கள் பணிபுரியும் கர்ப்பிணித் தாயாக இருக்கும் பட்சத்தில், கர்ப்பகாலத்தில் கூட, உங்கள் பணியிடத்தை விலக்கித் தள்ளமுடியாது. சில வேளைகளில் உங்களுக்கு இருக்கும் நிதித் தேவைகளால், நீங்கள் விடுப்பு எடுக்க விரும்பினாலும், அதை எடுக்க முடியாத நிலை இருக்கலாம். பணிச்சூழல்கள் எல்லா நேரங்களிலும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு பாதுகாப்பாகவும் வசதியாகவும் இருப்பதில்லை. அங்கு உண்டாகும் கதிர்வீச்சுகள், தொற்றுநோய்கள் மற்றும் நீண்ட அல்லது தாமதமான வேலை நேரங்கள் போன்றவை உங்கள் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிப்பவையாக அமையக் கூடும்.

நீங்கள் பணிபுரியும் கர்ப்பிணித் தாயாக இருக்கும் பட்சத்தில், கர்ப்பகாலத்தில் கூட, உங்கள் பணியிடத்தை விலக்கித் தள்ளமுடியாது. சில வேளைகளில் உங்களுக்கு இருக்கும் நிதித் தேவைகளால், நீங்கள் விடுப்பு எடுக்க விரும்பினாலும், அதை எடுக்க முடியாத நிலை இருக்கலாம். பணிச்சூழல்கள் எல்லா நேரங்களிலும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு பாதுகாப்பாகவும் வசதியாகவும் இருப்பதில்லை. அங்கு உண்டாகும் கதிர்வீச்சுகள், தொற்றுநோய்கள் மற்றும் நீண்ட அல்லது தாமதமான வேலை நேரங்கள் போன்றவை உங்கள் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிப்பவையாக அமையக் கூடும்.

கர்ப்பத்திற்கான திட்டத்தை முன்கூட்டியே வகுக்கவும்.

உங்கள் கர்ப்பம் பாதுகாப்பானதாகவும், பலமானதாகவும் மற்றும் ஆரோக்கியமானதாகவும் இருக்க, பல மாதங்களுக்கு முன்னதாகவே உங்கள் கர்ப்பம் தரித்தலை நீங்கள் திட்டமிட வேண்டும். அப்போது, உங்கள் பணியிடத்தில் உள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளையும் நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.

உங்கள் பணிநேர அட்டவணையை சரியாகத் திட்டமிட்டு, மன அழுத்தத்தை நீக்குங்கள். பணியிட அழுத்தம் மற்றும் வளர்ந்துவரும் கர்ப்பத்தின் பெருகி வரும் கோரிக்கைகளுக்கு ஏற்பத் திட்டமிடுவது எப்போதும் ஒரு நல்ல நடவடிக்கை. மகப்பேறுகால தேவைகள் மற்றும் உங்கள் பிரசவத்திற்குத் தேவையான விடுப்புகள் ஆகியவற்றால், வேலை பாதிக்கப்படாதவாறு முன்பே நன்கு திட்டமிடுங்கள். முடிந்தால், உங்களுடைய கர்ப்பகாலத்தை திறன்களை வெளிப்படுத்தும் விதமாகவும், பதவி உயர்வு, சம்பள உயர்வு மற்றும் மகப்பேறு கால விடுப்புகள் போன்றவை பாதிக்கப்படாத வகையிலும் திறம்படத் திட்டமிடுங்கள்.

நீங்கள் இல்லாமலே பணி நடக்க ஏற்பாடு செய்யுங்கள். ஒரு நேர்மையான பணியாளர் என்ற முறையில், உங்களுடைய பணி நீங்கள் இல்லாத போதும் நடக்கும்படியான ஏற்பாடுகளைச் செய்வது உங்கள் பொறுப்பு. தொடர்ந்து பணித் திட்டங்கள் இருந்தால், அவற்றை தொடர்ச்சியாக மேற்கொள்வதற்கான ஒரு தீர்வை நீங்கள் பரிந்துரைக்கலாம். முன்னரே உங்கள் மகப்பேறுகால விடுப்புகளைத் திட்டமிடலாம் என்றாலும், மூன்றாவது மும்மாதத்தில் வரும் எதிர்பாராத கர்ப்பகால சூழ்நிலைகளாலோ அல்லது சிக்கல்களாலோ விஷயங்கள் நிச்சயமற்றதாகிவிடும்.

