இவற்றில் பல உண்மைகளாக இருக்கலாம். ஆனாலும், அநேக விஷயங்கள் வெறும் கட்டுக்கதைகளே.
மசக்கை இருந்தால், என் குழந்தைக்கு போதிய அளவு ஊட்டச்சத்து இல்லை என்று அர்த்தம்.
கர்ப்பத்தின் முதல் சில மாதங்களில் எடை அதிகரிப்பு மிகவும் குறைவாகவே நிகழும். உண்மையில், கர்ப்பத்தின் ஆரம்பக் கட்டங்களில் சில பெண்களுக்கு எடையிழப்பு ஏற்படலாம். வயிற்றுப்போக்கு, அதிக எடை இழப்பு அல்லது கடுமையான மசக்கை போன்ற எச்சரிக்கை அறிகுறிகள் உங்களுக்கு ஏற்படாத பட்சத்தில், நீங்கள் பீதியடையத் தேவையில்லை.
உங்கள் குழந்தை முடிந்தவரை உங்கள் உடலின் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி தனக்கான தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளும். கருத்தரிக்கும் முன்னர் நீங்கள் ஆரோக்கியமான நிலையில் இருந்திருந்தால், உங்கள் குழந்தையின் ஆரோக்கியம் பற்றி முதல் மூன்று மாதங்களின் இறுதிப் பகுதி வரை நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. உங்கள் மருத்துவரின் ஆலோசனைகளைப் பின்பற்றி, அவர் கூறியுள்ளதுபோல் கூடுதல் உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள்.
கர்ப்பமான வயிற்றில் சிறிது தொட்டாலும் அது குழந்தைக்கு தீங்கை உண்டாக்கும்.
இதில் எந்த உண்மையும் இல்லை. ஏனெனில், உங்கள் குழந்தை உங்கள் கருப்பையில் நன்கு பாதுகாக்கப்பட்டு, சிறிய மேடுபள்ளங்களாலும், தடுமாற்றங்களாலும், விழுவதாலும் உண்டாகும் அதிர்வுகளைத் தாங்கும் தன்மையுடன், கருப்பையில் உள்ள அம்னியோடிக் திரவத்தில் மிதந்து கொண்டிருக்கிறது. அத்துடன், அடிவயிற்றிலுள்ள தசை அடுக்குகளும் சிறு விபத்துக்களிலிருந்து கருவைப் பாதுகாக்கும்.
எனினும், உங்களுக்கு ஏதேனும் வலிகளோ அல்லது யோனியில் இரத்தப்போக்கோ இருந்தால், உடனே உங்கள் மருத்துவரைத் தொடர்புகொள்ளுங்கள்.
கனமான எடைகளைத் தூக்குவது பிரசவ வலியை உண்டாக்கும்.
இதில் ஓரளவு உண்மை உள்ளது. அதிக சுமைகளைத் தூக்குவது முதுகுவலியை அதிகப்படுத்தி, அதன் காரணமாக முதுகெலும்பில் காயத்தை ஏற்படுத்தக்கூடும். எனினும், நீங்கள் தூக்கும் சுமை உங்களுக்கு சிரமம் தராவிட்டாலோ, சரியான முறையில் அதை உங்களால் தூக்க முடிந்தாலோ, கொஞ்சமாக எடையைத் தூக்குவது நல்லதுதான். உதாரணமாக, உங்களுக்குச் சரியான முறையில் தூக்கத் தெரிந்தால், மளிகைப் பொருட்கள் கொண்ட பைகள், இளம் குழந்தைகள் போன்ற சுமைகளைச் சுமப்பது தவறில்லை.
சுமைகளைத் தூக்குவதற்கான சரியான நுட்பம் என்ன? எதைத் தூக்கும்போதும் உங்கள் முழங்கால்களை வளைத்து அந்த சுமையை உங்கள் உடலுக்கு அருகில் கொண்டுசெல்லுங்கள். அப்போது நீங்கள் பின்பக்கம் சாயக்கூடாது. இவ்வாறு சரியாகச் சுமைதூக்கும் போது, அந்தச் சுமை உங்கள் முதுகைப் பாதிக்காது. அத்துடன், சுமைதூக்கும் போது உங்கள் உடலின் ஒரு பக்கமாக தூக்குவதற்குப் பதிலாக இரு கைகளுக்கும் இடையில் அதைச் சமமாகப் பிரித்துத் தூக்கவும்.
