உண்மையில், கர்ப்பிணிப் பெண்களில் பாதிப்பேர், கர்ப்பகாலத்தில் சில குறிப்பிட்ட வகையான உணவு அல்லது அசாதாரணமான உணவுக்காக ஏங்குவார்கள். பொதுவான உணவு ஏக்கங்கள் இனிப்புப் பொருட்கள் மற்றும் உப்பு உணவுகளின் மீதே இருக்கும். அதேநேரம், சில பெண்களுக்கு காரமான அல்லது கொழுப்பு நிறைந்த உணவுகளை உண்பதற்கான ஏக்கம் உண்டாகும். ஏன் இந்த தீவிர உணவு ஏக்கம்? பல பெண்களுக்கு கர்ப்பகாலத்தில் சில குறிப்பிட்ட உணவுகள் மீது தீவிர ஏக்கம் உண்டாகும் அதே நேரத்தில், சில உணவுகளின் சுவை மற்றும் வாசனைகளிலும் அவர்களுக்கு மாற்றங்கள் ஏற்படக்கூடும். இவை மிகவும் இயல்பான விஷயங்களே. அத்துடன், இவை குறுகிய காலத்திற்கு மட்டுமே நீடிக்கும். இந்த உணவு ஏக்கங்களுக்கு கர்ப்பகாலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக இருக்கலாம்.
தீவிர உணவு ஏக்கங்களைச் சமாளிக்க இந்த எளிமையான உதவிக் குறிப்புகளை முயற்சிக்கவும்:
இயற்கையான மசாலாக்களை மட்டும் சாப்பிடுங்கள்
சில பொருட்கள் மீது தீவிர உணவு ஏக்கங்கள் ஏற்படுவது கர்ப்பிணிப் பெண்களுக்கு இயற்கைக்கு மாறான விஷயம் இல்லை. எனினும், நீங்கள் வாயுச் சிக்கலைத் தடுப்பதற்கு, உங்கள் உணவில் இயற்கையான மசாலாக்களை சேர்த்துக்கொள்ளலாம்.
கிரீன் டீ அருந்திடுங்கள்
கிரீன் டீ அருந்துவது உங்களது தீவிர உணவு ஏக்கங்களைக் குறைக்க உதவும். ஊறவைக்கப்படாத இலைகளில் இருந்து கிரீன் டீ தயாரிக்கப்படுவதால், அதில் சக்திவாய்ந்த ஆன்டிஆக்சிடென்ட்கள் செறிந்து காணப்படுகின்றன. இவை பாலிஃபினால்கள் எனப்படுகின்றன.
பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்களை (பி-வைட்டமின்கள்) உட்கொள்ளுங்கள்
கர்ப்பகாலத்தின் தீவிர உணவு ஏக்கங்களைக் குறைக்கவும், உங்கள் உடலுறுதியைத் தக்கவைக்கவும், வைட்டமின்களை, குறிப்பாக பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்களை (பி-வைட்டமின்கள்) எடுத்துக்கொள்ள வேண்டும். இவை கார்போஹைட்ரேட்டை எளிய சர்க்கரை குளுக்கோஸாக மாற்றமடையச் செய்வதில் முக்கியப் பங்காற்றுகின்றன. விலங்குப் பாகங்களின் மாமிசங்கள், கொட்டைகள், இலைகள் கொண்ட பச்சைக் காய்கறிகள், அரிசி, பால், முட்டை, இறைச்சி, மீன், முழு-தானிய வகைகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை உட்கொள்வதன் மூலம் உங்களுக்கு பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் கிடைக்கின்றன.
கர்ப்பகாலத்தில் சோயா பால் அருந்துங்கள்
ஓட்ஸ் அல்லது காலையுணவின் மிகச்சிறந்த இணை உணவாக சோயா பால் உள்ளது. இதில் கூடுதல் கால்சியம் உள்ளதால், உங்கள் பற்களும், நகங்களும், எலும்புகளும் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. ஐஸ்கிரீம் போன்ற பொருட்களின் மீதான தீவிர உணவு நாட்டத்தைக் குறைக்க இதில் உள்ள கால்சியம் உதவுகிறது.
