கருத்தரிக்கும் முன்பான மருத்துவச் சந்திப்பால் உண்டாகும் நன்மைகளை அறியுங்கள்
கருத்தரிக்கும் முன்பான மருத்துவச் சந்திப்பால் உண்டாகும் நன்மைகளில் சில இங்கு கொடுக்கப்பட்டுள்ளன:
- கர்ப்பிணியாவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது.
- நீங்கள் ஆரோக்கியமான கர்ப்பம் மற்றும் ஆரோக்கியமான குழந்தையைப் பெற உதவுகிறது.
- நீங்கள் பிறப்புக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் ஏதேனும் எடுத்துக் கொண்டிருந்தால், அதை எப்போது நிறுத்துவது என்பதற்கு உங்களுக்கு வழிகாட்டுகிறது.
- சில வாழ்க்கை முறைத் தேர்வுகளான குடிப்பழக்கம், புகைப்பிடிக்கும் பழக்கம் ஆகியவையும், அல்லது உங்களுக்கு இருக்கும் சில மருத்துவ நிலைமைகளும், நீங்கள் கர்ப்பிணி ஆவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கலாம். கருத்தரிக்கும் முன்பான மருத்துவச் சந்திப்பால், இவற்றால் வரும் பிரச்சனைகளைக் கட்டுக்குள் வைப்பதன் மூலம், உங்களுக்கும், உங்கள் குழந்தைக்கும் சுகாதாரப் பிரச்சனைகள் வராமல் தடுக்க முடியும்.
நீங்கள் கர்ப்பம் தரிக்கும் முன்பாக குறைந்தது 3 மாதங்களுக்கு முன்னரே, இந்த மருத்துவச் சந்திப்பிற்குத் திட்டமிட வேண்டும். தாய்மைக்கான உங்கள் பயணத்தில், எல்லாவற்றையும் படம்பிடித்து வைக்கும் பொருட்டு, நீங்கள் ஒரு கர்ப்ப நாட்குறிப்பை எழுத ஆரம்பிக்கலாம்.
கருத்தரிக்கும் முன்பான மருத்துவச் சந்திப்பின் போது நீங்கள் மருத்துவரிடம் கேட்கவேண்டிய விஷயங்கள்
கர்ப்பிணியாவதற்கு முன்பே நீங்கள் செய்ய வேண்டிய அனைத்து விஷயங்களையும் உங்கள் மருத்துவர் குறிப்பிடுவார் என்றபோதிலும், கீழே தரப்பட்டுள்ள பட்டியல் நீங்கள் எதையும் தவறவிட்டுவிடாமல் இருக்க உதவும்.
கருத்தரிக்கும் முன்பான மருத்துவச் சந்திப்பின் போது, பின்வரும் விஷயங்களைப் பற்றி உங்கள் மருத்துவரிடம் விவாதிக்கவும்:
- உங்கள் குடும்பத்திலோ அல்லது உங்கள் கணவரது குடும்பத்திலோ ஏற்கனவே இருந்துவரும் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சினைகள்
- நீங்கள் எப்போது ஃபோலிக் அமிலத்தை எடுப்பது?
- நீங்கள் கர்ப்பத்திற்கு முன்னர் ஏதாவது தடுப்பூசிகள் போடவேண்டுமா?
- நீங்கள் எடுக்க வேண்டிய அவசியமான பேப் (PAP) சோதனை போன்ற பரிசோதனைகள்
- நீரிழிவு, தைராய்டு நோய், உயர் இரத்த அழுத்தம், உடல் பருமன் போன்ற உடல்நலப் பிரச்சனைகளை நிர்வகித்தல்.
- நீங்களாகப் பயன்படுத்துகின்ற மருந்துகள், மருந்துவர் பரிந்துரைத்த மருந்துகள் மற்றும் இணை உணவுகள்
- ஆரோக்கியமான எடையை அடைவதற்கான வழிகள்
- ஆரோக்கியமான உணவுத் தேர்வுகள் மற்றும் உடல் ரீதியாகச் சுறுசுறுப்பாக இருத்தல்
- உங்கள் பற்கள் மற்றும் ஈறுகளில் கவனம் செலுத்தும் வழிகள்
- மன அழுத்தத்தை குறைக்கும் வழிகள், புகைபிடிப்பதை தவிர்த்தல், மது அருந்தும் பழக்கத்தை விட்டுவிடல் மற்றும் பிற நோய்களைத் தவிர்க்கும் வழிமுறைகள்
- குறைப்பிரசவக் குழந்தையின் விவரம் உட்பட, முன்பு உங்களுக்குப் பிறந்துள்ள அனைத்து குழந்தைகள் பற்றிய விவரங்கள்
- ஹெச்.ஐ.வி உட்ளிட்ட பால்வினை நோய்களைக் கண்டறியும் பரிசோதனைகள்
இந்த விஷயங்களைக் கவனத்தில் எடுத்துக்கொண்டு, கருத்தரிக்கும் முன்பான மருத்துவச் சந்திப்பிற்காக உங்கள் மருத்துவரிடம் செல்வது, நீங்கள் அவருடன் முழுமையாக விவாதிக்க உதவுகிறது. இதனால் எந்தப் பிரச்சனையையும் மறந்துவிடாமல் நீங்கள் அவருடன் பேச முடியும்.
English | Tamil | Hindi | Telugu | Bengali | Marathi |
0 reviews