Sorry, you need to enable JavaScript to visit this website.
Search
Not a member? Register here
Share this Article
X
 When will the Pregnancy Test be Positive

எப்போது கர்ப்பம் அறியும் பரிசோதனை நேர்மறையாக இருக்கும்?

(0 reviews)

நீங்கள் காத்திருந்த தருணம் இறுதியாக வந்துவிட்டது என வைத்துக்கொள்வோம். இந்த மகிழ்ச்சியான செய்தியை உங்கள் அருகில் உள்ளவர்களுடனும், உறவினர்களுடனும் பகிர்ந்துகொள்ள இன்னும் ஒரு படி தான் இருக்கிறது. உங்கள் மாதவிடாய் நின்றுவிட்டாலோ, கர்ப்பமாகிவிட்டதாக ஊகித்தாலோ, அதை உறுதிப்படுத்திக்கொள்ள கர்ப்பம் அறியும் பரிசோதனையை நீங்கள் மேற்கொள்ளலாம்.

Tuesday, November 28th, 2017

கர்ப்பம் அறிவதற்கான பரிசோதனை எவ்வாறு வேலை செய்கிறது?

ஒரு கருவுற்ற முட்டையானது கருப்பை சுவருடன் இணைந்தவுடன், மனிதர்களுக்கான கோரியானிக் கோனாடோட்ரோபின் (ஹெச்.சி.ஜி) ஹார்மோன் உடலில் சுரக்கிறது. இந்த ஹெச்.சி.ஜி-யை கருத்தரித்தவரின் இரத்தத்திலும் சிறுநீரகத்திலும் வெறும் 10 நாட்களுக்குள் கண்டறிய முடியும். இரத்தம் அல்லது சிறுநீரில் ஹெச்.சி.ஜி இருப்பதை கர்ப்பம் அறியும் பரிசோதனை காண்பித்து விடுகிறது.

கர்ப்பம் அறியும் இரத்தப் பரிசோதனை

இதுதான் கர்ப்பத்தை உறுதிப்படுத்த மருத்துவரால் அதிகமாக மேற்கொள்ளப்படுகிறது. இதன் முடிவுகளைப் பெறுவதற்கு, சில மணி நேரம் முதல் ஒரு நாள் வரை ஆகும். இரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு அவை சோதிக்கப்படும்போது, இரத்தத்தில் உள்ள சிறிய அளவிலான ஹெச்.சி.ஜி-யை இந்தப் பரிசோதனை மூலம் எளிதாக கண்டறிய முடிகிறது.

கர்ப்ப சிறுநீர் பரிசோதனை

நீங்கள் காலையில் எழுந்தவுடன் ஹெச்.சி.ஜி-யின் செறிவு மிகவும் அதிகபட்சமாக இருப்பதால், அந்த நேரத்தில் கர்ப்ப சிறுநீர் பரிசோதனையை செய்ய முயற்சி செய்யுங்கள்.

இது 1 அல்லது 2 நிமிடங்களில் ஹெச்.சி.ஜி-யை கண்டுபிடிப்பதற்கான- எளிதாக வீட்டில் செய்யப்படும் கர்ப்ப பரிசோதனை ஆகும். நீங்கள் எந்த உதவிப் பெட்டியைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்து சிறிது மாறலாம். ஆனால், அனவை எல்லாம் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான் இருக்கும். சோதனைக்குப் பயன்படுத்தப்படும் பல்வேறு முறைகள்:

  • சிறுநீர் கழிக்கும்போது அந்த நீரோட்டத்தில் ஒரு சோதனைக் குச்சியை வைத்திருத்தல் (அல்லது)
  • ஒரு தனியான பாத்திரத்தில் சிறுநீரைச் சேகரித்து, பின்னர் சோதனைக் குச்சியைக்  அதற்குள் வைத்தல் (அல்லது)

ஒரு கோப்பையில் சிறுநீரைச் சேகரித்து, பிறகு ஒரு உறிஞ்சுவானில் ஒரு துளி  சிறுநீரை எடுத்து, அதை இரசாயனப் பட்டையில் இடுதல்

இந்த படிநிலைக்குப் பிறகு, வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தலின்படி, சில நிமிடங்கள் காத்திருங்கள், பின்னர் டிஸ்பிளேயை சோதியுங்கள். அந்த டிஸ்பிளேயில் ஒரு கோடோ அல்லது ஒரு கூட்டல் குறியோ தோன்றினால், அது நீங்கள் கர்ப்பமாக இருப்பதை அறிவிக்கும் நேர்மறையான சோதனை முடிவைக் குறிக்கிறது.

உங்களுக்கு மாதவிடாய் தவறிப்போன முதல் நாளிலேயே, வீட்டில் செய்யும் இந்த கர்ப்ப பரிசோதனையை மேற்கொள்ளலாம்.

  • இரத்தத்தில் உள்ள ஹெச்.சி.ஜி-யின் அளவு அதிகமாக இருக்கும்போது மட்டுமே சிறுநீர் கர்ப்ப பரிசோதனை நேர்மறையாக அமைகிறது. கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில், ஹெச்.சி.ஜி-யின் அளவு குறைவாக இருக்கும்போது, இந்தப் பரிசோதனை எதிர்மறை முடிவைக் காட்டக் கூடும்.
  • சிலநேரங்களில், ஒரு பெண்ணுக்கு கருச்சிதைவு, கருக்கலைவு அல்லது இடம் மாறிய கர்ப்பம் ஏற்பட்டிருந்தாலும், இந்தச் சோதனை நேர்மறையான முடிவைக் காட்டக் கூடும்.
English | Tamil | Hindi | Telugu | Bengali | Marathi

Read more

Join My First 1000 Days Club

It all starts here. Expert nutrition advice for you and your baby along the first 1000 days.

  • Learn about nutrition at your own paceLearn about nutrition at your own pace
  • toolTry our tailored practical tools
  • Enjoy member only benefits and offersEnjoy member only benefits

Let's start this!

Related Content
Article Reviews

0 reviews

Still haven't found
what you are looking for?

Try our new smart question engine. We'll always have something for you.