Sorry, you need to enable JavaScript to visit this website.
Search
Not a member? Register here
Share this Article
X
 Ultrasound Scan Its Necessity and Benefits in Pregnancy

கர்ப்பகாலத்தில் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் எடுப்பதன் அவசியமும் அதன் நன்மைகளும்

(0 reviews)

அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் குழந்தை மற்றும் அவளது சூழல்களைக் காட்டும் ஒரு படம். ஒரு அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்யும்போது,  உயர் அதிர்வெண் கொண்ட ஒலி அலைகள் (3.5  முதல் 7 மெகா ஹெர்ட்ஸ்) அடிவயிற்றின் அடுக்குகள் வழியாக கருப்பைக்குள் அனுப்பப்படுகின்றன. குழந்தை ஒலி அலைகளை மீண்டும் பிரதிபலிக்கிறது. ஒரு கணினி இந்த எதிரொலிகளைக் கைப்பற்றி, ஒரு படமாக நமக்கு மாற்றிக் கொடுக்கிறது. பிரதிபலித்த ஒலி அலைகளின் அளவுக்கேற்ப, கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் அப்படங்கள் வருகின்றன.

Wednesday, November 29th, 2017

அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் உங்கள் குழந்தையின் நிலையையும் அதன் சூழலையும் காட்டுகிறது.

எலும்புகள் போன்ற கடினமான திசுக்கள் படத்தில் வெண்ணிற பகுதிகளாக காண்பிக்கப்படுகின்றன.  மென்மையான திசுக்கள் சாம்பல் நிறத்திலும், புள்ளிகளாகவும் தோன்றும். அம்னியோடிக் திரவம் போன்றவை, எந்த எதிரொலிகளையும் பிரதிபலிப்பதில்லை என்பதால் அப்பகுதிகள் படத்தில் கருப்பாகத் தோன்றும். வெள்ளை, சாம்பல் மற்றும் கருப்பு ஆகிய நிறங்களின் வேறுபாடுகள், மருத்துவர் படங்களைப் புரிந்துகொண்டு விளக்குவதற்கு உதவுகின்றன. இந்தப் படங்கள் குழந்தையின் நிலை, அதன் இயக்கம் ஆகியவற்றையும், சிசுவின் சூழல் எவ்விதம் இருக்கிறது என்பதையும் காட்டுகின்றன. தொழில்நுட்ப முன்னேற்றங்கள் காரணமாக இப்போது 3டி மற்றும் 4டி வண்ண ஸ்கேன்களையும் நீங்கள் காணலாம்.  இப்படியான படங்கள், உங்கள் சிசுவின் மிகச் சிறந்த தோற்றங்களை காண்பிக்கின்றன.

அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் எடுப்பது ஒரு எளிய செயல்முறை.

உங்கள் சோனோகிராஃபர்  அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் எடுக்கும் முன்பாக சிறுநீர் முழுமையாக நிரம்பிய சிறுநீர்ப் பையோடு அந்தச் செயல்முறைக்கு வருமாறு கூறுவார். அவ்வாறு வருவதால் நீங்கள் கொஞ்சம் அசௌகரியத்தை உணரலாம்.  ஆனால் அவ்விதம் வருவதன் மூலம், ஒலி அலைகளை கருவின் இருப்பிடத்தில் திறம்படச் செலுத்த முடிகிறது. இந்தச் செயல்முறையின் போது, உங்கள் அடிவயிற்றில் பூசப்படும் ஜெல் கரை ஒட்டாத ஒன்றுதான். ஆனாலும், அது சற்று குளுமையாகவும், ஈரமாகவும் இருக்கும். அல்ட்ராசவுண்ட் அலைகள் மூலம் உங்களுக்கு எந்தவிதமான புலன் உணர்ச்சியும் ஏற்படாது.

அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் முற்றிலும் பாதுகாப்பானது.

X- கதிர்களைப் போலன்றி, அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்ய எந்த மின்னூட்டம் கொண்ட அயனிகளையும் பயன்படுத்துவதில்லை.அதனால், கதிரியக்கத்தால் ஏற்படும் எந்தவொரு எதிர்மறையான விளைவுகளும் இதில் ஏற்படுவதில்லை. ஆனால், போதுமான பயிற்சி இல்லாத மருத்துவ ஊழியர்களாலோ அல்லது மோசமான உபகரணங்களைப் பயன்படுத்தியோ இது செய்யப்பட்டால்,  சரியாக வகையில் கருவின் சிக்கல்களை அறியாமல் போகும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

அல்ட்ராசவுண்ட் ஸ்கேனும் ஆரோக்கியமான கர்ப்ப பராமரிப்பில் அதன் முக்கியத்துவமும்

கர்ப்பகாலத்தில் நோய் கண்டறிதலும் அதை உறுதிப்படுத்துதலும்: அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் மூலம், கருவிழியின் பிஞ்சுரு, கருவின் பிஞ்சுரு மற்றும் கருவின் அப்போதய வடிவத்தை கரு உருவான 4½ முதல் 5 வார இடைவெளியிலேயே காண முடியும். இது கரு உருவாகியிருக்கும் சரியான தளத்தைக் கண்டறிய உதவுவதோடு, இடம் மாறி உருவாகியிருக்கும் கர்ப்பத்தையும் முன்கூட்டியே கண்டறிய உதவுகிறது.

