நீங்கள் உங்களுக்காகவும், உங்கள் குழந்தைக்காகவும் என்ன சாப்பிட வேண்டும் – மற்றும் ஏன்?
சத்துப்பொருள்
ஃபோலிக் அமிலம் (அல்லது ஃபோலேட்)
உங்களுக்கும் உங்கள் கருவில் வளரும் குழந்தைக்கும் இது எதனால் தேவை?
நீங்கள் கர்ப்பமாகத் திட்டமிட்டாலோ அல்லது கர்ப்பமாக இருந்தாலோ ஃபோலிக் அமிலத்தை சற்று அதிகமாக உட்கொள்ள வேண்டும். கர்ப்பத்தின் ஆரம்ப கட்டத்தில் உங்கள் குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு ஃபோலிக் அமிலம் அவசியம் தேவை. இது உங்கள் குட்டிச் சிசுவின் நரம்பு மண்டல வளர்ச்சிக்கு குறிப்பாக உதவும் ஒரு முக்கிய வைட்டமின் ஆகும்.
இதை உட்கொள்வதால் நீங்கள்…
• ஸ்பைனா பிஃபைடா போன்ற நரம்புக்குழாய் சார்ந்த பிறப்புக் குறைபாடுகளைக் தடுக்கலாம். இந்த நோய் வந்தால், அது குழந்தையின் முதுகெலும்பை முழுமையாக இணையச் செய்யாமல் அதில் குறைபாட்டை ஏற்படுத்திவிடும். அதனால், குழந்தைக்கு பல கடுமையான உடல் ஊனங்கள் ஏற்படலாம்.
எந்த அளவு இதை உட்கொள்ள வேண்டும்?
இணை உணவின் மூலம் பெறும் ஃபோலேட் நாளொன்றுக்கு 600 மைக்ரோகிராம் தேவைப்படுகிறது.
இயற்கையாகவே ஃபோலேட் கொண்ட உணவுகளைச் (ஃபோலிக் அமிலத்திற்கான உணவு ஆதாரங்கள்) சாப்பிடுவதன் மூலம் இதனை அடையமுடியும். உங்களுக்கும், உங்கள் குழந்தைக்கும் என்ன உணவுகள் தேவை என்பது பற்றிய சந்தேகங்கள் இருந்தால், உங்கள் மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து நிபுணருடன் ஆலோசிக்கவும்.
நீங்கள் உட்கொள்ள வேண்டிய உணவுகள்
- ரொட்டி (ஆஸ்திரேலியாவில் தயாரிக்கப்படும் பெரும்பாலான ரொட்டி வகைகளில் ஃபோலேட் சேர்க்கப்படுகிறது);
- ஆரஞ்சு;
- பச்சை இலைகளைக் கொண்ட காய்கறிகள்
- ஃபோலேட் செறிவூட்டப்பட்ட தானியங்கள்;
- ஃபோலேட் சேர்க்கப்பட்ட பழச்சாறுகள்;
- பயறு வகைகள்;
- கொட்டை வகைகள்;
- ஈஸ்ட் பொருட்கள் (எ.கா. வெஜிமைட்)
சில குறிப்புகள்
• கறிகளை அதிகப்படியாக சமைக்கும்போது, அதில் உள்ள ஃபோலிக் அமிலம் அழிந்துவிடும் அல்லது அதன் அளவு குறைந்துவிடும்
English | Tamil | Hindi | Telugu | Bengali | Marathi |
0 reviews