பின்வரும் வழிமுறைகள் கருவுறும் தன்மை அதிகமாக உள்ள நாட்களைக் கண்டறிய உதவுகின்றன. அவை பின்வருமாறு:
அனைத்து வழிமுறைகளையும் சேர்த்துப் பயன்படுத்தி, உங்களுக்கு கருவுறும் தன்மை அதிகமாக இருக்கும் நாட்களைப் பதிவு செய்ய ஒரு நாட்குறிப்பைப் பராமரிக்கவும். இது உங்கள் கர்ப்பம் சார்ந்த சரியான திட்டமிடலுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
- காலண்டர் முறை: இந்த முறையில், உங்கள் மாதவிடாய் சுழற்சியை 8 முதல் 12 மாதங்களுக்கு ஒரு காலண்டரில் பதிவுசெய்ய வேண்டும். உங்கள் மாதவிடாயின் முதல் நாளில் காலண்டரில் ஒரு வட்டம் போடுங்கள். அதுதான், முதல் நாள். ஒவ்வொரு மாதமும் உங்கள் மாதவிடாய் எவ்வளவு நாட்கள் நீடிக்கின்றன என்பதைக் குறித்து வையுங்கள்.
- கருவுறும் தன்மை அதிகம் உள்ள முதல் நாளைக் கண்டறியுங்கள்: உங்கள் குறுகிய மாதவிடாய் சுழற்சியின் மொத்த நாட்களில் இருந்து 18-ஐ கழித்து விடுங்கள். உதாரணமாக, உங்கள் குறுகிய சுழற்சி 25 நாட்கள் நீடித்தால், 25-ல் இருந்து 18-ஐ கழித்தால் 7 கிடைக்கும். உங்கள் தற்போதைய மாதவிடாய்ச் சுழற்சியில், இந்த மாதத்தின் ஆறாம் தேதியன்று மாதவிடாய் ஏற்பட்டால், அந்த நாளை முதல் நாளாக எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் தற்போதைய மாதாந்திர சுழற்சியின் முதல் நாளில் இருந்து, நாட்களை எண்ணி வரக்கூடிய 7 -வது நாளில் ஒரு X குறியிடுங்கள். இந்தக் கணக்கில், மாதத்தின் 12–ம் தேதியே உங்களுக்கு கருவுறும் தன்மை அதிகம் உள்ள முதல் தினம் ஆகும்.
- கருவுறும் தன்மை அதிகம் உள்ள கடைசி நாளைக் கண்டறியுங்கள்: கருவுறும் தன்மை அதிகம் உள்ள கடைசி நாளைக் கண்டுபிடிக்க உங்கள் நீளமான மாதவிடாய் சுழற்சியினுடைய மொத்த நாட்களிலிருந்து 11-ஐ கழித்துவிடுங்கள். உதாரணமாக, உங்கள் நீண்ட மாதவிடாய் சுழற்சியின் மொத்த நாட்கள் 30 என்றால், 30-ல் இருந்து 11-ஐ கழித்தால் 19 கிடைக்கும். உங்கள் தற்போதைய மாதாந்திர சுழற்சியின் முதல் நாளில் இருந்து, நாட்களை எண்ணி, அதற்கு விடையாக வரக்கூடிய 19 -வது நாளில் ஒரு X குறியிடுங்கள். இவ்வாறு எண்ணும்போது, முதல் நாளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். இந்தக் கணக்கில், மாத்தின் 24–ம் தேதியே உங்களுக்கு கருவுறும் தன்மை அதிகம் உள்ள கடைசி நாள் ஆகும்.
இந்த கணக்கீடுகளின் அடிப்படையில், ஒவ்வொரு மாதமும் 12-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை உங்கள் கருவுறும் தன்மை மிக அதிகமாக உள்ளது. 18-ம், 11-ம் இந்தக் கணக்கீட்டு முறையில் மாறாத எண்கள் என்பதைக் குறித்துக் கொள்ளுங்கள். காலண்டர் முறையைப் பயன்படுத்தும் போது, துல்லியமான கணக்கைப் பெற இந்த மாறாத எண்களையே பயன்படுத்த வேண்டும்.
