Sorry, you need to enable JavaScript to visit this website.
Search
Not a member? Register here
Share this Article
X
 Ovulation Calendar

அண்டவிடுப்பு காலண்டர்

(0 reviews)

நீங்கள் கர்ப்பமாக முயற்சி செய்யும்போது, எப்போது அதிக கருவுறும் தன்மையுடன் இருக்கிறீர்கள் என்பதைத் தெரிந்துகொள்வது முக்கியம்.

Wednesday, November 29th, 2017

இரண்டு மாதவிடாய் காலங்களின் மையப்பகுதியில், ஒவ்வொரு மாதமும் உங்கள் கருப்பை ஒரு முட்டையை வெளியிடும். இது அண்டவிடுப்பு அல்லது கருமுட்டை வெளியாதல் என்று அழைக்கப்படுகிறது.

பெரும்பாலான பெண்களுக்கு, அடுத்து எதிர்பார்க்கப்படும் மாதவிடாய் காலத்திற்கு 2 வாரங்களுக்கு முன்னதாக இந்த அண்டவிடுப்பு அல்லது கருமுட்டை வெளியாதல் நிகழ்கிறது. முட்டை வெளிவந்த பிறகு, உங்கள் கருப்பைப்பாதையில் சுமார் 24 மணிநேரத்திற்கு அது மிதந்துகொண்டிருக்கும். அப்போது அது உங்கள் கணவரின் விந்தணுக்களினால் கருத்தரிக்கப்படுவதற்கு தயார்நிலையில் இருக்கும். இந்த முட்டை மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட நாட்களுக்கு உங்கள் உடலில் உயிர்வாழும். அந்த நேரத்தில் உடலுறவு வைத்துக் கொள்வது, கர்ப்பமாவதற்கான உங்கள் வாய்ப்புகளை அதிகரிக்கும்.

அண்டவிடுப்பு காலண்டரை பராமரிப்பது, உங்களுக்குள் கருமுட்டை வெளியாவது எப்போது நிகழும் என்பதை கணக்கிடுவதற்கான எளிய வழிமுறையாகும்.

உங்கள் மாதவிடாய் சுழற்சிகள் ஒழுங்கற்றவையாக இருந்தால், அண்டவிடுப்பு கண்காணிப்பு முறைகளான அடித்தள உடல் வெப்பநிலையைக் கண்காணித்தல், கர்ப்பப்பை வாய் பசை முறை அல்லது அண்டவிடுப்பு கருவிகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி, உங்கள் அண்டவிடுப்புக் காலத்தை கணக்கிட்டுக் கொள்ளலாம்.

அண்டவிடுப்பு காலண்டரை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்?

  • உங்கள் மாதவிடாய் சுழற்சியை 8 முதல் 12 மாதங்களுக்கு ஒரு காலண்டரில் பதிவு செய்ய வேண்டும். இந்தப் பதிவு,  அடுத்து வரும் மாதங்களில் நீங்கள் அதிக கருவுறும் தன்மையுடன் இருக்கும் கால இடைவெளியை அறிந்துகொள்ள உதவுகிறது. இரத்தக் கசிவு உண்டாகும் முதல் நாளே, உங்கள் மாதவிடாய் சுழற்சியின் முதல் நாளாக கணக்கிடப்படுகிறது.
  • உங்கள் மாதவிடாய் சுழற்சியின் நீளம் மாதத்திற்கு மாதம் மாறக்கூடும் என்பதால், ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் நீடிக்கும் நாட்களின் எண்ணிக்கையை நீங்கள் கவனிக்க வேண்டும். சராசரியாக, மாதவிடாய்  28 நாட்களுக்கு ஒருமுறை நிகழும். ஆனால், அது  21 முதல் 35 நாட்களுக்கு ஒரு முறையாக மாறியும் நிகழலாம்.
  • உங்களின் குறுகிய மாதவிடாய் சுழற்சியின் மொத்த நாட்களிலிருந்து 18 -ஐ கழித்து விடுங்கள். அப்போது கிடைக்கும் புதிய எண்ணை உங்கள் அடுத்த மாதவிடாயின் முதல் நாளிலிருந்து கூட்டுங்கள். அப்போது வரும் தேதியை உங்கள் காலண்டரில் குறித்து வையுங்கள். அந்த தேதிதான் நீங்கள் கருவுறுவதற்கு வாய்ப்புள்ள முதல் நாளாகும்.
  • உங்களின் நீண்ட மாதவிடாய் சுழற்சியின் மொத்த நாட்களிலிருந்து 11-ஐ கழித்து விடுங்கள். கிடைக்கும் புதிய எண்ணை உங்கள் அடுத்த மாதவிடாயின் முதல் நாளிலிருந்து கூட்டுங்கள். அப்போது வரும் தேதியை உங்கள் காலண்டரில் குறித்து வையுங்கள். அந்த தேதிதான் நீங்கள் கருவுறுவதற்கு வாய்ப்புள்ள கடைசி நாளாகும்.
  • இந்த காலண்டர் முறையைப் பயன்படுத்தி கணக்கிடுகின்ற முதல் நாளுக்கும், கடைசி நாளுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில்தான் நீங்கள் மிக அதிகமான கருவுறும் தன்மையோடு இருக்கிறீர்கள்.

