Sorry, you need to enable JavaScript to visit this website.
Search
Not a member? Register here
Share this Article
X
Antenatal Care - When Should You See the Doctor

ஆரம்பகால கர்ப்ப பராமரிப்பு – நீங்கள் எப்போது மருத்துவரைப் பார்க்க வேண்டும்?

(0 reviews)

கர்ப்பத்திற்கான ஆரம்பகால அறிகுறிகள் தவறாக இருக்கலாம். நீங்கள் அப்போது எப்படி உணர்கிறீர்கள் என்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்று நினைத்தால்,  வீட்டில் செய்யப்படும் ஒன்று அல்லது இரண்டு கர்ப்ப பரிசோதனைகளைச் செய்து பாருங்கள். அப்போது அதன் முடிவு நேர்மறையாக இருந்தால், உங்கள் மருத்துவரை சந்தித்து அதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

Thursday, November 30th, 2017

வீட்டில் செய்யப்படும் கர்ப்ப பரிசோதனைகள்

வீட்டில் செய்யப்படும் கர்ப்ப பரிசோதனைகளுக்கான பொருட்கள் மருந்தகங்களில் கிடைக்கின்றன.  அவற்றைப் பயன்படுத்தி ஐந்தாறு நிமிடங்களில் நீங்கள் முடிவுகளைக் கண்டறியலாம்.

அவை எப்படி வேலை செய்கின்றன?

கருத்தரிப்புக்குப் பிறகு சுமார் 11 முதல் 14 நாட்களிலோ – அல்லது மாதவிடாய் தவறிய ஒருநாள் கழித்தோ - சிறுநீர்ப் பரிசோதனை செய்து, கர்ப்ப ஹார்மோன்களான ஹெச்.சி.ஜி. (மனித கோரியானிக் கோனாடோட்ரோபின்)  இருப்பதைக் கண்டறிய முடியும்.

வீட்டில் செய்யப்படும் பரிசோதனைகள் மூலம் துல்லியமான முடிவுகள் கிடைக்கின்றவா?

வீட்டில் செய்யப்படும் கர்ப்ப பரிசோதனைகள் மிகவும் துல்லியமானவை என்றாலும், சிலநேரங்களில் அவை தவறான முடிவைக் கொடுத்து விடுகின்றன. எனவே ஒருவாரம் கழித்து, மீண்டும் அதே சோதனையைச் செய்வதன் மூலம், இருமுறை நன்கு சோதிக்கலாம். உங்கள் சோதனை நேர்மறையான முடிவைக் கொடுத்தாலும் சரி, அல்லது உங்களுக்கு அந்த முடிவில் சந்தேகம் இருந்தாலும் சரி, உங்கள் மருத்துவரிடம் சென்று அவர் மூலம் பரிசோதித்து முடிவை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

அதிகத் துல்லியமான முடிவைப் பெறுவதற்கான உதவிக்குறிப்புகள்

• உங்கள் சோதனையை ஆரம்பித்துப் பின்தொடரும் முன்பாக, அதற்கான வழிகாட்டுதல்களைக் கவனமாகப் படியுங்கள்.

• சோதனைக்கு முன்பு அதிக நீரையோ, வேறு பானங்களையோ குடிக்காதீர்கள். அது உங்கள் ஹெச்.சி.ஜி அளவுகளை குறைத்துவிடும்..

• உங்கள் சிறுநீர் அதிக அடர்த்தியாக இருக்கும் காலைநேரத்தில், அதை முதலாவதாகச் சோதிக்கவும்.

• நீங்கள் எதிர்மறை முடிவைப் பெறும்போது, அந்த முடிவு உறுதியானதாக இல்லாவிட்டால், உங்கள் மருத்துவரைச் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யுங்கள். மருத்துவரால் நடத்தப்படும் கர்ப்ப சோதனை, வீட்டில் செய்யப்படும் கர்ப்ப பரிசோதனையை விடத் துல்லியமானதாக இருக்கும்.

