Sorry, you need to enable JavaScript to visit this website.
Search
Not a member? Register here
Share this Article
X
Getting Smart at Eating during Pregnancy

கர்ப்ப காலத்தில் சாப்பிடும் உணவை பலனளிக்கும் விதத்தில் திட்டமிடுதல்

(0 reviews)

கர்ப்ப காலத்தில் சரியான உணவுகளைச் சாப்பிட உதவும் சில பயனுள்ள குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

Wednesday, November 29th, 2017

புதிதாக விளைந்து வந்துள்ள, பருவத்துக்கு ஏற்ற பழங்கள் அல்லது ஒரு தம்ளர் பழச்சாற்றுடன் உங்கள் நாளைத் தொடங்கவும். காபி அல்லது தேநீரை விட்டுவிடுங்கள். அவற்றில் காஃபின் தான் இருக்கிறதே தவிர, வேறு எந்த ஊட்டச்சத்தும் இல்லை.

பாதாம், வால்நட் போன்ற சில சத்துள்ள கொட்டை வகைகளை எடுத்துக்கொண்டும் உங்கள் நாளைத்  தொடங்கலாம்.

தேநீர் அல்லது காபியை சுத்தமாக விட்டுவிடுவது கடினமாக இருந்தால், உணவைச் சாப்பிடுவதற்கு முன்பாகவோ, உணவைச் சாப்பிடும்போதோ அல்லது சாப்பிட்ட உடனேயோ அவற்றை அருந்துவதையாவது தவிர்த்து விடுங்கள்.

முன்கூட்டியே உங்கள் உணவுமுறையைத் திட்டமிட்டு, ஆரோக்கியமான உணவுகளை வாங்கிச் சேமித்து வைத்துக்கொண்டால், அவை கர்ப்ப காலத்தில் பலனளிக்கும் விதத்தில் உண்பதற்கு உதவும்.

வீட்டில் முழுமையாக சமைக்கப்படும் போஹா, தலிபீத், பராத்தா-தயிர், இட்லி-சாம்பார், தோசை-சட்னி, காய்கறி உப்புமா போன்ற ஊட்டச்சத்து நிறைந்த உணவு வகைகளை காலையில் எடுத்துக்கொள்ளவும்.

காலையில் ஊட்டச்சத்தால் செறிவூட்டப்பட்ட தானிய மாவுகளையும் உண்ணலாம்.  இருப்பினும் அவை பதப்படுத்தப்பட்ட உணவுகள் என்பதையும், அவற்றில் சேர்மானப் பொருட்களும், சுவையூட்டும் பொருட்களும், செயற்கை வண்ணங்களும் சேர்க்கப்பட்டுள்ளன என்பதையும் மறந்துவிடாதீர்கள்.

நீங்கள் கொஞ்சமாகவும், அடிக்கடியும் சாப்பிட வேண்டும் என்பதால்,  உங்கள் உணவுத் திட்டத்தில் காலை நடுப்பகுதி, பிற்பகல் நடுப்பகுதி ஆகிய உணவு நேரங்களையும் சேர்க்கவும். மோர், இனிப்புத் தயிர், கையளவுக்கு வேர்க்கடலை அல்லது வறுத்த மாக்கனா, முளைக்க வைத்த தானியங்கள் ஆகியவற்றை முக்கிய சாப்பாடுகளுக்கு இடைப்பட்ட அந்தக் காலங்களில் எடுத்துக்கொள்ளவும்.

ஊட்டமளிக்கும் தன்மை கொண்ட மதிய உணவு மற்றும் இரவு உணவை பெற, முழுமையான கோதுமை, ஜோவர், பஜ்ரா, அரிசி, ராகி, ராஜ்கிரா ஆகிய தானிய உணவுகளுடன் காய்கறிகளையும் சேர்த்து, அவற்றுடன் பருப்பு வகைகள், பயறு வகைகள், முட்டை, மீன் அல்லது கோழி போன்ற புரதச்சத்து மிக்க உணவுகளையும் எடுத்துக்கொள்ளவும்.

தானியங்களை முளைக்க வைத்தல்,  உணவுப் பொருட்களை புளிக்க வைத்தல் ஆகிய முறைகளின்  மூலம் செரிமான சக்தி அதிகரிப்பதோடு, அதனால் அவற்றில் பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் மற்றும் வைட்டமின்-சி ஆகியவையும் அதிகமாகின்றன.

சாப்பாடுகளுக்கு இடையே நீண்ட இடைவெளியையும், விருந்துச் சாப்பாடு அல்லது பெருந்தீனி ஆகியவற்றையும் தவிர்க்கவும்.

முழுமையான தானியங்கள், பருப்பு வகைகள், பட்டாணிகள், பால் மற்றும் பால் பொருட்கள், பருவகாலப் பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்ணுங்கள்.

நல்ல தரமான புரதச்சத்தைப் பெற, மீன், கோழி, முட்டை ஆகியவற்றை உண்ணுங்கள். நீங்கள் சைவமாக இருந்தால், ஒவ்வொரு நாளும் தானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் பால் பொருட்களை உண்பதன் மூலம், நல்ல தரமான புரதச்சத்தைப் பெறுவீர்கள்.

நீங்கள் காய்கறி சாலட் உண்ணும் போது, அதில் புரதச்சத்தை சற்று அதிகரிக்கும் பொருட்டு, சில வகையான முளைவிட்ட தானியங்கள் / வேகவைத்த பீன்ஸ் / பாலாடைக் கட்டிகள் ஆகியவற்றைச் சேர்க்கவும்.

மலச்சிக்கலைத் தடுக்க நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்ணவும்.

உங்கள் உடலுக்கு எளிதான வகையில் கால்சியத்தை கொண்டுவருவதால், பால் மற்றும் பால் பொருட்களை உட்கொள்ளவும்.

உங்கள் உணவுமுறையில் சிட்ரஸ் உணவுகள், முளைவிட்ட பருப்பு வகைகள் மற்றும் புளிக்க வைக்கப்பட்ட உணவுகள் ஆகியவற்றைச் சேர்ப்பதன் மூலம், உங்கள் உடல் அதிகமான இரும்புச்சத்தை ஈர்த்துக் கொள்வதை உறுதி செய்யுங்கள்.

எதையும் அதிகப்படியாக உண்பதை தவிருங்கள். ஊறுகாய், சாஸ்கள் போன்ற உணவுகளில் மறைந்து கிடக்கும் அதிகப்படியான உப்பைத் தவிர்க்கவும்.

ஒவ்வொரு நாளும் 8 முதல் 12 தம்ளர்கள் நீர் அருந்தி, உடலில் நீர்ச்சத்தை தக்க வைத்துக் கொள்ளுங்கள்.

ஊட்டச்சத்து உட்கொள்வதைத் தடுக்கக் கூடிய தவறான உணவுப் பழக்கத்தை விட்டுத் தள்ளுங்கள்.

English | Tamil | Hindi | Telugu | Bengali | Marathi

Read more

Join My First 1000 Days Club

It all starts here. Expert nutrition advice for you and your baby along the first 1000 days.

  • Learn about nutrition at your own paceLearn about nutrition at your own pace
  • toolTry our tailored practical tools
  • Enjoy member only benefits and offersEnjoy member only benefits

Let's start this!

Related Content
Article Reviews

0 reviews

Still haven't found
what you are looking for?

Try our new smart question engine. We'll always have something for you.