உங்கள் மருத்துவ விடுப்புகளைச் சேமித்து வையுங்கள். திடீர் பிரச்சனைகளைச் சமாளிக்க உங்கள் மருத்துவ விடுப்புகளைச் சேமித்து வைப்பது தீர்வாக அமையலாம். அதற்கு உங்கள் ஆரம்பக் கர்ப்பகாலத்தில் அதிகப் பளுவுடன் வேலைசெய்ய வேண்டும் என்று அர்த்தமில்லை. ஆரம்பத்தில் இருந்தே உங்கள் கருவில் வளரும் குழந்தையின் ஆரோக்கியத்தை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் வேலை செய்யும்போது இடையில் அவ்வப்போது விடுப்பு எடுத்துக்கொண்டு ஓய்வில் இருப்பது, உங்களை புத்துணர்வு கொள்ளச் செய்யும் வழிகளில் ஒன்றாகும்.

நீங்கள் பணிக்கு விடுப்பு எடுக்கும்போது ஒரு மாற்று ஏற்பாட்டைச் செய்யுங்கள். ஒரு பொறுப்பான பணியாளர் என்ற முறையில்,  நீங்கள் ஒருவரை உங்களுக்கு மாற்றாக ஏற்பாடு செய்து அவருக்குத் தேவையான பயிற்சிகளை அளிக்கலாம். இதன் விளைவாக, உங்கள் பணியை அவரால் தொடர்ந்து எளிதாகக் கையாளமுடியும். இது பணியை அலட்சியப்படுத்திவிட்டேனோ என்ற குற்ற உணர்விலிருந்து உங்களைக் காப்பாற்றுவதுடன், உங்கள் விடுப்பு நாட்களை கவலையில்லாமல் செலவழிக்கவும் உதவுகிறது.

உங்கள் மருத்துவரால் இந்த திட்டமிடலில் உங்களுக்கு உதவ முடியும். மிக முக்கியமாக, உங்களுக்கான சிறந்த திட்டமிடுபவரே உங்கள் மருத்துவர்தான். ஆகவே, உங்கள் வேலையின் வகை மற்றும் பிற தேவைகளை அவரிடம் விளக்கி, உங்கள் பணிநேர அட்டவணையை, மன அழுத்தம் குறையும் வகையில் எப்படித் திட்டமிடுவது என்பது பற்றிய ஆலோசனையைப் பெறுங்கள்.

பணியிடத்தில் நீங்கள் கர்ப்பமாக இருப்பதைச் சொல்வதற்குத் தயங்காதீர்கள்.

பல பெண்கள் தங்கள் கர்ப்பத்தை பணியிடத்தில் அறிவிப்பதை மிகவும் கடினமாக உணர்கிறார்கள். உங்கள் நிறுவன உரிமையாளர்கள் மற்றும் சக ஊழியர்களின் பல எதிர்விளைவுகளுக்கு இந்த 'நற்செய்தியை' அவர்களுக்கு அறிவிக்காததும் ஒரு காரணமாக இருக்கலாம். எனவே, அதை அறிவிக்கத் தயங்காதீர்கள்.

கர்ப்பத்தை அறிவிப்பது பற்றி புத்திசாலித்தனமாக முடிவு செய்யுங்கள். கர்ப்பம் பற்றி அறிவிக்க சிறிது காலம் காத்திருப்பது நல்லது என்று சிலர் சொல்லலாம். உங்கள் கர்ப்பத்தைப் பற்றி வெளிப்படையாக அறிவிக்க வேண்டுமா இல்லையா என்று குழம்புவதற்குப் பல காரணிகள் உள்ளன. கருச்சிதைவு ஏற்பட்டு விடுமோ என்ற பயம், சில பணிகளை உங்களுக்கு ஒதுக்கித் தராமல் சகபணியாளர்களும், மூத்த அதிகாரிகளும் உங்களை ஒதுக்கி விடுவார்களோ என்ற கவலை ஆகியவை நீங்கள் வெளிப்படையாக கர்ப்பத்தைப் பற்றி அறிவிப்பதைத் தடுக்கலாம். அத்துடன்,  நீங்கள் ஊதிய உயர்வு அல்லது பதவி உயர்வை எதிர்பார்த்துக் காத்திருக்கிறீர்கள் என்றால், அந்த நேரத்தில் கர்ப்பம் பற்றி அறிவிப்பது உங்களுக்கு கிடைக்க வேண்டியதைக் கிடைக்காமல் செய்துவிடலாம்.