என் சோதனை சாதகமான நேர்மறை முடிவைத் தருகிறது? அடுத்து என்ன செய்யவேண்டும்?

உங்கள் கர்ப்பத்தை உறுதிப்படுத்த மருத்துவரைச் சந்திப்பதும், அவர் பரிந்துரைக்கும் கர்ப்பம் சார்ந்த பரிசோதனைகளை மேற்கொள்வதற்கும் இது உகந்த நேரம்!

மருத்துவர் ஒரு இரத்த மாதிரியை எடுத்து, அதில் ஹெச்.சி.ஜி இருக்கிறதா என்று பரிசோதிப்பார். கருமுட்டை வெளியான பிறகு 11 முதல் 14 நாட்களில் இந்த ஹெச்.சி.ஜி-யைக் கண்டறிய முடியும். உங்கள் கர்ப்ப காலத்தைத் தீர்மானிக்க, இரத்தத்தில் இருக்கும் ஹெச்.சி.ஜி -யின் சரியான அளவையும் மருத்துவர் சோதித்துப் பார்ப்பார்.

மருத்துவர் சிறுநீர் பரிசோதனையையும் பரிந்துரைப்பார். இது நீங்கள் வீட்டில் பயன்படுத்தி இருக்கும் கர்ப்ப பரிசோதனையைப் போலவே இருக்கும். உங்கள் தேவைகளைப் பொறுத்து, மருத்துவர் உங்களுக்கு உணவுக் கட்டுப்பாடு சார்ந்த ஆலோசனையையும் வழங்கி, நீங்கள் உண்பதற்கு ஏற்ற உணவுப் பொருள்களையும் பரிந்துரைக்கலாம். கர்ப்பத்தின் ஆரம்பகாலப் பராமரிப்பு விஷயத்தில் எல்லாம் சரியாக இருக்கிறதா என்பதை உறுதிசெய்ய, கர்ப்பம் தொடர்பான வேறு சில சோதனைகளுக்கும் மருத்துவர் ஏற்பாடு செய்வார்.

சிக்கல்கள் ஏதும் இல்லாவிட்டால், கர்ப்பம் தரித்து 28 வாரங்கள் வரை 4 முதல் 6 வாரங்களுக்கு ஒரு முறையும், 36 வாரங்கள் வரை மாதம் இரண்டு முறையும், அதன் பின்னர் வாரம் ஒருமுறையோ அல்லது இரண்டு வாரங்களுக்கு ஒருமுறையோ நீங்கள் மருத்துவரைப் பார்க்க நேரிடும். இந்த சந்திப்புகளின் போது, மருத்துவர் உங்கள் எடை, இரத்த அழுத்தம் ஆகியவற்றைப் பதிவு செய்வதோடு, உங்கள் சிறுநீரையும் பரிசோதிப்பார். அத்துடன், குழந்தையின் வளர்ச்சியையும் சோதிப்பார். இந்த மருத்துவச் சந்திப்புகளின் போது, உங்களுக்கு உள்ள ஏதாவது சிக்கல்களோ கவலைகளோ இருந்தால், அவற்றைப் பற்றி தயங்காமல் மருத்துவரிடம் பேசவேண்டும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

அல்ட்ராசவுண்ட் ஸ்கேன்கள்

பெரும்பாலான பெண்களுக்கு முதல் அல்ட்ராசவுண்ட்  ஸ்கேன் 11 முதல் 13 வார கர்ப்பகாலத்தில்  எடுக்கப்படும். அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் உங்கள் கர்ப்பத்தின் இருப்பிடத்தை (கரு கர்ப்பப்பையில் உள்ளதா, விலகி உள்ளதா) தீர்மானிக்க உதவுகிறது. உங்கள் கர்ப்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட சிசுக்கள் வளர்ந்தாலும் அதை இதன் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ளலாம். இது சிசுவின் வளர்ச்சி அளவையும் (நம்பத்தகுந்த பிரசவ தேதியைக் கணக்கிட இது உதவும்) மற்றும் குழந்தையின் இதய துடிப்பையும் மதிப்பீடு செய்யப் பயன்படுகிறது. டவுன் ஸிண்ட்ரோமின் அறிகுறியாக கருதப்படும், குழந்தையின் பின் கழுத்தில் அதிக அளவு திரவம் சேர்ந்திருக்கும் நிலையையும் (நுச்சல் டிரான்ஸ்லுசென்ஸி) இந்த  ஸ்கேன் மூலம் கண்டறியலாம்.