இருப்பினும், சிறந்த முடிவுகளுக்காக, இந்த முறையை மற்ற கருத்தரிப்பு விழிப்புணர்வு முறைகளான கருமுட்டை வெளியாதல் முறை முறை அல்லது அடிப்படை உடல் வெப்பநிலை முறை ஆகியவற்றோடு சேர்த்துப் பயன்படுத்தவும்.
அண்டவிடுப்பு அல்லது கருமுட்டை வெளியாதல் முறை: அண்டவிடுப்பு முறை கர்ப்பப்பை வாய் பசை முறை என்றும் அறியப்படுகிறது. இந்த முறையில், மாதம் முழுக்க உங்கள் கர்ப்பப்பை வாயில் தோன்றும் சளிபோன்ற பசையின் அளவு, மேற்பரப்பு மற்றும் அதன் தோற்றத்தை பார்த்து, உணர்ந்து, பதிவு செய்வதன் மூலம் கருவுறும் தன்மை அதிகம் உள்ள நாட்கள் கண்டறியப்படுகின்றன.
- உங்கள் மாதவிடாய் காலத்திற்குப் பிறகு, உங்கள் கர்ப்பப்பை வாயில் அதிக பசை இருக்காது; அது வறண்டிருக்கும்.
- முட்டை முதிர்ச்சியடையும்போது, கர்ப்பப்பை வாயில் பசை அதிகரிக்கும். அப்போது அது வெள்ளையாகவோ, மஞ்சளாகவோ தோன்றும். தோற்றத்தில் திடமாகவும், ஒட்டும் தன்மையுடனும் இருக்கும்.
- அண்டவிடுப்பு அல்லது கருமுட்டை வெளியாவதற்கு சற்று முன்னர், உங்கள் கர்ப்பப்பை வாயின் பசை அதிக அளவில் இருக்கும். அது ஒரு பச்சை முட்டையின் வெள்ளைக்கரு போல தெளிவாகவும், வழுக்கும் தன்மையோடும் இருக்கும். இதைச் சில நேரம் வெளியில் இழுக்கலாம். இந்த நாட்களில் தான் மிகவும் அதிகமான கருவுறும் தன்மையுடன் இருக்கிறீர்கள். இவை ஈரமான நாட்கள் என்று அழைக்கப்படுகின்றன.
- ஈரமான நாட்களுக்கு நான்கு நாட்களுக்குப் பிறகு, பசையின் அளவு குறைந்து மீண்டும் திடமாகவும், ஒட்டும் தன்மையுடனும் மாறிவிடும். இவை உலர் நாட்கள் என்று அழைக்கப்படுகின்றன.
இந்த மாற்றங்களைக் கவனித்து ஒரு காலண்டரில் 'ஒட்டும் நாட்கள்', 'வறண்ட நாட்கள்' அல்லது 'ஈரமான நாட்கள்' என்றும் நாட்களுக்குப் பெயரிடவும். கீழ்வரும் நாட்கள்தான் நீங்கள் மிகவும் அதிகமான கருவுறும் தன்மையுடன் இருக்கின்ற நாட்களாகும்:
- உங்கள் மாதவிடாய் காலத்திற்குப் பிறகு, நீங்கள் ஈரப்பதத்தை உணரும் முதல் நாள்
- ஈரப்பதம் தொடங்கும் முன்பாக உள்ள ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள்
அடிப்படை உடல் வெப்பநிலை முறை: நீங்கள் காலையில் விழித்தவுடன் உள்ள உடல் வெப்பநிலை அடிப்படை உடல் வெப்பநிலை என்று கூறப்படுகிறது. அண்டவிடுப்பு அல்லது கருமுட்டை வெளியாகும் போது, உங்கள் அடிப்படை உடல் வெப்பநிலை சற்றே உயரும். இந்த உடல் வெப்பநிலையை பல மாதங்களுக்குத் தினமும் பதிவு செய்வதன் மூலம், உங்களுக்கு கருவுறும் தன்மை அதிகமாக உள்ள நாட்களைக் கணக்கிடலாம்.
கருவுறும் தன்மை அதிகமாக உள்ள நாட்களை மிகவும் துல்லியமாகக் கணக்கிட, மேற்கண்ட மூன்று முறைகளையும் ஒன்றாகச் சேர்த்துப் பயன்படுத்தவும்.
English | Tamil | Hindi | Telugu | Bengali | Marathi |
0 reviews