நீங்கள் உங்களுக்காகவும், உங்கள் குழந்தைக்காகவும் என்ன சாப்பிட வேண்டும் - ஏன்?
சத்துப்பொருள்
அத்தியாவசியமான கொழுப்பு அமிலங்கள்
உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் அது ஏன் தேவை?
'நல்ல கொழுப்பு' எனப்படும் DHA, ஒரு ஒமேகா -3 கொழுப்பு அமிலம் ஆகும். ARA ஒரு ஒமேகா-6 கொழுப்பு அமிலம் ஆகும். இவை உங்கள் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு முக்கியப் பங்களிக்கும் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் ஆகும். உங்கள் உடல் மூலம் குழந்தைக்கு போதுமான அமிலங்களை உருவாக்க முடியாது என்பதால், நீங்கள் உண்ணும் உணவு மூலம் அவற்றை வழங்க வேண்டும்.
இதை உண்பதால் கிடைக்கும் பலன்கள்
- உங்கள் குழந்தையின் மூளை உருவாகி வளர உதவுகின்றன (DHA மற்றும் ARA)
- உங்கள் குழந்தையின் கண் வளர்ச்சிக்கு உதவுகின்றன (DHA மற்றும் ARA)
எந்த அளவில் உட்கொள்ள வேண்டும்?
கர்ப்பகாலத்தில் ஒரு நாளுக்கு 115 மில்லிகிராம்
நீங்கள் உண்ண வேண்டிய உணவுகள்
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களைக் கொண்டுள்ள உணவுகள்:
- கொழுப்பு மீன் (கானாங்கெழுத்தி, மத்தி, சூரை, சால்மன் வகைகள்);
- கனோலா மற்றும் சோயா எண்ணெய்கள்;
- கனோலா அடிப்படையிலான மார்ஜரின்.
ஒமேகா-6 கொழுப்பு அமிலங்களைக் கொண்டுள்ள உணவுகள்:
- முட்டை;
- வெண்ணெய்;
- மாமிசக் கொழுப்புகள்;
- கொட்டைகள் மற்றும் விதைகள்;
- சோளம், சோயா, சூரியகாந்தி மற்றும் குங்குமப்பூ போன்ற தாவர எண்ணெய்கள்.
சில குறிப்புகள்
- சிறந்த ஒமேகா -6 / ஒமேகா -3 சமநிலையை உறுதி செய்வதற்கு, வாரம் ஒருமுறையோ, இருமுறையோ கொழுப்புள்ள மீன் சாப்பிடலாம்; உங்கள் சாலட்டுகளில் சேர்க்க தாவர எண்ணெய்கள் அல்லது கொட்டை வகை எண்ணெய்களைப் பயன்படுத்துங்கள்.
- மத்தி, கானாங்கெழுத்தி மற்றும் நெத்திலி போன்ற சிறிய, கொழுப்புமிக்க மீன்களைத் தேர்ந்தெடுங்கள். உங்கள் குழந்தைக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பாதரசத்தின் செறிவுகள் இவற்றில் குறைவாகவே இருக்கின்றன.
- உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் தேவையான ஊட்டச்சத்துக்களை உங்கள் உணவுமுறை வழங்கவில்லை என்ற சந்தேகங்கள் இருந்தால், ஊட்டச்சத்து நிபுணரிடம் கலந்தாலோசிக்கவும்.
English | Tamil | Hindi | Telugu | Bengali | Marathi |
0 reviews