அண்டவிடுப்பு காலண்டர் முறையால் உண்டாகும் பயன்கள் என்னென்ன

  • இது குறைந்த செலவுள்ள, சிக்கல் இல்லாத எளிய முறையாகும். இதனால், ஒவ்வொரு மாதமும் நீங்கள் விலையுயர்ந்த பரிசோதனைக் குச்சிகளை வாங்கத் தேவையில்லை. வெப்பமானியும் உங்களுக்குத் தேவைப்படாது. இதனால், உங்கள் மும்முரமான வேலைகளுக்கு இடையில், உங்கள் கர்ப்பப்பை வாய் பசையைக் கண்காணித்து நேரத்தை வீணாக்கத் தேவையில்லை.

அண்டவிடுப்பு காலண்டர் முறையின் சிக்கல்கள் என்னென்ன ?

  • பல தேதிகள் மற்றும் நீண்ட மாதவிடாய் சுழற்சிகள் பற்றி எழுதிவப்பதால், அவற்றை நினைவில் கொள்வது சிக்கலாக இருக்கலாம்.
  • செலவே இல்லாத முறை என்றபோதும், அண்டவிடுப்பைக் கண்டறியும் கருவிகள் வழங்குவதைப் போன்று நம்பகமான தேதிகளை இது வழங்காமல் போகலாம்.
  • உங்கள் மாதவிடாய் சுழற்சிகள் எப்போதுமே ஒரே அளவில் சீராக இல்லாவிட்டால், காலண்டர் முறை பயனுள்ளதாக இருக்காது. உங்கள் மாதவிடாய் சுழற்சிகள் சில நேரங்களில் 45 முதல் 60 நாட்கள் வரை நீடித்தாலோ அல்லது சில நேரங்களில் மாதவிடாய் வராமல் இருந்தாலோ, கர்ப்பம் தரிப்பதற்காக பாலியல் தொடர்புகளை வைத்துக்கொள்ள வேண்டிய தேதிகளில் பெருத்த மாறுபாடுகள் காணப்படும். அப்போது இம்முறை நடைமுறைக்குரியதாக இருக்காது என்பதோடு, ஏமாற்றமளிப்பதாகவும் ஆகிவிடும்.
English | Tamil | Hindi | Telugu | Bengali | Marathi

Read more

Join My First 1000 Days Club

It all starts here. Expert nutrition advice for you and your baby along the first 1000 days.

  • Learn about nutrition at your own paceLearn about nutrition at your own pace
  • toolTry our tailored practical tools
  • Enjoy member only benefits and offersEnjoy member only benefits

Let's start this!

Related Content
Article Reviews

0 reviews

Still haven't found
what you are looking for?

Try our new smart question engine. We'll always have something for you.