ஃபோலிக் அமிலம் என்றால் என்ன, கர்ப்ப காலத்தில் அது ஏன் மிகவும் முக்கியம்?
ஃபோலிக் அமிலம் ஒருவகையான பி- காம்ப்ளக்ஸ் வைட்டமின் வகையாகும். அது உங்கள் உடலின் ஒவ்வொரு உயிரணுவுக்கும் அது இயல்பாக வளர்ச்சியுறத் தேவையாக இருக்கிறது. டி.என்.ஏ தொகுப்புக்கு இந்த ஃபோலிக் அமிலம் முக்கியமானதாகும். அதன் வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் மற்றும் திசு உருவாக்கத்திற்கும் அது அவசியம் தேவை.
பல ஆய்வுகள் கர்ப்பம் தரிக்கும் முன்பாகவும், கர்ப்பத்தின் ஆரம்பத்திலும் ஒரு நாளைக்கு 400 மைக்ரோகிராம் (0.4 மி.கி.) அளவுக்கு ஃபோலிக் அமிலத்தை எடுத்துக்கொள்வது, குழந்தைக்கு கீழ்க்கண்ட நன்மைகளைக் கொண்டுவருவதாக கூறுகின்றன:
- மூளை மற்றும் தண்டு வடத்தில் உண்டாகும் பிறப்பு குறைபாடுகள் (நரம்புக் குழாய் குறைபாடு) 70% வரை குறைகின்றன.
- இருதயக் கோளாறுகள் குறைகின்றன
- பிளவுபட்ட அண்ணம் மற்றும் உதடு போன்ற வாயில் உண்டாகும் பிறப்பு குறைபாடுகள் குறைகின்றன.
ஃபோலிக் அமிலத்தின் பரிந்துரைக்கப்பட்ட அளவு - கர்ப்பத்திற்கு முன்: ஒரு நாளில் 400 மைக்ரோகிராம்
கர்ப்ப காலத்தில்: ஒரு நாளில் 500 மைக்ரோகிராம்
உங்களுக்கு நரம்புக் குழாய் குறைபாடு அல்லது அரிவாள் அணு நோய் (பிறை வடிவிலான இரத்த செல்களைப் பெறும் பிறப்புக் குறைபாடு) இருந்தால்: ஒரு நாளில் 1000 மைக்ரோகிராம்
எப்போது ஃபோலிக் அமிலத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்?
இந்தியாவில் நான்கில் ஒரு பங்கு கர்ப்பங்கள் திட்டமிடப்படாதவையும், நோக்கமின்றி தரிப்பவையுமே ஆகும். ஒரு பெண் தான் கர்ப்பமாக இருப்பதை உணரும் முன்பாக, கர்ப்பம் தரித்த முதல் 28 நாட்களில் நரம்புக் குழாய் குறைபாடுகள் ஏற்படலாம்.
நீங்கள் கருவுறும் முன்பாகவோ அல்லது கர்ப்பத்தின் ஆரம்ப நாட்களிலோ ஃபோலிக் அமிலத்தை எடுத்துக் கொண்டால், இந்த நரம்புக் குழாய் குறைபாடுகள் வராமல் தடுக்கமுடியும். ஆகவே, கர்ப்பம் தரிக்கும் வாய்ப்புக் கொண்ட அனைத்துப் பெண்களும் ஃபோலிக் அமிலத்தை எடுத்துக்கொள்வது நல்லது. ஏனெனில், கர்ப்பத்தின் ஆரம்ப கட்டங்களில் நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்பதே உங்களுக்குத் தெரியாமல் போகலாம்.
என் வழக்கமான உணவிலிருந்து எனக்கு ஃபோலிக் அமிலம் கிடைக்காதா?
சில உணவுகள் ஃபோலிக் அமிலத்தின் வேறு வடிவமான ஃபோலேட்டை உங்களுக்கு வழங்க முடியும். எனினும், உங்கள் உணவு மட்டும் கர்ப்ப காலத்தின் பாதுகாப்புத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது. உங்கள் உணவுமுறையில் ஃபோலிக் அமிலம் கொண்ட உணவுகளை அதிகரித்தாலும்கூட, கூடுதல் துணை உணவாகவும் ஃபோலிக் அமிலத்தை எடுத்துக் கொள்வதில் உறுதியாக இருங்கள்.
English | Tamil | Hindi | Telugu | Bengali | Marathi |
0 reviews