உடற்பயிற்சி செய்வது என் குழந்தைக்கு கஷ்டத்தைக் கொடுக்கும்.
உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசித்த பிறகே, எந்த உடற்பயிற்சியையும் தொடங்க வேண்டும். உங்கள் உடல் வலிமையை அதிகரித்துக்கொள்வது பிரசவம் என்னும் கடுமையான செயல்முறைக்கு உங்களைத் தயார்ப்படுத்துகிறது. நீங்கள் சோர்வடையாத வரை, உங்கள் உடற்சூடு மிக அதிகமாகாத வரை அல்லது மிதமிஞ்சிய மூச்சிரைப்பு வராத வரை நீங்கள் உடற்பயிற்சி செய்யலாம். உண்மையில் உடற்பயிற்சி செய்யும் பழக்கம் இல்லாத பெண்களுக்குக் கூட, கர்ப்பகாலத்தில் சில உடற்பயிற்சிகளைச் செய்யுமாறு அறிவுரை வழங்கப்படுகிறது. கடினமான உடற்பயிற்சிகள் செய்து பழக்கமில்லாதவர்களுக்கு, சுறுசுறுப்பாக நடப்பது ஒரு பாதுகாப்பான உடற்பயிற்சியாகும். கர்ப்பிணிப் பெண்கள் நீச்சல் பயிற்சியை எளிதாகத் தொடரலாம். பயிற்சி பெற்ற நிபுணர்களின் வழிகாட்டுதலின்படியும், உங்கள் மருத்துவரிடம் ஆலோசனையின் பேரிலுமே உடற்பயிற்சிகளில் ஈடுபட வேண்டும். மூச்சுப் பயிற்சிகளும், தியானமும் நல்ல ஓய்வைக் கொடுப்பதால், அவற்றையும் நீங்கள் செய்யலாம். சான்றிதழ் பெற்ற பயிற்சியாளர்களின் வழிகாட்டுதலில் யோகாசனப் பயிற்சிளையும் செய்யலாம். நீங்கள் உடற்பயிற்சி செய்தால் அடிக்கடி நீரருந்த வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
கர்ப்பிணிப் பெண்களுக்கு விமானப் பயணம் உண்மையில் பாதுகாப்பானது இல்லை.
இதில் ஓரளவு உண்மை உள்ளது. உங்கள் தேதி ஆறு வாரங்களுக்கு அதிகமாக இருந்தால், நீங்கள் எப்போதாவது ஒருமுறை பறப்பது நிச்சயம் பாதுகாப்பான விஷயம்தான். விமான நிலையத்தின் பாதுகாப்பு பரிசோதனைகளைக் கடந்து செல்வது உங்கள் குழந்தைக்கு எந்தவிதப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. உங்கள் விமானம் மிக நீண்ட வடிவில் இருந்தால், பயணத்தின் போது அவ்வப்போது சிறிது உலாத்திவிட்டு, உங்கள் கால்களை நீட்டிக்கொண்டு அமருங்கள்.
எனினும், அடிக்கடி விமானப் பயணம் மேற்கொள்வோர் சற்று எச்சரிக்கையாகத்தான் இருக்க வேண்டும்.
செல்போன்கள், மைக்ரோவேவ் மற்றும் கணினிகள் கூட தீங்கு விளைவிக்கும்.
என் குழந்தை வயிற்றுக்குள் அதிகம் நகர்வதாகத் தெரியவில்லை; அதனால் வளர்ச்சி மெதுவாக உள்ளது என்று அர்த்தமா?
