Sorry, you need to enable JavaScript to visit this website.
Search
Not a member? Register here
Share this Article
X
The do’s and don’ts of travelling during pregnancy

கர்ப்ப காலத்தில் பயணிக்கும்போது செய்ய வேண்டியதும், செய்யக் கூடாததும்

(0 reviews)

கர்ப்ப காலத்தில் பயணம் செய்வது அவ்வளவாக நல்லதில்லை. கருத்தரித்துள்ள இந்த முக்கியமான கால கட்டத்தில் நீங்கள் பயணங்களை மேற்கொண்டால், அவற்றால் உண்டாகும் ஆபத்துக்கள் கூடவே தொடரும்.

Wednesday, November 29th, 2017

உங்கள் கர்ப்பத்தில் எந்த விதமான சிக்கலோ, பிரச்சனையோ இல்லாமல் இருக்கும் வரை, கர்ப்பத்தின் ஆரம்ப காலகட்டத்தில் பயணங்களை மேற்கொள்வது பாதுகாப்பானது. ஆயினும்கூட, உங்கள் சொந்த பாதுகாப்புக்காக, தவிர்க்க முடியாத சூழ்நிலைகளைத் தவிர, கருத்தரித்து 30 வாரங்களுக்குப் பிறகு பயணங்களைத் தவிர்ப்பதே நல்லது என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

பாதுகாப்பான, அவ்வளவாகப் பாதுகாப்பில்லாத காலங்கள்.

முதல் மும்மாதங்களில் பயணத்தை தவிர்க்கவும். முதல் மும்மாதங்களில் பயணம் செய்வது பரிந்துரைக்கப்படவில்லை. இது தாயின் கருப்பையுடன் கரு தன்னை இணைத்துக்கொள்ள முயற்சிக்கும்  காலமாதலால், இப்போது பயணத்தை மேற்கொள்வதன் மூலம், கருச்சிதைவு அல்லது மற்ற சிக்கல்கள் உண்டாவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.

இரண்டாவது மும்மாதங்கள் பாதுகாப்பானவை. நீங்கள் கருவுற்று 13 வாரங்கள் கடந்துவிட்டால், நீங்கள் இரண்டாவது மும்மாதங்களில் இருக்கிறீர்கள். கர்ப்பத்தின் முழுமையான காலத்தோடு ஒப்பிடுகையில் இதுவே மிகவும் பாதுகாப்பான கர்ப்பகாலம். இரண்டாவது மும்மாதங்களில், குமட்டல், வாந்தி ஆகிய பிரச்சினைகள் குறைகின்றன. அதனால், உங்கள் மனநிலை இப்போது லேசாகி, எளிதாக ஆகியிருப்பதை உணர்வீர்கள்.

மூன்றாவது மும்மாதங்கள். மூன்றாவது மும்மாதங்களில், நீங்கள் கிட்டத்தட்ட உங்கள் முழுமையான கர்ப்பகாலத்தை நெருங்குகிறீர்கள். இப்போது  நடந்து திரிவதிலும், நெடுநேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதிலும் சிரமத்தை அனுபவிக்க வேண்டி வரலாம். இந்தக் காலகட்டத்தில் பயணங்கள் மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது.

கர்ப்ப காலம் முழுவதும் நீண்ட பயணங்களைத் தவிர்க்கவும். கர்ப்ப காலத்தில் பயணிக்கும் முடிவை, நீங்கள் எவ்வளவு வசதியாகப் பயணிக்க முடியும் என்பதை வைத்தும், உங்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பொறுத்தும் எடுக்க முடியும். நீண்ட பயணங்கள் மேற்கொள்வதையும், அதிக உயரமான இடங்களுக்கு பயணம் செய்வதையும் தவிர்க்கவும். ஏனெனில், அதிக உயரத்தில் குறைந்த ஆக்ஸிஜன் மட்டுமே கிடைப்பதால், உங்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படலாம். இவ்விதமான பயணங்களை மேற்கொள்ளும் முன்னர் நீங்கள் வசதியாகவும் எளிதாகவும் பயணிக்க முடியுமா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

பயணத்தின் போது கடைப்பிடிக்க வேண்டிய சுகாதாரக் குறிப்புகள்.

ஒரு கர்ப்பிணித் தாய்க்கு சுகாதாரம் மிகமிக முக்கியமாக இருக்கிறது. அது பற்றி நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய சில முக்கியமான குறிப்புகள் இங்கே தரப்பட்டுள்ளன:

உங்கள் கைகளைச் சுத்தமாக வைத்திருங்கள்: நோய்த் தொற்றுகளை தவிர்ப்பதற்கு ஒரு கை சுத்திகரிப்பானை எப்போதும் கூடவே வைத்திருங்கள்.

