செயற்கையாகத் தூண்டப்படும் பிரசவ வலி ஏன்?
பிரசவத் தேதி கடந்துபோய், குழந்தைக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உருவானால், தூண்டப்படும் பிரசவ வலியை உண்டாக்கும் சூழல் பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில், இந்த நிலையில் நஞ்சுக்கொடி பலவீனமாகி, குழந்தைக்கு போதுமான ஆக்ஸிஜனையும், போதுமான ஊட்டச்சத்துக்களையும் வழங்காது. சில சமயம், நஞ்சுக்கொடி இயங்காமலும் போகக்கூடும்.
தூண்டப்படும் பிரசவ வலியை உண்டாக்கப் பல வழிகள் உள்ளன:
சவ்வு நீக்கம்: ஒரு சவ்வு நீக்கம் அல்லது சவ்வு விலக்கல் முறை மூலம் பிரசவ வலி தூண்டப்படுகிறது. குறிப்பாக, முதல் கர்ப்பம் தரித்த தாய்மார்களுக்கு பிரசவ வலி தாமதம் ஆகும்போது, இந்த முறை கையாளப்படுகிறது. இம்முறையில், கருவைச் சுற்றியுள்ள சவ்வு நீக்கப்பட்டு பிரசவ வலி செயற்கையாக தூண்டப்படுகிறது. தூண்டப்படும் பிரசவ வலிக்கான மிகச்சிறந்த வழிமுறை இதுவே ஆகும்.
செயற்கையான சவ்வுக் கிழிப்பு முறை: இதன் பொருள் 'பனிக்குடத்தை உடைத்தல்’ என்பதாகும். பனிக் குடத்தின் சவ்வை கிழிப்பதன் மூலம் இது செய்யப்படுகிறது. சில மருத்துவச் சூழல்களில், வேறு முறைகள் ஒத்துவராவிட்டால் வலியைத் துரிதப்படுத்த இந்த வகையான தூண்டுதலே மேற்கொள்ளப்படுகிறது. பனிக்குடத்தை உடைப்பதால், கருவில் உள்ள சிசுவிற்கு நோய்த்தொற்று ஏற்படும் ஆபத்து அதிகமாக இருப்பதால், பெரும்பாலான மருத்துவர்கள் இந்த முறையை விரும்புவதில்லை. இந்த தூண்டுதல் முறையை மற்ற தூண்டுதல் முறைகளோடு சேர்த்துப் பயன்படுத்தும்போது நல்ல பலன்கள் கிடைக்கின்றன.
புரோஸ்டாகிளாண்டின்: இதில் வாய்வழியாக ஒரு மாத்திரை கொடுக்கப்படும்அல்லது யோனிக்குள் ஒரு பசைப் பொருள் செலுத்தப்படும். இந்தப் பொருள் கருப்பை வாயின் சுவர்களை இளக்கிவிடுகிறது. இந்த முறையைத் தனியாகவோ அல்லது ஆக்ஸிடாசின் முறையுடன் இணைத்தோ பயன்படுத்தப்படும்.
ஸிங்டோசினான்: இது ஆக்சிடோஸின் ஹார்மோனின் செயற்கையான வடிவமாகும். மேலே குறிப்பிடப்படுள்ள முறைகள் தோல்வியடையும் பட்சத்தில், இது சிறிய மருந்தளவுகளில் கொடுக்கப்படுகிறது. இதில் மற்ற முறைகளைக் காட்டிலும் பல குறைபாடுகள் உள்ளன. மற்ற முறைகள் ஒருவேளை வேலை செய்யவில்லை என்றால், மருத்துவர் ஸிங்டோசினான் முறைக்கு மாற்றாக சிஸேரியன் முறையையே தேர்வு செய்கிறார். ஏனெனில், ஸிங்டோசினான் முறை வயிற்றில் கடுமையான சுருக்கங்களை உண்டாக்கி, குழந்தை மீது மோசமான அழுத்தங்களை ஏற்படுத்திவிடுகிறது.
எந்தவொரு முடிவையும் எடுக்கும் முன்பாக உங்கள் மருத்துவரை அணுகுவதே எப்போதும் நல்லது. உங்களுக்கு எது சிறந்தது என்று கூறுவதற்கான அனுபவம் அவருக்கு இருக்கிறது. ஆக மொத்தத்தில், அமைதியாகவும், நம்பிக்கையோடும் இருந்து உங்கள் குழந்தையை இந்த உலகத்திற்கு வரவேற்பதற்கு மகிழ்ச்சியுடன் காத்திருங்கள்.
English | Tamil | Hindi | Telugu | Bengali | Marathi |
0 reviews