கர்ப்பகால எடை உயர்வின் சரியான அளவு என்ன?
ஒவ்வொரு கர்ப்பமும் வேறுபட்ட ஒன்றாகும்.ஆனால், பெண்களுக்கு கர்ப்பகாலத்தில் சுமார் 11 முதல் 16 கிலோ வரை எடை அதிகரிக்கிறது. இந்த எடை உயர்வானது, குழந்தையின் எடையையும், கருவில் வளரும் உங்கள் சிசுவிற்கு உணவளிப்பதற்காகவும், பிறகு அதற்குத் தாய்ப்பால் கொடுப்பதற்காகவும் ஏற்ற வகையில் அதிகரிக்கும் உங்கள் உடலில் சேரும் கொழுப்பின் அளவையும் உள்ளடக்கிய எடை உயர்வாகும். நீங்கள் அளவுக்கு மீறிய எடையுடன் இருந்தாலோ, அல்லது மிகவும் குறைவான எடையுடன் இருந்தாலோ, உங்கள் மருத்துவர் அதற்கான ஆலோசனகளின் மூலம் அவற்றைச் சரிசெய்து விடுவார்.
பரிந்துரைக்கப்பட்ட வழிகாட்டுதல்களை மிகச்சரியாகப் பின்பற்றவும்.
மெதுவான, நிலைத்தன்மை கொண்ட கர்ப்பகால எடை அதிகரிப்புக்காக முயற்சி செய்யுங்கள். வெவ்வேறு பெண்களுக்கு வெவ்வேறு மாதிரி எடை அதிகரிப்பு இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்த விஷயத்தில், உங்கள் மருத்துவரின் பரிந்துரையைப் பின்பற்ற வேண்டியது அவசியம். கர்ப்பகால எடை மிகக் குறைவாக இருப்பதோ அல்லது மிக அதிகமாக இருப்பதோ பல சிக்கல்களுக்கு வழிவகுக்கக் கூடும். நீங்கள் சாப்பிடும் உணவுகளின் தரம், அவற்றின் அளவு ஆகியவற்றைப் பொருத்தே எடை மாற்றம் அமையும் என்பதையும் நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
உங்களுக்கும், உங்கள் குழந்தைக்கும் நலம் பயப்பது ஆரோக்கியமான எடையே
- சரியான எடை: நீங்கள் சரியான கர்ப்பகால எடையைப் பெறுவதன் மூலம், உங்கள் ஆரோக்கியத்தில் சிக்கல்களைக் கொண்டுவரும் ஒரு பிரச்சனையை தீர்த்துவிடுகிறீர்கள். உங்கள் பொதுவான உடல் ஆரோக்கியம் மற்றும் கர்ப்பத்துக்கு முன்பிருந்த எடையைப் பொறுத்து, உங்கள் மருத்துவர் உங்களுக்குத் தேவையான சரியான கர்ப்பகால எடையை மதிப்பீடு செய்வார்.
- மிகக் குறைவான எடை: கருவில் வளரும் உங்கள் குழந்தைக்கு ஊட்டச்சத்து தேவை. நீங்கள் இருவருக்குமாகச் சேர்த்து போதுமான அளவுக்கு உணவு சாப்பிட வேண்டும். சரியான கர்ப்பகால எடையை நீங்கள் பெறாவிட்டால், உங்கள் குழந்தை தனது வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை இழக்க நேரிடும். எனவே உங்கள் மருத்துவர் வழங்கும் எடை அதிகரிப்புக்கான வழிமுறைகளை நீங்கள் உறுதியாகப் பின்பற்ற வேண்டும்.
- மிக அதிகமான எடை: சில பெண்கள் கர்ப்பகால எடையை அதிகரிக்க வேண்டும் என்ற சாக்கில், தங்கள் ஆரோக்கியத்துக்கு உகந்த உணவு உண்ணும் விதிகளை எல்லாம் மீறிச் சென்றுவிடுகிறார்கள் . அவ்வாறு செய்வது, உங்கள் இதயம் மற்றும் மூட்டுகளில் அதிகப்படியான அழுத்தத்தை கொடுத்து, உங்களுக்கு முதுகுவலியையும், பிற உடல்நலக் குறைபாடுகளைக் கொண்டுவரும் ஆபத்தை அதிகரிக்கிறது என்பதால், அது நல்லதில்லை. உங்கள் குழந்தை பிரசவிக்கும் போது நீங்கள் சரியான உடலமைப்பை தக்கவைத்துக் கொள்வதும் இதனால் கடினமாகிவிடுகிறது.
உங்கள் கர்ப்பகால எடை மிகவும் குறைவாக இருக்க கூடாது
முதல் மூன்று மாதங்களில், காலையில் எழுந்தவுடன் வரும் வாந்தி, குமட்டல் காரணமாக உங்கள் எடை கொஞ்சம் குறையும். அதைப்பற்றிக் கவலைப்படாதீர்கள்: ஆரம்பத்தில் நீங்கள் சரியாக உணவு சாப்பிட முடியாவிட்டாலும், உங்கள் குழந்தையின் ஊட்டச்சத்து தேவைகளை உங்கள் உடலே சரிசெய்துகொள்ளும். காலையில் எழுந்தவுடன் வரும் வாந்தி, குமட்டல் காரணமாக உங்கள் எடை குறைவதைப் பற்றி நீங்கள் கவலைப்பட்டால், உங்கள் மருத்துவரிடம் இதைப் பற்றி ஆலோசனை செய்யுங்கள். இப்பிரச்சனைக்கு நீங்கள் நினைத்துப் பார்க்காத தீர்வுகள் ஏதேனும் அவரிடம் இருக்கக் கூடும்.