பாதுகாப்பான பக்கத்தில் இருக்க நீங்களே கர்ப்பம் பற்றி அறிவித்துவிடுங்கள். நீங்கள் கர்ப்பமாக இருக்கும்போது, அதைக் கூறிவிடுவது நல்லது என்பதற்கான சில காரணங்கள் உள்ளன. உதாரணமாக, உங்கள் மூத்த அதிகாரிகளிடம் அதுபற்றித் தெரிவித்திருந்தால் மட்டுமே அவர்கள் உங்களை பணியிட  ஆபத்துகளில் இருந்து விலக்கி பாதுகாப்பாகவும், வசதியாகவும் இருக்கும் இடங்களில் மட்டும் பணிசெய்ய வைக்கமுடியும். அத்துடன், நீங்கள் உங்கள் நிறுவன உரிமையாளர் வேறு யார் மூலமாவது  தெரிந்துகொள்ளும் முன்பாக, நீங்களே சொல்லி விடுவது நல்லது என்றும் நீங்கள் நினைக்கலாம். உங்களுக்கு வரும் வாந்தி, குமட்டல் போன்ற மசக்கைகளும், உங்கள் உடலின் தோற்றத்தில் ஏற்படும் மாற்றங்களும் நீங்கள் சொல்வதற்கு முன்பாகவே உண்மையை வெளிப்படுத்தி விடலாம் என்பதால் அது உங்களுக்கு கொஞ்சம் சங்கடத்தை ஏற்படுத்திவிடும்.

ஆரம்பத்திலேயே அறிவிப்பது உங்கள் பணிச் சுமையை எளிதாக்கலாம். ஆரம்பத்திலேயே அறிவிப்பதன் மூலம், உங்கள் சக  பணியாளர்களிடமிருந்து உதவி பெறுதல், மூத்த அதிகாரிகளிடமிருந்து தேவைப்படும் போது ஆதரவைப் பெறுதல் போன்ற நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும் என்பதால், உங்கள் கர்ப்பகால வாழ்க்கை உங்களுக்கு எளிதாக அமையும். உங்களுக்கு அளவுக்கு அதிகமான வேலைச் சுமையை கொடுக்க மாட்டார்கள். அத்துடன், தேவையான போது, ஓய்வும் எடுத்துக் கொள்ளலாம். உங்கள் மனிதவள மேலாளரைத் தொடர்புகொண்டு, நிறுவனம் வழங்கும் கர்ப்பகால நன்மைகள் பற்றிய ஒரு நுண்ணறிவைப் பெறுவதும் ஒரு நல்ல நடவடிக்கை.  கர்ப்பமாக இருந்தாலும், பணியிலும் எளிதாக உங்கள் கடமைகளை நிறைவேற்றும் திறன் உங்களுக்கு இருப்பதை நிறுவன உரிமையாளர் நம்பும்படி செயல்படுங்கள்.

கர்ப்பகாலப் பிரச்சனைகளால் சுறுசுறுப்பாக வேலை செய்வதிலிருந்து பின்வாங்காதீர்கள்.

பணியில் இருக்கும் கர்ப்பிணித் தாய்மார்கள்,  பணியிடத்தில் சில கர்ப்பகாலப் பிரச்சனைகளை அனுபவிப்பதால், அவை அவர்களை சுறுசுறுப்பாக வேலை செய்வதிலிருந்து பின்னுக்கு இழுக்கிறது. இத்தகைய சூழ்நிலைகளையும் பணியிடத்தில் சமாளிக்க நீங்கள் தயாராக இருக்க வேண்டும்.