கருத்தரித்த பின்னர் சுமார் 20 முதல் 22 வாரங்களில் எடுக்கப்படும் ஒரு விரிவான ஸ்கேன் மூலம் சிசுவின் உடலமைப்பில் ஏற்பட்டிருக்கும் கட்டமைப்பு பிரச்சினைகளைக் கண்டறிய முடியும். மூளை, இதயம், கைகள், கால்கள் மற்றும் பிற உறுப்புகளில் ஏற்பட்டிருக்கும் அதீதமான பிறப்புக் கோளாறுகளையும் இந்தக் கட்டத்தில் கண்டறியலாம்.

பிற சோதனைகள்

ஆபத்தான சிக்கல்களில் இருக்கும் பெண்களுக்கு சில குறிப்பான சோதனைகள் தேவைப்படலாம். உங்களுடனான இந்த பரிசோதனைகளைப் பற்றி மகப்பேறு மருத்துவர் உங்களுடன் விவாதிப்பார். உதாரணமாக, சிலருக்கு நீரிழிவுக்கான சோதனை தேவைப்படலாம். உங்களுக்கு நீரிழிவு வருவதற்கான அதிக ஆபத்து இருப்பதாகக் கருதினால், வாய்வழி குளுக்கோஸ் சகிப்புச் சோதனை உங்களுக்குத் தேவைப்படும். இந்த சோதனைக்கு முன்பாக இரவு முழுவதும் எதுவும் சாப்பிடக் கூடாது. உங்கள் இரத்த சர்க்கரையின் அளவைப் பரிசோதிக்க காலையில் வெறும் வயிறாக இருக்கும்போது ஒரு இரத்த மாதிரி எடுத்துக்கொள்ளப்படும். பின்னர், நீங்கள் ஒரு குளுக்கோஸ் அடங்கிய பானத்தைக் குடித்தபிறகு, ஒன்று அல்லது இரண்டு மணிநேரம் கழித்து, மீண்டும் ஒரு இரத்த மாதிரி எடுத்துக்கொள்ளப்படும்.

சில பாக்டீரியாக்கள் இருப்பதற்கான வாய்ப்பைக் கண்டறிய, ஒரு வஜைனல் ஸ்வாப் சோதனை செய்யப்படலாம். குழு B ஸ்ட்ரெப்டோகோகஸ் என்ற பாக்டீரியா, குழந்தைக்கு தீங்கு விளைவிக்கக்கூடியது என்பதால் இச்சோதனை மூலம் அதை முன்பே கண்டறிவதன் மூலம், பிரசவ வலியின் போது அந்த பாக்டீரியாக்களுக்கான நோயெதிர்ப்பு மருந்துகளை உங்களுக்கு பரிந்துரைப்பது எளிதாக இருக்கும்.

ஒவ்வொரு கர்ப்பிணித் தாயும் தனித்துவமான குணாதிசயங்களையும், தேவைகளையும் கொண்டிருப்பார். ஒவ்வொரு கர்ப்பமும் வேறுபட்டது என்பதால், எல்லாப் பெண்களுக்கும் ஒரே வகையான மருத்துவ நெறிமுறை என்று ஏதும் கிடையாது. உங்களுக்கான கர்ப்பத்துக்குப் பிறகான பராமரிப்பு, உங்கள் தோழிக்கான கர்ப்பத்துக்குப் பிறகான பராமரிப்பிலிருந்து வேறுபட்டதாக இருக்கலாம். உங்கள் ஆரோக்கியம், கர்ப்பம் மற்றும் பிரசவம் பற்றிய தகவல்களை கேட்டறிய, அடிக்கடி மருத்துவச் சந்திப்புகளுக்கு ஏற்பாடு செய்து கொள்ளுங்கள்.