சில உதவிக் குறிப்புகள்
- கர்ப்பம் தரிக்கும் முன்பாகவே, உங்கள் உடல் எடை சரியாக இருக்கிறதா என்பதை அறிய ஊட்டச்சத்து நிபுணர் ஒருவரிடம் ஆலோசிக்கவும். நீங்கள் கர்ப்பம் தரிக்கும் முன்பாகவே ஆரோக்கியமான எடையைக் கொண்டிருப்பதுதான், உங்களுக்கும், பிறக்கப்போகும் குழந்தைக்கும் மிகுந்த நன்மை அளிக்கும்.
- கர்ப்ப காலத்தில் உணவுக்கட்டுப்பாட்டில் இருப்பது நல்லதல்ல: அவ்வாறு செய்வதால், உங்களுக்கும். உங்கள் ககுழந்தைக்கும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கடுமையாகக் குறைந்துபோகும் அபாயம் உள்ளது. அது உங்கள் குழந்தையின் வளர்ச்சியைப் பாதிக்கும். கர்ப்ப காலத்தில் நீங்கள் எடுக்க வேண்டிய உணவுகள் பற்றிய வழிகாட்டுதல்கள் தேவைப்பட்டால், ஒரு ஊட்டச்சத்து நிபுணரிடம் ஆலோசிக்கவும்.
- புரதச் சத்து நிறைந்த, ஆரோக்கியமான, சமச்சீர் உணவை எடுத்துக்கொள்ளவும். புரதங்கள் நமது உடலின் கட்டமைப்புத் தொகுதிகளாக இருக்கின்றன. ஆகையால், உங்களுக்குள் ஒரு முழுமையான சிறிய உடலை நீங்கள் உண்டாக்கும்போது, உங்கள் உணவில் புரதச் சத்துக்கள் இருப்பது மிகவும் அவசியம்.
- நீங்கள் உண்ணும் உணவில் ஃபோலிக் அமிலம், இரும்புச் சத்து மற்றும் கால்சியம் கொண்ட உணவுகள் அதிகம் இருக்கவேண்டும் என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள். உங்கள் ஊட்டச்சத்து நிபுணரோ அல்லது மருத்துவரோ பரிந்துரை செய்திருந்தால், கூடுதலாக துணை ஊட்டச்சத்துப் பொருட்களையும் எடுத்துக்கொள்ளலாம். ஃபோலிக் அமிலம் சிசுவின் நரம்புக் குழாய் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இரும்புச் சத்தும், கால்சியமும் உங்களுக்கும் உங்கள் சிசுவிற்கும் இரத்த செல்களும் எலும்புகளும் மேம்பட மிகவும் முக்கியமானவைகளாக இருக்கின்றன.
- உங்களது உணவுப் பழக்கத்தையோ அல்லது உடற்பயிற்சி முறையையோ மாற்ற விரும்பினால், முதலில் உங்கள் மருத்துவரைப் பார்க்கவும். வாரம் முழுவதும் நீங்கள் செய்யும் ஒரு மிதமான உடற்பயிற்சியானது, உங்கள் கர்ப்பகாலம் தொடங்கி பிரசவக் காலம் வரை உங்கள் வலிமையையும் பலத்தையும் பராமரிப்பதில் மிக முக்கியப் பங்காற்றுகிறது.
- உங்கள் கர்ப்பகாலத்தில் எடை அதிகரித்தால், அதற்காக பெருமிதம் கொள்ளுங்கள். ஏனெனில் அதுதான் குழந்தை ஆரோக்கியமாக வளர்வதற்கான வழியாகும். உங்கள் கர்ப்பகால எடை மிக அதிகமாகவோ அல்லது மிக குறைவாகவோ இருப்பதாக நீங்கள் கவலைப்பட்டால், உங்கள் மருத்துவரிடமோ அல்லது ஊட்டச்சத்து நிபுணரிடமோ கலந்தாலோசிக்கவும்.
சில ஆபத்துக்கள்
அதிகமான கர்ப்பகால எடையுள்ள தாய்மார்களுக்கான சிக்கல்கள்
உங்கள் கர்ப்பகால எடை மிக அதிகமாக இருந்தால், நீங்கள் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்கள் உடல் நிறை குறியீட்டெண் (பிஎம்ஐ) மிக அதிகமாக இருந்தால், உங்களுக்கான ஆபத்துக்களும் அதிகரிக்கக் கூடும். இது பற்றி உங்கள் மருத்துவரிடம் ஆலோசிக்கவும். அதிக எடையுடன் இருப்பது, கர்ப்பகால மாற்றங்களில் இருந்து மீளும் காலத்தை அதிகரிப்பதோடு, உங்கள் புதிய சிசுவை பராமரிப்பதில் உங்களுக்குத் தேவைப்படும் ஆற்றல்களையும் குறைத்துவிடும்.
அதிக கர்ப்பகால எடையுள்ள தாய்மார்களின் குழந்தைகளுக்கான சிக்கல்கள்
உடல் பருமன் என்பது உங்களுக்கு மட்டும் இருக்கும் ஒரு உடல்நலத் தீங்கு அல்ல. கருவில் வளரும் உங்கள் சிசுவும் அதனால் உண்டாகும் எதிர்மறையான விளைவுகளான வளர்ச்சிக் குறைபாடு, மேம்பாட்டு பிரச்சனைகள் மற்றும் பொதுவான உடல்நலக் குறைபாடுகள் ஆகியவற்றை உணரக் கூடும்.
English | Tamil | Hindi | Telugu | Bengali | Marathi |
0 reviews