செயற்கை இனிப்பூட்டிகள் கொண்ட பொருட்களைத் தவிர்க்கவும்
இவற்றை உட்கொள்வது உங்களது தீவிர உணவு ஏக்கங்களை அதிகமாக்கிவிடும். பல பதப்படுத்திய செயற்கை உணவுகளில் இந்த செயற்கை இனிப்பூட்டிகள் அதிகமாக சேர்க்கப்படுகின்றன. அப்படிப்பட்ட உணவு உணவுகள் உங்களுக்குத் தேவைப்பட்டால், இயற்கையான, ஆர்கானிக் உணவுகளை வாங்கி உண்ணுங்கள்.
சக்தி ஊக்கிகளை நிறுத்திவிடுங்கள்
காஃபின் நமது உடலில் ஆற்றல் மற்றும் உற்சாகத்தை "மீட்பதாக" அறியப்படுகிறது. சில நேரங்களில் அது நமக்கு அவசியமாக இருக்கலாம். உங்கள் இரத்த சர்க்கரை அளவுகள் சமநிலையில் இல்லாவிட்டால், காஃபின் உங்கள் பசியைத் தீவிரமாகத் தூண்டிவிடும் என்பதுதான் அதில் உள்ள பிரச்சனை. ஆகவே காபிக்குப் பதிலாக, கிரீன் டீயில் போன்ற மூலிகைத் தேநீரை அருந்தலாம். அத்துடன், தண்ணீர், இளநீர், லஸ்ஸி ஆகிய திரவ உணவுகளை அடிக்கடி அருந்தும் பழக்கத்தையும் ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.
சமைத்த உணவுகளையே உண்ணுங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்கவும்
, பதப்படுத்தப்பட்ட உணவுகள் குறைந்த ஊட்டச்சத்தை மட்டுமே வழங்குவதால், அவற்றைத் தவிர்க்கவும். வீட்டில் புதிதாகச் சமைத்து உண்பதன் மூலம் மட்டுமே, பெரும்பாலும் ஆரோக்கியமான உணவுகளை உண்ணமுடியும்.
கர்ப்பகாலத்தின் தீவிர உணவு ஏக்கங்களைத் தடுக்க பல இயற்கையான வழிகள் இருக்கின்றன. உங்கள் உணவுப்பழக்கத்தில் ஏற்றத்தாழ்வு ஏற்படாமல் இருந்தால், கர்ப்பகாலத்தில் உங்களுக்கு ஏற்படும் தீவிர உணவு ஏக்கம் ஒரு முக்கியப் பிரச்சனை அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். தீவிர உணவு ஏக்கங்களால், நீங்கள் நல்ல உணவுகளுக்குப் பதிலாக, தேவையற்ற உணவுகளை உண்டுவிடக்கூடாது என்பதை மட்டும் உறுதி செய்துகொள்ளுங்கள். எப்போதும் காலை உணவைத் தவிர்க்காதீர்கள். அவ்வாறு தவிர்ப்பது, தீவிர உணவு ஏக்கங்களை அதிகமாகத் தூண்டிவிட்டு விடும்.
உங்கள் கர்ப்பம் முன்னேற்றம் அடையும்போது, உங்களுக்கு இருக்கக்கூடிய தீவிர உணவு ஏக்கங்கள் குறைந்துவிடும் என்பதால் பொறுமையாக இருங்கள். அப்படியும் அவை தீராவிட்டால் கவலைப்படவேண்டாம். எதை உண்ணுகிறீர்கள் என்பதை மட்டும் கவனியுங்கள். நல்ல ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே நீங்கள் உண்ணவேண்டும்.
English | Tamil | Hindi | Telugu | Bengali | Marathi |
0 reviews