மூல நோயைச் சோதிக்கவும்: கர்ப்பகாலத்தின் போது வழக்கமான அளவை விட மூலம் பெரியதாக இருக்கக்கூடும் என்பதால், மூலநோய் இல்லாத ஜோடிகள் கர்ப்பகாலத்தில் உடலுறவில் ஈடுபடலாம்.
ஆசன வாய் உடலுறவு கூடவே கூடாது: உங்களுக்கு மூலநோயால் இரத்தக் கசிவு இருக்கும்போது, ஆசனவாய் உடலுறவு கொண்டால், அதனால் இரத்த இழப்பு ஏற்பட்டு. தாய்க்கும் குழந்தைக்கும் அது ஆபத்தை விளைவிக்கும் என்பதால், இந்த ஆசனவாய் உடலுறவு கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டும்.
கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்துதல்: ஆசனவாய் உடலுறவில் இருந்து யோனி உடலுறவுக்கு மாறினால், நன்கு சுத்தப்படுத்தப்பட்ட ஆணுறையைப் பயன்படுத்தியே அதில் ஈடுபட வேண்டும். அப்போதுதான் பாக்டீரியல் வஜினிடிஸ் என்ற நோய்த்தொற்றைக் குறைக்க முடியும்.
உடலுறவுக்கு ஒருபோதும் வற்புறுத்தாதீர்கள்: கர்ப்பிணிப் பெண்ணுக்கு உடலுறவில் விருப்பமில்லை என்றால், அவளை அதற்குக் கட்டாயப்படுத்தக்கூடாது.
சிக்கல்கள் இருக்கும்போது உடலுறவைத் தவிர்க்கவும்: பிளாசென்டா ப்ரீவியா போன்ற பிரச்சனை தாய்க்கு இருந்தால், கர்ப்பகாலத்தில் உடலுறவைத் தவிர்க்க வேண்டும். ஏனென்றால், அதில் ஈடுபடுவது குழந்தைக்கும் தாய்க்கும் தீங்கு ஏற்படுத்தலாம்.
உங்கள் மருத்துவரை ஆலோசிக்கவும்: உடலுறவு தொடர்பான ஏதேனும் கவலைகள் இருக்கும் பட்சத்தில், உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசிக்கவும்.
கர்ப்பகாலத்தில் உடலுறவில் ஈடுபடுவதற்கு முன்னர், அதுபற்றிய ஒரு முன் அறிவைக் கொண்டிருப்பது முக்கியம். இது நீங்களும் உங்கள் குழந்தையும் ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும் இருக்க உதவும்.
English | Tamil | Hindi | Telugu | Bengali | Marathi |
0 reviews