Sorry, you need to enable JavaScript to visit this website.
Search
Not a member? Register here
Share this Article
X
Getting Pregnant with Overweight

அதிக உடல் எடையுடன் கர்ப்பிணி ஆவது

(0 reviews)

கர்ப்பமாவதைப் பற்றியோசிக்கும் அதேசமயம், உங்கள் அதிகமான உடல் எடையைப் பற்றி கவலைப்படுகிறீர்களா? அதிக உடல் எடை, நீங்கள் கர்ப்பம் ஆவதற்கான வாய்ப்புகளை பாதிக்கலாம். அதிக எடையுடன் (உடல் நிறை குறியீட்டெண் (பிஎம்ஐ) 25-க்கும் அதிகம்) இருப்பதால், உங்கள் அண்டவிடுப்பு அல்லது கருமுட்டை வெளியாவது தடைபட்டு, கருவுறும் தன்மை மோசமாகப் பாதிக்கப்படலாம்.

Tuesday, December 5th, 2017

அதிக எடையுடன் கர்ப்பமாவது கீழ்க்கண்ட வாய்ப்புகளுக்கு காரணமாகிவிடும்:

உடற்பயிற்சிகளின் மூலமும், முழு தானியங்கள், பால் மற்றும் பால் பொருட்கள், பருப்பு வகைகள், பழங்கள், காய்கறிகள் மற்றும் நல்ல கொழுப்புகள் போன்ற ஆரோக்கியமான உணவுகளை சிறிய அளவில் அடிக்கடி உண்பதன் மூலம் உங்கள் உடல் எடையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரலாம்.

  • கருச்சிதைவு
  • உயர் இரத்த அழுத்தம் அல்லது ப்ரீக்லாம்ப்ஸியா
  • கர்ப்பகால நீரிழிவு
  • குழந்தை இறந்து பிறத்தல்

நீங்கள் சாதாரண உடல் எடையுடன் கர்ப்பமாக இருந்தால், கர்ப்பகாலத்தில் 11.5 முதல் 16 கிலோ வரை எடை அதிகரிக்கலாம். அதிக எடையுடன் இருந்தால், கர்ப்பகாலத்தில் கூடுதலாக 7 முதல் 11.5 கிலோ வரை எடையை அதிகரிப்பது ஏற்கத்தக்கது.

உங்களுக்கு நீங்களே எப்படி உதவமுடியும்?

கர்ப்பத்திற்கு முன் அதிக எடை அல்லது பருமனாக இருப்பது, கவலைப்பட வேண்டிய விஷயம் என்றாலும், சரியான உடல் எடையைப் பெற நீங்கள் எடுக்கக்கூடிய சில படிகள் உள்ளன. உணவுக் கட்டுப்பாடு மற்றும் சரியான உடற்பயிற்சி முறைகள் மூலம் உங்கள் எடையை கட்டுக்குள் கொண்டுவர முடியும்.

உங்கள் ஆரோக்கியத்தையும் உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்க, நீங்கள் கர்ப்பமாவதற்கு முன்பு எடையைக் குறைப்பதே சிறந்த வழி. கர்ப்பத்திற்கு முன்னரே, ஒரு ஆரோக்கியமான எடையைப் பெறுவது, இயற்கையாகக் கருத்தரிக்கும் உங்கள் வாய்ப்புகளையும் அதிகரிக்கிறது.

English | Tamil | Hindi | Telugu | Bengali | Marathi

Read more

Join My First 1000 Days Club

It all starts here. Expert nutrition advice for you and your baby along the first 1000 days.

  • Learn about nutrition at your own paceLearn about nutrition at your own pace
  • toolTry our tailored practical tools
  • Enjoy member only benefits and offersEnjoy member only benefits

Let's start this!

Related Content
Article Reviews

0 reviews

Still haven't found
what you are looking for?

Try our new smart question engine. We'll always have something for you.