உங்கள் மருத்துவச் சந்திப்பிற்கான 3 உதவிக்குறிப்புகள்

உங்களுடைய மருத்துவச் சந்திப்பானது, கர்ப்பத்தை உறுதிப்படுத்தவும், வழக்கமான சோதனைகளைச் செய்து உங்கள் குழந்தை ஒரு நல்ல துவக்கத்தில் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகவும் மட்டும் இல்லை. இது உங்களுக்குள் எழும் பல சந்தேகங்கள் பற்றிய மருத்துவரிடம் கேள்விகளைக் கேட்டு, உங்கள் தலையில் சுழன்று கொண்டிருக்கும் குழப்பங்களில் இருந்து விடுபடுவதற்கான ஒரு வாய்ப்பும் ஆகும். இந்த எளிய உதவிக்குறிப்புகளைப் பின்பற்றுவதன் மூலம், உங்கள் மருத்துவருடன் நீங்கள் செலவிடும் நேரத்தைப் பயனுள்ளதாக ஆக்கிக்கொள்ளுங்கள்.

1. தயாராக இருங்கள்

உங்கள் சோதனைகளும், ஸ்கேன்களும் முடிந்ததும் நீங்கள் வேறு நிபுணர்களிடம் மருத்துவச் சந்திப்புக்கு நேரம் வாங்கியிருந்தால், அந்தச் சோதனை முடிவுகளையும் உங்களுடன் கொண்டு செல்லுங்கள். நிறைய கேள்விகளைக் கேட்டு, பதில்களை ஒரு தாளில் குறித்துக்கொள்ள மறக்காதீர்கள். அதிலும், நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்பதை முதலில் கண்டுபிடிக்கும் போது உங்களுக்கு நிறைய  கேள்விகள் வரும். அவற்றுக்கான பதில்களை எழுதிக் கொள்வது, பிறகு அவற்றை மறந்துவிடாமல் நினைவில் வைத்துக்கொள்ள உதவும்.

2. முன்னெச்சரிக்கையுடன் இருங்கள்

மருத்துவரிடம் ஆலோசிக்க விரும்பும் பிரச்சினைகள் பற்றிய ஒரு பட்டியலை, அவற்றுக்கான முன்னுரிமை அடிப்படையில் தயார் செய்யுங்கள். உங்கள் பிரச்சனைகளை மருத்துவரிடம் கூறப் பயப்படாதீர்கள். உங்கள் மருத்துவரிடம் உங்களது எல்லாப் பிரச்சனைகளையும் பற்றிக் கலந்துரையாடுவது நல்லது. ஏனெனில் மிகச் சிறிய விஷயங்கள் கூட,  உங்கள் ஆரோக்கியத்திற்கு முக்கியமான பாதிப்புகளை ஏற்படுத்திவிடக் கூடும்.

3. உங்கள் மொபைல் தொலைபேசியை அணைத்து விடுங்கள். அப்போதுதான் உங்கள் கவனம் சிதறாமல் இருக்கும்.

English | Tamil | Hindi | Telugu | Bengali | Marathi

Read more

Join My First 1000 Days Club

It all starts here. Expert nutrition advice for you and your baby along the first 1000 days.

  • Learn about nutrition at your own paceLearn about nutrition at your own pace
  • toolTry our tailored practical tools
  • Enjoy member only benefits and offersEnjoy member only benefits

Let's start this!

Related Content
Article Reviews

0 reviews

Still haven't found
what you are looking for?

Try our new smart question engine. We'll always have something for you.