குமட்டலை அதிகப்படுத்தும் சூழ்நிலைகளைத் தவிர்க்கவும். கர்ப்பகாலத்தின் போது , எல்லா பிரச்சனைகளைக் காட்டிலும் சிக்கலானதாக கர்ப்பிணித் தாய்மார்கள் உணர்வது, குமட்டலும், வாந்தியும்தான். குமட்டல் உணர்வைத் தவிர்ப்பதற்கு, குமட்டலைத் தூண்டும் கசகசப்பான இடங்களுக்குச் செல்வதையும், வாசம் பீறிடும் உணவுப் பொருட்கள் போன்ற பொருட்கள் இருக்கும் இடங்களுக்குச் செல்வதையும் தவிருங்கள். அவ்வப்போது வரும் பசியை அடக்க, கொட்டைகள் (நட்ஸ்) போன்ற ஆரோக்கியமான தின்பண்டங்களை எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் சாப்பிடும் நேரத்தை  3 பெரிய சாப்பாட்டு நேரத்திற்குப் பதிலாக, 5 சிறிய உணவு நேரமாகப் பிரிக்கலாம். உங்கள் உடலில் நீரிழப்பைத் தவிர்ப்பதற்கு  நிறைய (குறைந்தது ஒரு நாளில் 2 லிட்டர்) தண்ணீர் குடியுங்கள். தண்ணீர் உங்கள் மொத்த உடலையும் சுத்தப்படுத்தி, மன அழுத்தத்தையும் குறைக்கிறது. தினமும் பகலில் புதிய பழச்சாறுகள், காய்கறிச் சாறுகள், பழம்-பால் கலவைகள், மோர் முதலியவற்றை நீங்கள் அருந்தலாம். உங்களுக்கு திடீரென்று குமட்டல் வந்தால் எளிதில் வெளியேறும் விதமாக, அலுவலகத்தில் நடக்கும் கூட்டங்களின் போது கதவுக்கு அருகில் அமர்ந்துகொள்வது நல்லது.

அடிக்கடி ஓய்வுகொண்டு சோர்வை விரட்டுங்கள். சோர்வு கூட, உங்கள் வேலைக்கு ஒரு உண்மையான தடங்கலாக இருக்கலாம். ஆக, சோர்வு வரும்போது அதை நீங்கள் கவனிக்க வேண்டும் . அலுவலகத்தில்  உள்ள உங்கள் மேஜையிலோ அல்லது உங்கள் அலுவலகத்தில் உள்ள ஓய்வு அறையிலோ ஒரு குட்டித் தூக்கம் போடுவது உங்கள் களைப்பை போக்கி விடும். அது சாத்தியம் இல்லை என்றால், சிறிது நேரம் உங்கள் கண்கள் மூடி, உங்கள் கால்களையும் கைகளை சிறிது நீட்டி புத்துணர்வு பெறலாம். சிறிய நடைப்பயிற்சியும் கூட உங்களுக்கு புத்துணர்வை மீட்டுத்தரும். நீங்கள் வாகனத்தை ஓட்டிக்கொண்டு பணிக்குச் சென்றால், உங்கள் வேலையைத் தொடங்குவதற்கு முன் கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். நீண்ட தூரம் வாகனத்தை ஓட்டுவதைத் தவிர்க்கவும். முடிந்தால், ஒரு ஓட்டுநரை பணியமர்த்திக் கொள்ளவும்.

உங்கள் முதுகை வசதியாக இருத்தி வையுங்கள். கர்ப்பத்தின் பிற்பகுதியில் அடிக்கடி முதுகுவலிப் பிரச்சனைகள் வரக்கூடும். அதனால், நீங்கள் நாள் முழுக்க உட்கார்ந்து வேலை செய்யும் இருக்கையில் வசதியாக  அமர்ந்துகொள்ள வேண்டும். எனவே, நேரான முதுகுப் பக்கத்தையும், அதன் சாய்வை சரிசெய்துகொள்ளும் அமைப்பும் கொண்ட ஒரு நாற்காலியைத் தேர்வு செய்துகொள்ளுங்கள்.  இதனால் உங்கள் முதுகுக்கு அழுத்தம் இல்லாமல் நிவாரணமாக இருக்கும். உங்கள் நாற்காலியின் கைப்பிடியும், கால் வைக்கும் பகுதியும் சரியாக இருக்கிறதா என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள். அடிக்கடி கொஞ்சநேரம் நடந்துவிட்டு வர மறக்காதீர்கள்.