நிறைய தண்ணீர் குடிப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்: எப்பொழுதும் உங்கள் சொந்த குடிநீர் பாட்டிலை உங்களுடனேயே எடுத்துச் செல்லுங்கள். பயணங்களின் போது, பாட்டிலில் அடைக்கப்பட்ட மினரல் தண்ணீரைப்  பயன்படுத்தவும். இதன் மூலம் உங்கள் உடலுக்குத் தேவையான நீர் கிடைப்பதோடு, நீரால் உண்டாகும் நோய்த் தொற்றுகளில் இருந்தும் நீங்கள் விடுபடுகிறீர்கள்.

பொதுக் கழிவறைளைப் பயன்படுத்தும் முறை: பொதுக் கழிவறைகளைப் பயன்படுத்த வேண்டும் என்றால், அவை சுத்தமாக இருப்பதை உறுதிசெய்வதோடு, வழுக்கி விழுவதை தவிர்க்கும் பொருட்டு, அவை உலர்ந்த தரையோடும், நல்ல வெளிச்சத்தோடும் இருக்கிறதா என்பதையும் உறுதிப்படுத்தவும். அகற்றும் இருக்கை கவர்கள் வழங்கப்பட்டால், அவற்றைப் பயன்படுத்தவும். எந்தவொரு நோய்த்தொற்றும் ஏற்பட்டுவிடாதவாறு சுகாதாரத்தைப் பராமரிக்கவும்.

சரியாகப் பொருந்தும் பயண முறையை தேர்ந்தெடுத்தல்.

உங்கள் பயண முறையை நீங்கள் புத்திசாலித்தனமாக தேர்வுசெய்ய வேண்டும். மிகவும் வசதியாக, எந்த அசௌகரியமும் இல்லாமல் பயணத்தை முடிக்கலாம் என்றும் நீங்கள் உணரக்கூடிய, உங்களுக்குச் சரியாகப் பொருந்தும் ஒரு பயண முறையைத் தேர்வுசெய்யுங்கள்.

சாலைப் பயணம்: சாலைப் பயணத்தால் நீங்கள் சோர்வடையலாம். எனவே, பயண நேரத்தைக் குறைக்கும் ஒரு வாகனத்தைத் தேர்ந்தெடுத்து, உங்கள் பயணம் குறைவான மன அழுத்தத்தை மட்டுமே ஏற்படுத்தும் வகையிலான ஒரு பயண முறையை தேர்ந்தெடுக்கவும். நீங்கள் பேருந்தில் பயணம் செய்யும்போது, சாலையில் இருக்கும் மேடுபள்ளங்களால் அதிக குலுக்கல்களுக்கு உள்ளாக வேண்டிவரும் என்பதால், கர்ப்பகாலம் முழுக்க கார் மூலம் பயணிப்பதே நல்லது. காரில் சென்றாலும், நீங்கள் கவனமாகத்தான் இருக்க வேண்டும் என்றபோதும், பேருந்தை விட கார் நல்லதுதான். திடீர் குலுக்கல்கள் மற்றும் துள்ளல்களைத் தவிர்க்கும் பொருட்டு, உங்கள் இருக்கை பெல்ட்டை உடலில் நன்கு பொருத்திக் கொள்ளுங்கள். திடீரெனப் பிரேக்குகள் போடும்போது, எதிரில் மோதிவிடாமல் தவிர்க்க டேஷ்போர்டில் இருந்து ஒரு பாதுகாப்பான தூரத்தில் இருங்கள். திடீர் குலுக்கல் சம்பவங்களால் கரு பாதிப்படையாமல் இருக்க, முன் இருக்கையில் அமர்ந்து பயணிப்பதை தவிர்க்கவும்.

பாதுகாப்பான சாலைப் பயணத்திற்கான உதவிக் குறிப்புகள்.

இருக்கை பெல்ட்: உங்கள் கர்ப்ப பரப்பு தேவையில்லாமல் அழுந்துவதை தவிர்க்கும் வகையில், இருக்கை பெல்ட்டை வயிற்றின் அடிப்பாகத்தை ஒட்டி அணிந்துகொள்ள வேண்டும்.

நொறுக்குத் தீனி: ஆரோக்கியமான, ஊட்டச்சத்துள்ள தின்பண்டங்களை முதல் மும்மாதங்களில் செய்யப்படும் சாலைப் பயணங்களின்போது உண்பது குமட்டலைத் தடுக்க உதவுவதோடு, உங்கள் சக்தி மட்டத்தையும் உயர்த்துகிறது.

இளைப்பாறுதல்: உடலில் இரத்த ஓட்டம் நடைபெறுவதை சரியாக வைக்கும் பொருட்டு, பயணத்தின் போது, ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணிநேரத்திற்கு ஒருமுறை வாகனத்தை விட்டிறங்கி, காலாற நடப்பது அவசியம்.

வசதியான அமர்வு: உங்கள் முதுகில் வைத்துக்கொண்டு வசதியாக பயணம் செய்வதற்காக, ஒரு தலையணையை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள்.

மருத்துவரின் ஆலோசனை: கர்ப்பகாலத்தில் பயணிக்கும் ஒவ்வொரு முறையும் உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசிக்கவும். நீங்கள் பயணம் செய்யலாமா, செய்யக் கூடாதா என்பதை உங்கள் மருத்துவர் மட்டுமே தீர்மானிக்க வேண்டும்.

