நீங்கள் கர்ப்பத்திற்கு திட்டமிடும் போது கவலை படுவதும், படபடப்பாவதும், சிறிய விஷயங்களைப் பற்றி கூட கவலைப் படுவதும் இயல்பான ஒன்றாகும். இருப்பினும், உங்களால் உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியவில்லை என்று உங்களுக்கு தோன்றினால், மன அழுத்தத்தை உணர்ந்தால், அது உங்கள் அன்றாட வாழ்க்கையை பாதிக்கிறதென்றால், நீங்கள் மருத்துவரை ஆலோசிக்க வேண்டும்.
நீங்கள் தினமும் 15 நிமிடங்கள் உங்களுக்காக ஒதுக்கிக் கொள்வது, நடை பயிற்சி மேற்கொள்வது, நண்பர்களுடன் பேசுவது போன்றவைகளை செய்வது உங்கள் வாழ்க்கையில் மன அழுத்தத்தைக் குறைக்கும்.
கர்ப்பகாலத்திற்கு முன், மனரீதியிலான பிரச்சினை இருப்பது, கர்ப்ப காலத்தில் அல்லது குழந்தை பிறந்த ஒரு வருடத்தில் உங்களை மேலும் மோசமாக்கலாம்.
நீங்கள் மன ஆரோக்கியத்தோடு இருப்பதற்கு உதவும் சில விஷயங்கள்
உங்கள் அன்றாட வாழ்க்கை ஆரோக்கியமாக இருப்பதை உறுதி படுத்திக் கொள்ளுங்கள். சில செயல்களை செய்வது உங்களை மன ஆரோக்கியத்தோடு வைத்திருக்கும். அவைகளாவன:
உங்களை நேசியுங்கள்
உங்களை நேசிப்பதும் வாழ்க்கையில் நேர்மறை எண்ணங்களை கொண்டிருத்தலும்.
உங்கள் உடலை வளமாக்குங்கள்
சரிவிகித உணவை உண்ணுவது, உங்கள் உடல் ஆற்றலை மேம்படுத்த உதவுவதோடு , உங்கள் மனநிலையையும் மேம்படுத்தி உங்கள் உடலை திடமாக வைத்திருக்க உதவுகிறது.
சுறுசுறுப்பாக இருங்கள்
சுறுசுறுப்பாக இருப்பது உண்மையில் உங்கள் மன அழுத்தத்தைத் தவிடு பொடியாக்கும். இதற்காக நீங்கள் உடற்பயிற்சி கூடத்திற்குச் செல்லத் தேவையில்லை. தோட்ட வேலை செய்வது, நடனமாடுவது முதலியவை கூட உடலியக்கத்தை மேம்படுத்தும். நீங்கள் உடலளவில் சுறுசுறுப்பாக இயங்கும் போது அது ‘எண்டோர்ஃபின்ஸ்’ என்ற ஹார்மோனை உற்பத்தி செய்யும். அந்த ‘நலமாக எண்ணவைக்கும் ஹார்மோன்’ உங்கள் மன அழுத்தத்தைப் போக்கி உங்கள் மனநிலையை மேம்படுத்தும்.
தூங்கும் அழகியாக இருங்கள் .
தேவையான தூக்கமும் சரியான ஓய்வும்: உங்களை மனதை ஆரோக்கியத்தோடும் நலமுடனும் வைத்திருக்க நல்ல தூக்கம் அவசியம். தூங்குவதில் சிக்கல் இருந்தால் மருத்துவரை அணுகவும்.
மன அழுத்ததைச் சரியாக கையாளுங்கள்
உங்கள் தொடர் வேலையிலிருந்து சிறிது நேரம் ஒதுக்கி, வரைதல், புத்தகம் வாசித்தல் அல்லது இசை கேட்பது போன்ற உங்களுக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு ஒன்றில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வது உங்கள் மன அழுத்தத்தை குறைத்து சமாளிக்க உதவும்.
English | Tamil | Hindi | Telugu | Bengali | Marathi |
0 reviews