வசதியான துணிகளையே எப்போதும் அணியுங்கள். தளர்வாகவும், மிகவும் வசதியாகவும் இருக்கும் ஆடைகளையே எப்போதும் அணியுங்கள். ஷூக்களுக்குப்  பதிலாக, ஓசை எழுப்பாத மென்மையான காலணிகளை அணிந்துகொள்ளுங்கள்.  அலுவலகத்தில் அணிய முடியாவிட்டாலும், உங்கள் அலுவகப் பயணத்தின்போது ஓசை எழுப்பாத மென்மையான காலணிகளுக்கு மாறிவிடுங்கள். கர்ப்பகாலத்தில் பருத்தி துணிகளும், லினன் துணிகளுமே மிகவும் வசதியான துணிகளாகும்.

அலுவலகப் போக்குவரத்தை குறைத்துக்கொள்ளுங்கள். கர்ப்பகாலத்தில் அலுவலகத்திற்கான பயணக் களைப்பால் ஏற்படும் மன அழுத்தம் மிக அதிகமாக இடுக்கும். நீங்கள் வீட்டிலிருந்து வேலை செய்வதற்கு அனுமதிக்குமாறு உங்கள் மூத்த அதிகாரிகளிடம் கோரிக்கை வையுங்கள். பணிக்குப் போகும்போது, முன்காலையில் பயணிக்க முயலுங்கள். பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தி  அலுவலகம் செல்வோர், கூட்ட நெரிசலில் ஏற்படும் முழங்கைக் குத்துக்களிருந்து உங்கள் சிசுவைப் பாதுகாக்க கூடுதல் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

அடுத்தடுத்த பணிகளைத் திட்டமிடுவது மன அழுத்தத்தைத் தடுக்க உதவுகிறது. பணியைத் திட்டமிடுவதும், முக்கிய வேலைகளுக்கு முன்னுரிமை அளிப்பதும் எப்போதும் மன அழுத்தத்தை குறைக்க உதவும். வரவிருக்கும் வாரம் அல்லது மாதத்தில் உங்கள் பணித்திட்டத்தில்  நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை முன்கூட்டியே திட்டமிடுங்கள். உங்கள் குழுவினருக்கு நிலைமையை விளக்கி அவர்களிடமிருந்து தேவையான உதவியைப் பெற்றிடுங்கள். உங்கள் மீது அதிகப் பணிசுமை திணிக்கப்பட்டால், மூத்த அதிகாரிகளிடம் தெளிவாகவும், அதே நேரத்தில் மரியாதையுடனும் அதைப் பற்றிக் கூறுங்கள். உங்கள் மன அழுத்தத்திலிருந்து விடுவித்துக் கொள்வதற்கான முறைகளைப் பின்பற்றுங்கள்.

இன்றைய காலகட்டத்தில், பணி என்பது தாய்மார்களுக்கு வாழ்வில் பிரிக்க முடியாத ஒரு அங்கமாக ஆகிவிட்டது. ஆனால், கர்ப்பமோ ஆதிகாலத்திலிருந்து வரும் மிகப்பெரிய தெய்வீகத் தன்மை கொண்ட விஷயமாக இருந்து வருகிறது. கர்ப்பத்தையும், வேலையையும் ஒருங்கிணைக்கும் வழிமுறைகளைக் கண்டறிந்து, இரண்டும் ஒன்றுக்கொன்று கரம் கோர்த்துக் கொண்டு உதவியாக இருக்குமாறு செய்வதே ஞானம் ஆகும். உழைக்கும் கர்ப்பிணித் தாய்மார்கள் கருத்தில் கொள்ளவேண்டிய முக்கியமான உண்மைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் எது உங்களுக்குச் சிறந்தது என்பதை அறிந்துகொண்டால், நீங்கள் ஒரு அருமையான தாயாகவும், நல்ல தொழில் ஞானம் மிக்க பணியாளராகவும் ஒரே நேரத்தில் திகழ முடியும்.

English | Tamil | Hindi | Telugu | Bengali | Marathi

Read more

Join My First 1000 Days Club

It all starts here. Expert nutrition advice for you and your baby along the first 1000 days.

  • Learn about nutrition at your own paceLearn about nutrition at your own pace
  • toolTry our tailored practical tools
  • Enjoy member only benefits and offersEnjoy member only benefits

Let's start this!

Related Content
Article Reviews

0 reviews

Still haven't found
what you are looking for?

Try our new smart question engine. We'll always have something for you.