இரயில் மூலம் பயணம்

திடீர் குலுக்கல்களும், புடைப்புகளும் குறைவான இருப்பதால்,  சாலைப் பயணங்களை விட, இரயில் பயணங்களே மிகவும் பாதுகாப்பானவை. இரயிலில் குலுக்கல்கள் குறைவாக இருக்கின்றன. கால்களை நீட்டிக்கொள்ளவும், படுத்துக்கொள்ளவும் போதுமான இடைவெளிகளும் இருப்பதால், உட்கார்ந்த இடத்தை விட்டு எழுந்து, நடந்து உலாவுவதும் எளிதாக இருக்கிறது. 

இரயிலில் நிற்கும்போதும், நடக்கும்போதும் அங்குள்ள கைப்பிடிகளைப் பிடித்துக் கொள்ளுங்கள். இரயிலில் ஏறும்போதும், இறங்கும் போதும் நீங்கள் மிகுந்த கவனத்தோடும், எச்சரிக்கையோடும் இருக்க வேண்டும்.

விமானப் பயணம்

விமானப் பயணம் மிகவும் வசதியான, பாதுகாப்பான வழி யாகும். நடைபாதைக்கு அருகிலுள்ள கேபினில் இருக்கையைப் பெறுங்கள்.  அதனால், நீங்கள் கால்களை நீட்டி வசதியாக அமர முடியும். அதிக உயரங்களில் ஆக்ஸிஜன் அளவு குறைவாக இருப்பினும், விமானக் கேபின்கள் முழுவதும் ஆக்சிஜன் செலுத்தப்படுவதால், அதுபற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை.

கருத்தரித்த 32 வாரங்களுக்குப் பிறகு, விமானப் பயணம் ஏதேனும் இருந்தால், அதை தவிர்த்து விடவும்.

குறிப்பு: விமானப் பயணம் பற்றிய கட்டுரைக்கு இட்டுச்செல்லும் லிங்க் இது.

கடல் பயணம்

கர்ப்ப காலத்தில் கடல் பயணம் பொதுவாக பாதுகாப்பானது. இதில் இருக்கும் ஒரே பிரச்சனை, கடல்நீர் நோயால் உங்கள் குமட்டல் அதிகமாகி விடுவதுதான். ஒரு படகிலோ அல்லது கப்பலிலோ பயணிக்கும் போது நீங்கள் மேற்கொள்ளவேண்டிய சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:

கப்பலின் நடுவே உள்ள ஒரு கேபினில் அமரவும்.  அங்கே தான் குறைவான குலுக்கல்கள் இருக்கும்.

உங்கள் மருந்துகள் மற்றும் மருத்துவ அறிக்கைகளை எப்போதும் கூடவே எடுத்துச் செல்லவும்.

கப்பலில் ஆரோக்கியமான, பாதுகாப்பான உணவுகளை உண்ணுங்கள்.

சில லேசான நொறுக்குத் தீனிகளை எப்போதும் எடுத்துச் கொள்ளுங்கள்.

மென்மையான உணவு வகைகளை அடிக்கடி உட்கொள்ளுங்கள்.

கப்பலில் குறைந்தபட்சம் அடிப்படை மருத்துவ வசதிகள் இருக்கின்றனவா என்பதையும், அருகிலுள்ள கரைப்பகுதியில் முறையான மருத்துவ வசதிகள் உள்ளனவா என்பதையும் உறுதி செய்துகொள்ளுங்கள்.

கர்ப்பகாலத்தின் போது நோய்த் தொற்று ஏற்படுவதற்கான ஆபத்து அதிகமாக உள்ளதால், கப்பலில் உள்ள கழிவறைகள் சுகாதாரமாக உள்ளனவா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.

மிக முக்கியமாக, ஒரு கப்பல் பயணத்தை மேற்கொள்ளும் முன்பாக உங்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று அதன்படி நடந்துகொள்ளவும்.

அனைத்திற்கும் மேலாக, நீங்கள் ஒரு நிமிடம் கூட மறக்கக்கூடாத ஒரு விஷயம் என்னவென்றால்,  நீங்கள் கப்பலில் தனியாக பயணம் செய்யவில்லை என்பதைத் தான். உங்களை விட மிகவும் பலகீனமான ஒரு நிரந்தரத் தோழன் உங்களுடன் சேர்ந்தே வருகிறான். எனவே, கர்ப்பகாலத்தில் பயணம் செய்யும்போது,  நீங்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

English | Tamil | Hindi | Telugu | Bengali | Marathi

Read more

Join My First 1000 Days Club

It all starts here. Expert nutrition advice for you and your baby along the first 1000 days.

  • Learn about nutrition at your own paceLearn about nutrition at your own pace
  • toolTry our tailored practical tools
  • Enjoy member only benefits and offersEnjoy member only benefits

Let's start this!

Related Content
Article Reviews

0 reviews

Still haven't found
what you are looking for?

Try our new smart question engine. We'll always have something for you.