கருப்பை இரத்தப்போக்குக்கான காரணங்களைக் கண்டறிதல்: ஆரம்பகால கர்ப்பத்தில் ஏற்பட்டுள்ள கருப்பை புண், நஞ்சுக்கொடியின் வடிவம் மற்றும் அளவு ஆகியவற்றைக் கொண்டு கருப்பை இரத்தக் கசிவுக்கான காரணங்களை மிக நன்றாக கண்டறிய அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் உதவுகிறது. கருச்சிதைவு மற்றும் சிதிலமான கரு ஆகியவற்றை அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் மூலம் கண்டறிவது, உருமாறிய கருவையும், கருவிற்கு இதயத் துடிப்பு இல்லாதிருப்பதையும் அறிய உதவுகிறது. முதல் மூன்று மாதங்களில் இரத்தப்போக்கு இருக்குமானால், அதற்கு காரணமாக இருக்கும் இடம் மாறிய கர்ப்பம் மற்றும் மேற்பரப்பில் வளரும் கர்ப்பம் ஆகியவற்றை அடையாளம் கண்டறிய, அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் இன்றியமையாத ஒன்றாகும்.

கருவின் வயது மற்றும் அளவைத் தீர்மானித்தல்: கர்ப்பகாலத்தின் ஆரம்பத்தில், கரு உடலின் அளவானது பொதுவாக அல்ட்ராசவுண்ட் ஸ்கேனின் உதவியுடன் அளக்கப்படுகிறது. இதன் மூலம் கரு உருவாகி எத்தனை நாள் ஆகியிருக்கிறது என்பதையும் கண்யடறியலாம்.

கரு உருமாற்ற நோயைக் கண்டறிதல்: உருவாகி 20 வாரங்கள் ஆகும் முன்பே, கருவின் பல கட்டமைப்பு உருமாற்ற நோய்களான ஸ்பினாபிஃபைடா மற்றும் டவுன்’ஸ் சிண்ட்ரோம் ஆகிய நோய்களை அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் மூலம் நன்கு கண்டறியலாம்.

நஞ்சுக்கொடியின் இருப்பிடத்தைத் தீர்மானித்தல்: நஞ்சுக்கொடியின் தளத்தை கன்டறிவதும், அதன் கீழ் விளிம்புகளை அறிந்துகொள்வதும் மிகவும் முக்கியம். இதனால், நோய்களை கண்டறிய முடிவதோடு, நஞ்சுக்கொடி மயக்கமடைவதையும் தவிர்க்க முடிகிறது.

ஒன்றுக்கும் மேற்பட்ட கருக்கள் உருவாதல்: அல்ட்ராசவுண்ட் ஒன்றுக்கும் மேற்பட்ட கருக்கள் உருவாகும் போது, அந்தக் கருக்களின் எண்ணிக்கையைத் தீர்மானிக்க அருமையான சோதனை ஆகும். அந்தக் கருக்களின் தோற்றம், வளர்ச்சி, மந்தநிலை, ஒழுங்கின்மை மற்றும் கருக்களுக்கான நஞ்சுக்கொடியின்  இருப்பு ஆகியவற்றை அது நன்கு காண்பிக்கிறது. பல கருக்கள் உருவாகி இருந்தால், இரட்டைக் கருவுக்கும், இன்னொரு இரட்டைக் கருவுக்குமான ட்ரான்ஸ்ஃபியூஷனுக்குப் பரிந்துரைக்கவும் இந்த முறை பயன்படுகிறது.

கருவின் வளர்ச்சியைத் தீர்மானித்தல்: அல்ட்ராசவுண்ட் உங்கள் குழந்தையின் இதய துடிப்பு, இயக்கம், தொனி மற்றும் சுவாசத்தை தீர்மானிப்பதில் மிகச்சிறப்பான பங்கு வகிக்கிறது.

இடுப்புப் பாகத்தின் உருமாற்றங்களைக் கண்டறிதல்: இது கர்ப்ப காலத்தில் கருப்பை மற்றும் இடுப்புப் பாகத்தின் உருமாற்றங்களைக் கண்டறிய உதவுகிறது. உதாரணமாக, ஃபைப்ரோமியோமாட்டா மற்றும் கருப்பை நீர்க்கட்டிகளை இதன் மூலம் கண்டறிந்து விடலாம்.

அல்ட்ராசவுண்ட் ஸ்கேனுக்கானதேதிகளுக்கு உங்கள் மருத்துவரிடம் ஆலோசியுங்கள்.

நீங்கள் அல்ட்ராசவுண்ட் ஸ்கேனை எப்போது செய்ய வேண்டும் என்பதற்கு எந்த விதமான கடினமான விதிமுறையும் இல்லை. தாயின் ஆரோக்கியத்தைப் பொறுத்து,  கருத்திரையின் ஆரோக்கியத்தை இன்னும் நெருக்கமாக உணர வேண்டும் என உணர்ந்தால், அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்ய உங்கள் மருத்துவர் பரிந்துரைப்பார். பொதுவாக,  கருவுற்ற 7 முதல் 8 வாரங்களில் முதல் ஸ்கேனும், 18 முதல் 20 வாரங்களில் இரண்டாவது ஸ்கேனும், கருவுற்ற 32 வாரங்களில் மூன்றாவது ஸ்கேனும் செய்யப்படுகிறது. உங்கள் குழந்தையின் நிலை, வளர்ச்சி மற்றும் இயக்கம் ஆகியவற்றைப் புரிந்துகொள்ள அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் மிகவும் அவசியம். ஒரு அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் எப்போது தேவை என்பது பற்றி முடிவுசெய்ய உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசிக்கவும்.

English | Tamil | Hindi | Telugu | Bengali | Marathi

Read more

Join My First 1000 Days Club

It all starts here. Expert nutrition advice for you and your baby along the first 1000 days.

  • Learn about nutrition at your own paceLearn about nutrition at your own pace
  • toolTry our tailored practical tools
  • Enjoy member only benefits and offersEnjoy member only benefits

Let's start this!

Related Content
Article Reviews

0 reviews

Still haven't found
what you are looking for?

Try our new smart question engine. We'll always have something for you.