18 வார கர்ப்பம்
உங்கள் சிசு இப்போது தன் கை, கால்களை நகர்த்துகிறது
உங்கள் சிசுவின் நீளம் இப்போது 14 செ.மீ ஆகவும், அதன் எடை கிட்டத்தட்ட 140 கிராமாகவும் இருக்கிறது. இப்போது அது தன் கைகளையும் கால்களையும் நகர்த்துகிறது. அத்தகைய இயக்கங்கள் அடுத்து வரும் வாரங்களில் இன்னும் கவனிக்கத் தக்கவையாக ஆகின்றன. சிசுவின் சிறிய இரத்த நாளங்கள் அதன் மெல்லிய தோல் வழியாக வெளியே தெரிகின்றன. அதன் காதுகள் இன்னும் தலையிலிருந்து கொஞ்சம் விலகியே நிற்கிறது. நரம்புகளின் வளர்ச்சியும் இப்போது தொடங்குகிறது. பிறந்த பின்பும் ஒரு சில வருடங்களுக்கு இந்தச் செயல்பாடு தொடரும்.
19 வார கர்ப்பம்
உங்கள் குழந்தையின் மனித உரு இன்னும் முழுமையாகிறது.
உங்கள் சிசு இப்போது 225 கிராம் எடையும், 15 செ.மீ நீளமும் கொண்டதாகவே இருக்கும். அதன் கைகளும் கால்களும் இப்போது உடல் வளர்ச்சிக்கு ஏற்ற விகிதத்தில் வளர்கின்றன. உச்சந்தலையில் இப்போது முடி வளர ஆரம்பிக்கிறது.
குழந்தை கர்ப்பகாலம் முழுக்க அம்னியோடிக் திரவத்தில் இருக்கிறது. அத்துடன், சேதத்திலிருந்து அதன் சருமத்தை பாதுகாக்கும் பொருட்டு, வெர்னிக்ஸ் காசோஸா என்றழைக்கப்படும் ஒரு பாதுகாப்பு மெழுகுப் பூச்சும் அதன் உடல் முழுவதும் உருவாகிறது. தலையின் தசைகளும் இப்போது சுறுசுறுப்பாக ஆகிவிடுகின்றன. முதன்முறையாக உங்கள் குழந்தையின் இயக்கங்களை இப்போது உணர ஆரம்பிக்கலாம். விரைவுணர்வு எனப்படும் ஒருவித சிறகடிக்கும் தன்மையையும் இப்போது நீங்கள் உணரலாம்.
20 வார கர்ப்பம்
நீங்களும் உங்கள் குழந்தையும் ஒருவருக்கொருவர் பழக்கமாகிறீர்கள்.
உங்கள் குழந்தை சுமார் 280 கிராம் எடையும், தலையில் இருந்து பாதம் வரை சுமார் 16 சென்டிமீட்டர் நீளமும் கொண்டதாக ஆகிறது. உங்கள் சிசு இன்னும் அதிக சுறுசுறுப்பாக ஆவதால், முன்பு உணர்ந்த மென்மையான அசைவுகளுக்குப் பதிலாக, இப்போது அதிக சுறுசுறுப்பான உதைகளையும் துள்ளல்களையும் நீங்கள் உணரலாம். உங்கள் குழந்தையின் அசைவுகள், உங்கள் இயக்கத்தின் ஒத்திசைவுக்கு ஏற்ப அமைவதை இப்போது நீங்கள் கவனிக்கலாம்.
21 வார கர்ப்பம்
உங்கள் குழந்தையின் செரிமான அமைப்பு இப்பொழுது சோதித்துப் பார்க்கப்படுகிறது.
உங்கள் குழந்தை இப்பொழுது 310 கிராம் எடையும், 17.5 சென்டிமீட்டர் நீளமும் கொண்டதாக இருக்கிறது. இந்த நாட்களில் குழந்தை அதிக அளவிலான அம்னியோடிக் திரவத்தை விழுங்குகிறது அதன் செரிமான அமைப்புக்கு அது நன்மை பயக்கிறது. செரிமானத்திற்கு பிறகு, அம்னியோடிக் திரவம் மெகோனியம் எனப்படும் ஒரு கருப்பு நிற ஒட்டும் பொருளாக மாறுகிறது. இது குடற்பகுதியில் சேர்ந்து, பிரசவத்தின் போதோ அல்லது பிறந்த உடனேயோ வெளியேறுகிறது.
22 வார கர்ப்பம்
நன்கு கவனியுங்கள்! உங்கள் குழந்தை இப்போது நீங்கள் சொல்வதை எல்லாம் கேட்கிறது!
இந்த கட்டத்தில், உங்கள் குழந்தையின் உதடுகள், கண் இமைகள் மற்றும் புருவங்கள் மேலும் தனித்துவம் கொண்டவையாக மாறுகின்றன. 20 சென்டிமீட்டர் நீளமும், 450 கிராம் எடையும் கொண்டிருக்கும் உங்கள் சிசு, புதிதாகப் பிறந்த குழந்தை போல் காட்சியளிக்கத் தொடங்குகிறது. அதன் கண்கள், கண் இமைகள் மற்றும் புருவங்கள் மேலும் தனித்தன்மையுடன் காணப்படுகின்றன, கணையம் போன்ற உறுப்புகளும் உறுதியுடன் வளர்கின்றன. உங்கள் குழந்தையால் இப்போது உரத்த ஒலியைக் கேட்க முடிகிறது. உங்கள் கருப்பையை விட்டு வெளியேறி, உலகத்திற்குள் நுழைவதற்கு அது தயாராகிறது. இப்போது அதனால் உங்கள் இயக்கங்களையும் உணர முடிகிறது. அதன் மூளையில் வாசனை, சுவை, ஒலி, பார்வை மற்றும் தொடுதல் ஆகிய மையங்கள் வளர ஆரம்பிக்கின்றன.
English | Tamil | Hindi | Telugu | Bengali | Marathi |
0 reviews