நிச்சயம் அப்படி இல்லை. உங்கள் குழந்தையின் இயக்கங்கள் அதன் இயல்பான வேகத்தில் தொடர்ந்து நடைபெறும். உங்கள் குழந்தையின் இயக்கங்கள் பற்றி நீங்கள் அதிகம் கவலைப்பட்டால், அதன் இயக்கத்தை அவ்வப்போது எண்ணிக் கணக்கிடுங்கள். பன்னிரண்டு மணி நேரத்தில் 10 இயக்கங்களை உணர்ந்தாலே போதும், பிறகு நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. உங்கள் பிரசவத் தேதி நெருங்கும்போது, சிசுவின் இயக்கங்களை அடிக்கடி எண்ணிக் கணக்கிட வேண்டியிருக்கும். எண்ணும்போது, சரியாக எண்ணாமல் சில இயக்கங்களை விட்டுவிட்டால், அது தேவையற்ற அச்சங்களுக்கு வழிவகுக்கும்.
இது உண்மைதான். கர்ப்பகாலத்தின் முதல் மூன்று மாதங்களில் தலைமுடிக்கான வண்ணச் சாயங்கள் போன்ற இரசாயனங்களைப் பூசும்போது, அவை மண்டையோடு வழியாக உறிஞ்சப்பட்டு இரத்த ஓட்டத்தில் சேர்வதால், அவற்றைத் தவிர்ப்பதே நல்லது.
கர்ப்பத்தின் அடுத்த பாதியில் தலைமுடிச் சாயம் பூசுவதால் அவ்வளவாக ஆபத்தில்லை. அப்போதும்கூட, இயற்கையான மற்றும் மூலிகை உட்பொருட்களைக் கொண்ட தலைமுடிச் சாயங்களுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும்.
கர்ப்பிணிகளுக்கு வயிறு சிறிதாக இருந்தால் ஆண், பெரிதாக இருந்தால் பெண்.
அதுபோலவே, கர்ப்பிணிகளுக்கு வயிற்றின் தோலில் மாற்றம் ஏற்படுவதற்கும், குழந்தையின் பாலினத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அது இயல்பான ஹார்மோன் மாற்றங்களால் உண்டாகும் விளைவேயாகும்.
சிசுவின் இதயத் துடிப்பு மெதுவாக இருந்தால் ஆண், வேகமாக இருந்தால் பெண்.
சிசுவின் இதயத் துடிப்பு குழந்தையின் பாலினத்தை அறிவதற்கான அறிகுறி என்று எந்த ஆய்வும் நிரூபிக்கவில்லை. ஒவ்வொரு கர்ப்பகால மருத்துவ சந்திப்பின்போதும், உங்கள் குழந்தையின் இதயத் துடிப்பு, கருவின் வயதைப் பொறுத்தும், அந்த நேரத்தின் செயல்பாடுகளைப் பொறுத்தும் வேறுபடும்.
கர்ப்பிணிப் பெண்கள் பூனையின் எச்சங்களை அகற்றக்கூடாது.
இது உண்மைதான். பூனையின் கழிவுகளில் டோக்ஸோபிளாஸ்மோசிஸ் என்ற நோய்த்தொற்று வைரஸ் உள்ளது. இந்த வைரஸ் கர்ப்பத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் ஒன்றாகும். உண்மையில் பூனையின் கழிவுப்பெட்டியை சுத்தம் செய்வதால் மட்டுமே இந்த வைரஸ் தொற்று ஏற்படும் என்பதில்லை. பூனை நடந்துசெல்லும் வழித்தடங்களிலும், அதன் பாதங்களிலும் கூட அந்த வைரஸ் இருப்பதைக் காணலாம். இதன் காரணமாக, பூனையுடன் கொண்டிருக்கும் அனைத்து தொடர்புகளையும் நீங்கள் குறைத்துக்கொள்ள வேண்டும் என்பதோடு, வீட்டையும் நன்கு சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
இந்தப் பழைய நம்பிக்கைகளுக்குப் பின்னால் உள்ள உண்மையான காரணங்களையும், அறிவியல் உண்மைகளையும் அறிந்தால், அது நகைச்சுவையாகக் கூட இருக்கலாம். உங்கள் பக்கத்து வீட்டு வயதான பெரியம்மா சொல்வதை காதுகொடுத்துக் கேளுங்கள். அதற்காக, அதையெல்லாம் பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை!
English | Tamil | Hindi | Telugu | Bengali | Marathi |
0 reviews